கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

திமுக வெற்றியை தடுக்க வில்லன்கள் சதி - சேலம் பிரமாண்ட கூட்டத்தில் கருணாநிதி பேச்சு





சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் 01.04.2011 அன்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
திமுக இப்போது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு எமர்ஜென்சியை சந்திக்கிறது. நெருக்கடி நிலை மீண்டும் திரும்பி வந்தது போன்ற ஒரு சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.
மதுரை மாநகரில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு இருக்கும் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சாதாரண மனிதர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அரசையோ, அரசைச் சார்ந்திருப்பவர்களிடமோ பாதுகாப்பு தர வேண்டும் என்று விண்ணப்பித்தால், இன்னாருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று விண்ணப்பித்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தருவதில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது.
ஆனால், மத்திய அமைச்சர் அழகிரிக்கு தந்திருந்த போலீஸ் பாதுகாப்பு நேற்றில் இருந்து அறவே விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அதிகாரிகளை நான் கேட்கிறேன்? உங்களுக்கு இத்தகைய உத்தரவிட்டது யார்? நூறு பேர் கூட இல்லாத கூட்டத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்கு இருக்கிறார்கள்.
ஆனால், இங்கு எத்தனை ஆயிரம் பேர் கூடியிருக்கிறார்கள். எத்தகைய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையெல்லாவற்றையும் பார்த்து எதிர்கட்சிக்காரர் போல பேச வேண்டியது இருக்கிறது. போலீஸ் அதிகாரிகள்தான் இத்தகைய நிலையை தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நெருக்கடி, அடக்குமுறை எங்களுக்கு புதியது அல்ல. எங்களை வாழவைத்தவை. நிலையாக தமிழ் மண்ணில் நிலை நிறுத்தியவை. இப்போது திமுகவை வீழ்த்த எதிர்கட்சிகள் எல்லா வழிகளையு ம் கையாள்கிறார்கள். இன்று கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளார்கள். பத்திரிகை உலகின் ஜாம்பவான்கள், சிங்கங்கள் என்று பெயர்பெற்றவர்கள் கடந்த தேர்தலில் 2 பேர் கூட திமுகவில் வெற்றிபெற மாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால், அதற்கு மாறாக திமுக&காங்கிரஸ் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்பதை இப்போது நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
எண்ணிப்பார்க்க வேண்டும்.
இப்போதும் அப்படித்தான் தேர்தல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளார்கள். திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று கருத்து கணிப்பாளர்களை விட்டு எழுத சொல்கிறார்கள். அவர்களை நுண்ணிய நிலையில் உணர்ந்து பார்த்தேன். யார் யாரெல்லாம் இப்படி கருத்து கணிப்புகளை எந்த நிலையில் வெளியிட்டார்கள் என்பதை தேர்தல் முடிந்த பிறகு வெளியிட தயாராக இருக்கிறேன்.
தேர்தலில் நிற்கும் எதிர்கட்சி தலைவர்கள், திமுக கூட்டணிகள் பற்றி நம்பிக்கையின்மையை உருவாக்க வேண்டும். அதற்கான ஆட்களை பிடித்து நம்மீது கொண்டுள்ள அசூயை காரணமாக இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த கருத்துக்கணிப்புகளை எல்லாம் தமிழக மக்கள் பொய்யாக்குவார்கள் என்பது நிச்சயம்.
நாம், அடித்தட்டு மக்களுக்காகவும் சாக்கடையில் புரளும் சாதாரண மக்களுக்காக திட்டம் நிறைவேற்றுவோம், உயர்ந்து உயர்ந்து உப்பரிகைகளில் வாழும் சீமான்களுக்கு வாழ்வழிக்க மாட்டோம். எனவே, மக்களிடம் பெற்றுள்ள நம்பிக்கையை வீழ்த்த அவர்கள் பஞ்சாங்கம் பார்க்கிறார்கள். அத்தகைய ஜோசியம், கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பெண்ணுக்கும், இந்த பையனுக்கும் திருமணம் நடந்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்காது என்று அய்யர் சொல்லி, திருமணத்தை நிறுத்திவிடுவார். அதுபோல தேர்தல் கருத்து கணிப்பும் உள்ளது. அது போன்ற ஜோசியங்களை நம்ப வேண்டாம். நம்ப வேண்டாம், நம்பி மோசம்போகவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் தேர்தலை சந்திப்பது எப்படி என்றால் நாங்கள் செய்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் என்ன சொல்லி வாக்கு கேட்கிறார்கள் தெரியுமா. இந்த கருணாநிதி யார் தெரியுமா. ஒரு காலத்தில் திருவாரூரில் இருந்து ஓசி ரயில் ஏறி சென்னைக்கு வந்தவர் என்று விமர்சித்து பேசுகிறார்கள்.
ஏதோ நான் ஓசி ரயிலில் வந்தது போலவும், நான் பயணம் செய்த ரயிலில் பக்கத்து கம்பார்ட் மெண்டில் அந்த அம்மையார் இருந்தது போலவும் பிரசாரம் செய்கிறார். இது என்ன நாகரிகம். இதற்கு பதிலுக்கு பதில் பேசவேண்டும் என்றால் நான் வேண்டாம், எனது இயக்கத்தில் உள்ள ஒரு தொண்டன் போதும்.
ஒரு தனிமனிதனை பற்றி பேசுவது முறையல்ல என்பதை அண்ணா பெரியார் ஆகியோரிடம் கற்றுக் கொண்டேன். அதனால் நானும் அவர்களைப் போல அந்த நிலைக்கு வர விரும்பவில்லை. சேலம் வந்தால் அந்த நகரின் பெருமைகள் என்ன, புகழ் என்ன அந்த நகருக்கு தேவையான கோரிக்கை என்ன அதை நிறைவேற்றும் வழி முறைகள் என்ன என்று உங்களோடு அமர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். இதுதான் அரசியல் முறை.
நான் இன்று இங்கு வந்திருக்கமாட்டேன். காரணம், எனது மூத்த மகன் மு.க.முத்து கடுமையான நிலையில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைப்பது கேள்விக்குறி என்ற நிலையில் உள்ளார் என்று தெரியவந்தது. இருப்பினும் எனது மனதை திடப்படுத்திக் கொண்டேன். உங்களை விட எனது குடும்பம் ஒன்றும் பெரிதல்ல என்று உங்களை தேடி வந்துள்ளேன். அதனால் நான் சொல்லும் வார்த்தைகளை நெஞ்சில் நிறுத்தி வைத்து அதன்படி நடக்க வேண்டும்.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவின் நல்ல திட்டங்களை நாசமாக்கிவிடுவார்கள். நலத்திட்டங்கள் நிறுத்தப்படும். இப்படி நிறுத்தும் ஆட்சி வரவேண்டுமா, சத்துணவு திட்டத்தில் முட்டைகளை சேர்த்து வழங்கினோம். அதிமுக ஆட்சிக்கு வந்து முட்டை வழங்கியதை நிறுத்தியது. மீண்டும் நாங்கள் ஆட்சிககு வந்து வாரத்துக்கு 5 முட்டையும் வாழைப்பழத்தையும் வழங்கி வருகிறோம்.
நாங்கள் 2006ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று வர்ணித்தோம். இப்போது அறிவித்த தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்று கூறுகிறோம். கதாநாயகன், கதாநாயகி இருந்தால் வில்லன் வேண்டாமா? அதற்கு தான் அவர்கள் வில்லன்களாக வந்துள்ளனர். கழக வெற்றியை தடுக்க ஏதேதோ சதி செய்கிறார்கள். எனக்கே பயமாக உள்ளது. இவர்களை எதிர்த்து சட்ட மன்றத்தில் பேசினால் என் கன்னம் என்னாகுமோ, என் தலை என்னாகுமோ என்ற அச்சம் உள்ளது. அரசியல் நாகரிகம் அந்த அளவுக்கு நாசமாகிவிட்டது. இதற்கும் அதிகாரிகள் உடன் படுகிறார்கள்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

கருணாநிதியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் - கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சு :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய தாவது:
இந்த தேர்தல், யார் எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதற்காக அல்ல; யார் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழகத்தின் அடுத்த முதல்வராக சமத்துவப் பெரியார் கருணாநிதிதான் வர வேண்டும் என்று கூறுகின்றன. நம்மை எதிர்க்கும் கூட்டணியில் இருப்பவர்கள், யார் அடுத்த முதல்வர் என்ற வினாவுக்கு விடை சொல்ல முடியுமா
ஒரே மேடையில் நிற்கவே அவர்களிடம் தெம்பு இல்லை; திராணி இல்லை. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அடுத்த முதல்வர் ஜெயலலிதாதான் என்று சொல்ல விஜயகாந்த்துக்கு துணிச்சல் இருக்கிறதா?
அனைத்து தகுதிகளையும் பெற்ற ஒரே தலைவர் கருணாநிதி. அவர்தான் முதல்வராக வர வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளும், பாமகவும் எந்தவித நிபந்தனையுமின்றி அவரை 6&வது முறையாக முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர வைப்போம். கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதி செய்த சாதனைகள் ஏராளம்.
சட்டசபையில் விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுகிறார் என்றார் ஜெயலலிதா. அதற்கு விஜயகாந்த், அவர் என்ன ஊற்றிக்கொடுத்தாரா? என பதிலடி கொடுத்தார். இன்று அவர்கள் ஓரணியில் இருந்தாலும், ஒரே மேடையில் இருக்க முடியவில்லை.
வேட்பாளரை அடித்தது பற்றி கேட்டால், என்னிடம் அடி வாங்குபவர்கள் மகாராஜா ஆகி விடுவார்கள் என்கிறார். அப்படி என்றால் அவர் தன்னைத்தானே அடித்துக் கொள்ள வேண்டியதுதானே? தன்னை கருப்பு எம்ஜிஆர் என விஜயகாந்த் கூறி வருகிறார். ஜெயலலிதாவுக்கு வெள்ளை எம்ஜிஆரையே பிடிக்காது. அவர் எப்படி கருப்பு எம்ஜிஆரை ஏற்பார். அதனால்தான் அவருக்கு ஆப்பு வைத்துவிட்டார்.
ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கி ஒட்டுமொத்த குடும்பத்தையும் பசிப்பிணியில் இருந்து காப்பாற்றியவர் கருணாநிதி. இப்போது 35 கிலோ அரிசி வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் பசிப்பிணியை போக்கி, திருவாரூர் சோழராக கலைஞர் விளங்குகிறார்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு
பேசியது:
வருகிற சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தல். முதல்வர் கலைஞர் 5 முறை முதல்வராக மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே தான் 6வது முறையாக முதல்வராக வேண்டும் என்று கூறுகிறோம்.
காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் நிறுத்தப் பட்ட நிலையில், மீண்டும் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து வாரத்திற்கு 5 முட்டை வழங்கினார் கலைஞர். இத்திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய ஆட்சியின் அச்சாணியாக விளங்குகிறார் கலைஞர். தமிழக சட்டமன்ற கட்டடத்தை திறந்து வைக்க அன்னை சோனியாவையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் அழைத்தார். அப்போது பேசிய அன்னை சோனியா, ‘பிரச்னை வந்தால் நான் திரும்பி பார்ப்பது தமிழக முதல்வரை தான். தொலைப்பேசியில் ஆலோசனை கேட்பேன்‘ என கலைஞருக்கு பெருமை சேர்த்தார். 14 வயது முதல் 87 வயது வரையிலும் அல்லும் பகலும் உழைக்கும் தலைவர் கலைஞர். அவரது பின்னால் ஓரணியில் நிற்கிறோம். நீங்கள் தான் முதல்வர் என்று தமிழக மக்களும் உங்கள் பின்னால் நிற்கிறார்கள்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத் தோம். சேலம் உருக்காலைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுக்கொடுத்தோம். சேலத்திற்கு சிறப்பு மருத்துவமனையை கொண்டு வந்தோம். இதுபோல எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளோம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பிரதமரை ஒரு முறை கூட பார்க்கவில்லை. ஆனால் தமிழகத்தில் 40 இடங்களில் வெற்றி பெற்றவுடன், தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து கொடுத்தார் கலைஞர். தமிழகத்தை ஆழும் தகுதி கலைஞரை தவிர வேறுயாருக்கும் இல்லை. நீங்கள் முதல்வர் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். நம் கூட்டணி, மகத்தான மக்கள் கூட்டணி. புதிய வரலாறு படைப்போம். மே 13ம்தேதி உன்னத முதல்வராக நீங்கள் வருவீர்கள்.

இவ்வாறு தங்கபாலு பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி பேசியது:
தமிழக முதல்வராக கலைஞரும், சேலம் மாவட்டத்திற்கு அமைச்சராக வீரபாண்டி ஆறுமுகமும் வருகிறார்களோ? அப்போதெல்லாம் தமிழகத்தில் சேலம் முன்னோடி மாவட்டமாக வளர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் முன்னோடி மாவட்டமாக சாதனை படைத்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழகம், மாவட்டத்தில் பட்டி, தொட்டியெல்லாம் காவிரி கூட்டுகுடிநீர், தொழில்நுட்ப பூங்கா, சரபங்காநதி பாசன திட்டம், தொடர் வண்டி, சிறப்பு மருத்துவமனை என ஏராளமான திட்டங்கள் வந்துள்ளன. இவ்வாறு சாதனை களை சொல்லிக்கொண்ட போகலாம்.கடந்த தேர்தலில் கலைஞர் சொன்னதையும் செய்தார், சொல்லாததையும் செய்தார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச டிவி, 7 ஆயிரம் கோடி விவசாயகடன்தள்ளுபடி என அனைத்தையும் செய்துள்ளார்.
டி.வி. இல்லாதவர்களுக்கு மட்டும் இலவச டிவி என்பதை, ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் டிவி வழங்க வேண்டும் என உத்தர விட்டவர் கலைஞர். சொல்லாததையும் செய்தவர் கலைஞர்.இது யார் முதல்வர் என்பதை நிர்ணயிக்கிற தேர்தல். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி களையும் வீரபாண்டியார் தலைமையில் வெற்றி பெற வேண்டும். இன்னும் 10 நாட்கள் தான் உள்ளன. எனவே கூட்டணி கட்சியினர் தேனீக்களை போல உழைக்க வேண்டும். து£க்கணாங்குருவி கூடு கட்டுவது போல, கரையான் புற்றை எழுப்புவது போல, கலைஞர் ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். 11 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று, கலைஞர் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் பேசியதாவது:
இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் முதலிடத்தில் வைத்துள்ள கலைஞர் 6வது முறையாக முதல்வராக வேண்டும். இந்திய துணைகண்டத்திலே எந்த முதல்வரும் செய்யாத அளவில் 5 ஆண்டுகளில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தந்துள்ளார். இந்த ஆட்சியில் பயன்அடையவில்லை என யாரும் சொல்ல முடியாத அளவில், கட்சி பாகுபாடின்றி, ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் பயன் அடையும் வகையில் நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். எனவே தான் தமிழக மக்கள் எப்போது 13ம்தேதி வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தலைவர் கலைஞர் வழங்கியுள்ள தேர்தல் அறிக்கை ஒரு மினி பட்ஜெட்டாக தந்துள்ளார். எதிர்முகாமில் இருப்பவர்கள் கூட வியந்துபோயுள்ளனர். அவர்களே கலைஞர் ஆட்சிக்கு வரவேண்டும் என எண்ணுகிறார்கள். இந்த தேர்தலில் 234 தொகுதியிலும் நாம் வெற்றி பெறப்போவது நிச்சயம். ஆனால் நமது இலக்கு, எதிர் முகாமில் இருப்பவர்கள் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும். அதற்கான அனைவரும் இரவு, பகல் பாராமல் உழைத்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் காந்திசெல்வன் பேசினார்.

No comments:

Post a Comment