பிரசாரத்திற்காக ஈரோடு வந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு பெருந்துறையில் மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் தொண்டர்கள் பிர மாண்ட வரவேற்பு அளித்தனர்.
ஈரோடு மாவட்ட ஜன நாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோட்டில் தேர்தல் பிரசார கூட்டம் 31.03.2011 அன்று இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவையில் இருந்து கார் மூலம் ஈரோடு வந்த திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதிக்கு ஈரோடு மாவட்ட திமுக மற் றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் பெருந்துறை யில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட் டது.
பெருந்துறை நால்ரோட் டில் திமுக மாவட்ட செய லாளர் ராஜா, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட் பாளர் சு.முத்துசாமி, கொங்கு நாடு முன்னேற்றக்கழகத்தின் பெருந்துறை வேட்பாளர் கே.கே.சி.பாலு, ஈரோடு மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஜீவாசுப்பிரமணியம், திமுக மாவட்ட துணை செயலாளர்கள் விஸ்வநாதன், செல்லபொன்னிமனோகரன்.
ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முரு கேஷ், மாநில மகளிர் அணி இணை செயலாளர் காயத்தரி சீனிவாசன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ராதாருக் மணி, ஜானகி, பவானி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பவானிசேகர், நகரமன்ற தலைவர் காசிபாளை யம் சுப்பிரமணியம்.
சூரம்பட்டி லோகநாதன், வீரப்பன்சத்திரம் மல்லிகாநடராஜன், பெரியசேமூர் காட்டுசுப்பு, ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கோகிலவாணிமணிராசு, ஒன்றிய செயலாளர்கள் பெருந்துறை கே.பி.சாமி, பவானி நல்லசிவம், ஈரோடு குமாரசாமி, பவானி நகரமன்ற கவுன்சிலர் காமராஜ், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் பழனிச்சாமி, துணை அமைப்பாளர்கள் பாஸ்கரன், குமாரவடிவேல், அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பல்லகவுண்டன்பாளையம், விஜயமங்கலம், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை யின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் முதல்வர் கருணாநிதியை காண திரண்டிருந்தனர்.
கருமத்தம்பட்டியில் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு :
கோவை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க.கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி 30.03.2011 அன்று இரவு கோவையில் பேசினார். 31.03.2011 அன்று காலையில் ஈரோடு செல்லும் வழியில் கருமத்தம்பட்டியில் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நால்ரோட்டில் சூலூர் கொ.மு.க. வேட்ப £ளர் ஈஸ்வரனை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், ‘தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். எனவே இத்தொகுதி கொ.மு.க.வேட்பாளர் ஈஸ்வரனுக்கு வாக்களித்து அவரை சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள்’ என்றார். முதல்வர் கருணாநிதியை வேட்பாளர் ஈஸ்வரன், சூலூர் பேரூராட்சி தலைவர் பொன்முடி, ஒன்றிய குழு தலைவர் சன் ராஜேந்திரன், செயலாளர் ராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்றனர்.
கருணாநிதியிடம் ஆசிபெற்று அவிநாசி காங். வேட்பாளர் பிரச்சாரம் :
அவிநாசி தொகுதியில் (தனி) தி.மு.க. கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஆர். நடராஜன், 31.03.2011 அன்று அவிநாசி வந்த தமிழக முதல்வர் கலைஞருக்கு பொன் னாடை போர்த்தி நேரில் ஆசிபெற்றார். அப்போது காங்கிரசில் தனது பாரம்பரியம் பற்றியும், அவிநாசி தொ குதியில் தி.மு.க. கூட்டணிக் கட்சிக்கு உண்டான வெற்றிவாய்ப்பு பற்றியும் கூறினார்.தொடர்ந்து அவிநாசி புதிய பஸ்நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடை கடையாகச் சென்றும், பேருந்திற்காக காத்திருந்த பயணிகளிடத்திலும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு பிரச்சாரம் செய்தார். இதே போல அவிநாசி தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களில் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளை சந்தித்தும் ஆங்காங்கே பொதுமக்களை நேரில் சந்தித்தும் வாக்கு சேகரித்து வருகிறார். இதானால் கட்சித் தொண்டர்கள் ஆர்வத்துடன் தேர்தல் வேலைகளை செய்வதால் அவிநாசி தொகுதியில் தி.மு.க. கூட்டணிக் கட்சியினரின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

No comments:
Post a Comment