கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம்னு ஐ.நா சபையே சொல்லியிருக்கு - நடிகர் வடிவேலு


‘இந்தியாவிலேயே தமிழகம் தான் சிறந்த மாநிலம்னு ஐநா சபையே சொல்லியிருக்கு’ என்று கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் வடிவேலு பேசி னார்.
குமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு 01.04.2011 அன்று பிரசாரம் செய்தார். கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சுரேஷ்ராஜனை ஆதரித்து கன்னியாகுமரி அலங்காரமாத ஆலயம் முன்பு நடிகர் வடிவேலு பிரசாரத்தை துவக்கி பேசியதாவது:
தினமும் என்ன பாத்து நீங்க ரசிச்சிருப்பீங்க, சிரிச்சிருப்பீங்க, சிரிச்சு பலருக்கு வாயில நுரை தள்ளியிருக்கும். உங்களை எல்லாம் பாப்பேன்னு நான் நினைச்சு பாக்கல. ஐயா கலைஞரு அந்த வாய்ப்பை எனக்கு தந்திருக்காரு, உங்கள்ல ஒருத்தனா மக்களோடு மக் களா வந்திருக்கேன். அடி மட்ட ஏழையா இருந்தவன் நான், இப்போ கொஞ்சம் ஒசந்திருக்கேன்.
எனக்கு வாழ்க்கையில் உள்ள எல்லா கஷ்டம் நஷ்டங்களும் தெரியும். பாமர ஏழைகளுக்கு தமிழக முதல் வர் கடந்த அஞ்சு வருசமாக நெறைய திட்டங்களை செஞ்சிருக்காரு.
ஏழை பணக்காரன்னு மழை பார்க்கிறதில்லை, அதேமாரி கலைஞரோட திட்டமும் எல்லா மக்களுக் கும் போய் சேர்ந்திருக்கு. இப்பவும் புதுபுதுசா திட்டங்களை அறிவிக்கிறார்.
கறுப்பு எம்ஜிஆருன்னும் சொல்லி வருவாங்க, கேப்டன்னும் சொல்வாங்க, அவங்கெல்லாம், இப் போதும் சித்த பிரம்மை பிடிச்சு அலையுறாங்க. கலை ஞர் எல்லாருக்கும் எல்லா திட்டத்தையும் செஞ்சிருக்காரு, மீனவர்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்திருக்காரு. 45 நாட்கள் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டாங்க. பாவம் அந்த தொழிலாளிகள் கஷ்டபடுவாங்கனுட்டு 45 நாளுக்கும் உதவித்தொகை கொடுத்திருக்காரு, டீசல் மானியமா கொடுத்திருக்காரு, மண்ணெண்ணெய மானியமாக கொடுத்திருக்காரு.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சி பெயரை வைக்கணும் என்று பல ஆண்டா கோரிக்கை வைச் சாங்க. டாக்டர் ஐயாதான் மத்திய அரசுக்கிட்ட பேசி, சோனியா அம்மா கிட்ட பேசி அந்த பெயரை வைக்க வச்சாங்க.
அவர்தான்ஆறாவது முறையாகவும் முதலமைச் சரா உக்கார வைக்கணும். அதற்கு சுரேஷ்ராஜனுக்கு உதயசூரியன் சின்னத்துல பட்டன அழுத்தணும். அப்படி பட்டன அழுத்தினா மிக்சி வரும், கிரைண்டர் வரும், இலவச அரிசி கிடைக்கும், வீட்டில் உள்ள பெருசுங்களுக்கு 750 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.
தண்ணீரில் மிதக்கிறவன் கேப்டன், எந்த நேரமும் தண்ணீல மிதக்கறவன்கேட்பன் அல்ல. நீங்க ஓட்டுக்களை பாத்துப்போடுங்க, ஓட்டுக்களை மாத்தி போட்டு ஓட்டையாக்கிடாதீங்க.
கர்ப்பத்தில் இருக்கிற குழந்தைக்கு கூட மாசம் மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். இந்தியாவிலேயே தமிழகம் தான் சிறந்த மாநிலம்னு ஐநா சபையே சொல்லியிருக்கு. அதனால வரும் தேர்தலில் நீங்க எல்லாரும் திமுவிற்கு ஓட்டு போட்டு 6 வது முறையாக கலைஞர முதல்வராக்கணும்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment