கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

தேர்தல் விதிமுறை என்ற பெயரில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா? சூழ்ச்சிக்கு இடம்தர மாட்டேன் - ஈரோட்டில் கருணாநிதி உறுதி




‘தேர்தல் விதிமுறைகள் என்ற பெயரில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா? அதிகாரிகள் அத்துமீறல் செய்வதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். தி.மு.க. கூட்டணியின் வெற்றியை தடுக்கும் சூழ்ச்சிக்கு இடம் தர மாட்டேன்’ என்று முதல்வர் கருணாநிதி உறுதி கூறினார்.
முதல்வர் கருணாநிதி 31.03.2011 அன்று ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
கடந்த ஒரு வார காலத்திற் கும் மேல் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு விட்டு இன்று குருகுலத்திற்கு வந்துள்ளேன். ஈரோடு நகர் தான் எனது குருகுலம் என்பதை நன்கு அறிவீர்கள். இங்கே பேசுவது என்றால் உடம்பு புல்லரிக்கும்; உள்ளம் பூரிக்கும்; நெஞ்சம் இனிக்கும்; தேகம் சுழலும்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசும் போது நீண்ட நேரம் பேச வேண்டும். அதனை கேட்க வேண்டும் என்று சொன்னார். நாளைய தினம் பத்திரிகைகளில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்& கருணாநிதி ஒரே மேடையில் என்று செய்தி வரும். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இந்த மேடையில் இன்று அமர்ந்திருக்கலாம். ஆனால், தந்தை பெரியார் காலத்தில் குருகுலத்தில் நான் இருந்த போது எனது மடியில் தவழ்ந்த பிள்ளை தான் அவர். காலையில் நான் வந்து இறங்கிய போது ஜெயித்து விடுவோம் என்றேன். பிள வுகளை உண்டாக்கி, பேதங் களை ஏற்படுத்தி, சூழ்ச்சி ஏற்படுத்தி வெற்றியை தடுக்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு கிஞ்சித்தும் வாய் ப்பு தர மாட்டேன். கருத்துக்கள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் நோக்கம் சரியாக இருந்து மார்க்கம் ஒன்றோடு ஒன்று மாறுபாடு கொண்டிருந்தால் குறிக்கோள் நிறைவேறாது. திராவிடர் இயக்கம் அரசியல் கட்சி யாக மாறி சந்தித்த போது முதலில் அதிக வெற்றியை பெற முடியவில்லை என்றா லும் பின்னர் பெருவாரியான வெற்றியை பெற்றது. இதற்கு காரணம் எந்த ஒரு தனிப்பட்ட நபரும் அல்ல. இதற்கு வித்திட்டவர்கள் பெரி யார், அண்ணா. பயன்களை எல்லாம் நாம் இன்று அனுபவித்து வருகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களுக்கு நாம் நன்றி
உள்ளவர்களாக இருக்க வேண்டும். நமக்கு வேண்டியவர்கள். வேண்டியதை கொடுத்தவர்களுக்கு, சமுதாயத்திற்காக உழைத்தவர்களுக்கு எப்படி நன்றி கூறு வது. திராவிடர் இயக் கம் உருவானதற்கு நாம் பெரியார், அண்ணாவிற்கு தான் நன்றி கூற வேண்டும். யாரும் இந்த இயக்கத்தை தொட்டு பார்க்க முடியாது. அழிக்க நினைத்தால் அழிந்து விடுவார்கள். திராவிடர் இயக்கத்திற்கு தோல்வியே இல்லை. வெற்றி பெற்றே தீருவோம். வெற்றி, தோல்விகள் இலட்சியத்திற்கு முத்திரை அல்ல. வெற்றி பெற வேண்டும் என்பதற்கான பாதைகள்.
ஒரு இயக்கத்தை உருவாக்குவது சாதாரண காரியம் அல்ல. ஈரோடு நகரில் முன்னர் இருந்த எத்தனையோ பேர் தற்போது இல்லை. அவர்கள் வளர்த்த ஆல விருட்சமாக தான் கழகம் இருக்கிறது. பெரியார் இல்லை. ஈ.வி.கே.எஸ் சம்பத் இல்லை. சந்தானம் இல்லை. ஈரோடு அப்பாவு இல்லை. அண்ணா இறந்த போது நீ தான் முதல்வராக ஆக வேண்டும் என்று கூறி சட்டமன்ற உறுப்பினர்களிடையே என்னை அழைத்து சென்று பேசிய சின்னசாமி இல்லை. ராஜூ இல்லை. அரங்கராஜ் இல்லை. மதர்சா இல்லை. பழைய கோட்டை அர்ஜூணன் இல்லை. விஸ்வநாதன் இல்லை. தவமணி ராஜன் இல்லை.
குடியரசு பத்திரிகை ஆரம்பித்த காலத்திலே என்னை தந்தை பெரியாரிடம் அழைத்து சென்று கரம்பிடித்து வைத்த கவிஞர் கருணாநந்தம் இன்று இல்லை. சண்முக வேலாயுதம் இன்று இல்லை. அவரது பேரன் என்று கூறி கொண்டு அவரது புகைப்படத்துடன் இன்று மாலை இளைஞர் ஒருவர் என்னை வந்து சந்தித்தார். பகுத்தறிவு பேழையாக ஈரோட்டு பாதை என்னும் புத்தகத்தை என்னிடம் வழங்கினார். இன்றைக்கு ஆட்சி பொறுப்பிலே இருக்கின்ற திராவிட கழகம் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி புரிகின்ற இதே சூழலில் உங்களை பார்த்து ஆதரவு தாருங்கள் என்று கேட்கிறேன்.
எதற்காக வசதியாக வாழ்வதற்காகவா இல்லை வாக்களித்தவர்களை வசதியாக்குவதற்காக. ஏழைகள், பரமஏழைகள், பாட்டாளிமக்கள், அன்றாடங்காய்ச்சி, அடித்தட்டு மக்கள் என அனைத்து தரப்பு மக்களையும் கொண்டது தான் திராவிடர் கழகம். இவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட இயக்கம் மாபெரும் இயக்கம். அதனோடு இந்திய தேசிய காங்கிரஸ், பாட்டாளிமக்கள் கட்சி, கொங்கு முன்னேற்ற கழகம் இவர்கள் இணைந்த கூட்டமைப்பாக திகழ்கிறது என்பதை நான் மறக்க மாட்டேன். நீங்களும் மறக்க கூடாது. 10 முதல் 15 கட்சிகளை கூட்டணியாக கொண்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் யாரை முதல் அமைச்சராக்க வேண்டும் என சொல்கிறார்கள். 5முறை முதல்அமைச்சராக பதவி வகித்து வந்த என்னை 6வது முறையாக முதல் அமைச்சராக அறிவித்துள்ளார்கள். பழக்கப்பட்ட மாட்டை வண்டியில் கட்டுவோம் என்பதற்கேற்ப 5 முறை முதல்வர் பொறுப்பை வகித்த என்னை 6வது முறையாக பதவியேற்க சொல்கிறார்கள்.
எதிரணியில் உள்ளவர்கள் யாரை முதல்அமைச்சர் என்று சொல்கிறார்கள். யாரை முதல் அமைச்சர் என்று சுட்டிகாட்டினாலும் மறுநாள் பத்திரிகையில் அடிதடி, ரகளை என்ற புகைப்படம் வரும். எதிரணியில் யாருடைய பெயரையும் சொல்லி நான் புண்படுத்த விரும்பவில்லை. மன்னிக்கவும் விளம்பரப்படுத்த விரும்ப வில்லை.
நான் முதல்அமைச்சரானால் வீட்டு வீட்டுக்கு அரிசி மூட்டைகளை கொண்டு வந்து அரிசி கொடுப்பேன். நான் முதல் அமைச்சரானால் எண்ணெய் கலயத்தை தூக்கி விட்டு வீட்டு வீட்டுக்கு ஊற்றுவேன் என்று சொன்னார். இப்போது யார் அந்த அணியில் முதல் அமைச்சர். இந்த அணியில் என்னை முதல்அமைச்சர் என்று சொல்கிறார்கள். அந்த அணியில்? அங்கே இருக்கின்ற 2 தலைவர்களில் ஒருவர் ஆண்தலைவர் மற்றொருவர் பெண்தலைவர் இவர்களில் யார் முதல் அமைச்சர் என்று இன்று வரை சொல்லவில்லை. ஒருவேளை நாளை கருணாநிதி சொல்லி விட்டாரே என்பதற்காக சொல்லலாம். நம்முடைய அணியில் நாம் உறுதியாக இருக்கிறோம். என்னை நம்புகிறவர்களை நான் நம்புகிறேன். அவர்கள் என்னை நம்புகிறார்கள். கடந்த கால ஆட்சியில் நான் சொன்னவற்றை செய்திருக்கிறேன்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் எங்களால் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்க முடியுமா என நானும் சந்தேகப்பட்டேன் என இங்கு பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார். இந்த திட்டம் எப்படி நிறைவேற்றப்பட்டது? இங்கு அமர்ந்துள்ள ஜி.கே. மணி போன்றவர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர், பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டு, எங்களுக்கு இந்த வகை டிவி பெட்டி வேண்டும் என விளம்பரப்படுத்தினோம். இதை பார்த்து உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் டிவி பெட்டி வழங்க முன்வந்தன. இந்த குழுவில் இடம்பெற செய்ய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்தோம். ஆனால், அவர்கள் யாரும் வரவில்லை. அதிமுக தவிர அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து யார் யார் விண்ணப்பித்துள்ளார்கள் என்பதை பரிசீலித்து கமிட்டி அனுமதி பெற்று, ஆர்டர் வழங்கி நாணயமான முறையில் டிவி பெட்டி வழங்கப்பட்டது. இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றியதால் கூட்டணி கட்சி தலைவர்கள் என்னை மேலும் நம்பினார்கள். நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு கடந்த கால வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை தீர்க்க முடியாமல் தாய்மார்கள் வாடுகிறார்கள் என்பதை உணர்ந்து, மருத்துவ துறையில் இன்னும் பல முன்னேற்றங்களை கொண்டுவர ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் அமைத்தோம். ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் காரில் சென்றபோது ரோட்டோரம் ஒரு சிறுவன் கந்தல் துணியை கட்டிக்கொண்டு நின்றதை பார்த்தார். காரை நிறுத்தி அச்சிறுவனை அழைத்து பேசினார். ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை என கேட்டார். அச்சிறுவன், எனது தாய், தந்தையிடம் பணம் இல்லை என்றான். உடனே காமராஜர், அருகில் இந்த சுந்தரவடிவேல் என்ற கல்வி அதிகாரியை அழைத்து, இந்த அவல நிலையை போக்கவேண்டுமானால் கிராமம்தோறும் ஆரம்ப கல்வி நிலையங்களை திறக்கவேண்டும் என உத்தரவிட்டார். அதன்விளைவாக ஆயிரக்கணக்கான ஆரம்ப கல்வி நிலையங்கள் உருவானது. ஆதிதிராவிட பிள்ளைகள், அக்ரஹார பிள்ளைகள் என எல்லோரும் ஒன்றாக அமர்ந்து படித்தார்கள். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள், காமராஜரை கல்விக்கண் திறந்த காமராஜர் என பாராட்டினார்.
ஒரு அரசின் திட்டத்தை, அடுத்து வரும் அரசு பின்பற்றினால்தான் அந்த திட்டம் வாழும். அடுத்து வந்த நாங்கள், மாணவர்களின் பசி, பட்டினியை தீர்க்க எடுத்த நடவடிக்கையை பின்பற்றி, சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கினோம். சத்துணவு திட்டத்தை ரத்து செய்யும் மட்டமான புத்தி, மட்டமான அறிவு திமுகவுக்கு இல்லை. அதனால், சத்துணவு திட்டத்தை நீட்டித்து, முட்டையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டோம். அடுத்து, 2 முட்டை, 3 முட்டை, 4 முட்டை என முட்டையோ முட்டை. இப்போது, வாரம் 5 முட்டை வழங்குகிறோம். சைவ பிள்ளைகளுக்கு வாழைப்பழம் வழங்கப்படுகிறது. ஆரம்ப கல்வி மட்டுமின்றி, மேற்படிப்பு, உயர்கல்வி என எத்தனையோ கல்லூரிகளை கொண்டுவந்துள்ளோம். ஆரம்ப பள்ளியில் துவங்கிய இந்த அறிவு, கல்வி வளர்ச்சியில் பிற மாநிலங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதற்கு திமுக அரசுதான் காரணம். இதை யாராவது மறுக்க முடியுமா?
இன்றைக்கு பத்திரிகையில் ஒரு செய்தி. தமிழகத்தில் தொழில் துறையை நசுக்கி விட்டார்கள், தொழில் திட்டங்கள் அறவே இல்லாமல் செய்துவிட்டார்கள், நான் வந்துதான் தொழில்துறையை காப்பாற்ற போகிறேன் என அந்த அம்மையார் கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டு காலங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் துவங்கப்பட்டுள்ளது. திமுக அரசு அமைந்த பிறகு அமெரிக்கா, கொரியா, ஜப்பான், இங்கிலாந்து என பல நாடுகளுக்கு சென்று, தமிழகத்தில் தொழில் துவங்க வரும்படி அவர்களை அழைத்துள்ளோம். வெளிநாட்டினரும் வந்து போட்டி போட்டு தொழில் துவங்கியுள்ளனர். ஆனால், தொழில்துறையை நசுக்கிவிட்டோம் என அந்த அம்மையார் பேசுகிறார். உங்கள் ஊரில் உள்ள அறிவாளிகள், அரசியல்வாதிகளை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். தொழில் வளர்ச்சியில் திமுக அரசின் சாதனையை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது எல்லா திட்டங்களையும் பொருத்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் தங்கள் பகுதிக்கு வாய்க்கால் வேண்டும், தார்ச்சாலை வேண்டும் கல்லூரி வேண்டும் என கேட்பார்கள். இவை அனைத்தையும் திமுக அரசு செய்துகொடுத்துள்ளது. சேலம் இரும்பாலை திட்டம் அப்போதைய பிரதமர் அன்னை இந்திராகாந்தியால் துவக்கிவைக்கப்பட்டது. அந்த திட்டத்தின் திறப்பு விழாவுக்கு நான் தலைமை தாங்கினேன். குறைவான அளவில்தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்ற சூழ்நிலை வந்தபோது அதை பெரிய அளவில் நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டோம். இதேபோல், தமிழ்நாட்டில் பல இரும்பாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை யாரும் மறுக்க முடியாது.
கடந்த ஐந்தாண்டில் நிறைய தொழிற்சாலைகள் வந்துவிட்டதால் மின்சார தேவையும் அதிகரித்துவிட்டது. மின்சார தட்டுப்பாட்டை நிறைவுசெய்ய மத்திய அரசுடன் தினமும் பேசி வருகிறோம். கூடங்குளம் அணு மின்நிலையம் இன்னும் உற்பத்தியை துவக்கவில்லை. நெய்வேலி அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி இன்னும் முடியவில்லை. இவை இரண்டும் பணியை முடித்து, உற்பத்தியை துவக்கினால் தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு தீரும். இன்னும் 10 ஆண்டில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே கணித்து மின்உற்பத்தியை துவக்க வேண்டும். இதை ஒரு நல்ல அரசால் மட்டுமே செய்ய முடியும். கடந்த ஆட்சி காலத்தில் புதிய மின்திட்டங்கள் துவக்கப்படவில்லை. கடந்த ஐந்தாண்டு கால திமுக அரசில் புதிய மின்திட்டங்கள் துவக்கியுள்ளோம். இவை, இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டு காலத்தில் நிறைவுபெற்று, போதும்.. போதும்.. என சொல்லும் அளவுக்கு நமக்கு மின்சாரம் கிடைக்கப்போகிறது. அப்படி கிடைக்கும்போது அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தால் இதை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று கூறுவார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்புதிய திட்டங்கள் மூலம் நமக்கு தேவைக்கு அதிகமான மின்சாரம் கிடைக்கத்தான் போகிறது. எனவே, மின்உற்பத்திக்கு யார் காரணம் என்பதை சிந்தித்து பாருங்கள். ஏமாந்து விடாதீர்கள்.
யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கு தொண்டு செய்வார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். கோபக்காரனால் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமா? அன்று சோனியாகாந்தியை பார்த்து பதிபக்தி இல்லாதவர் என்று கூறினார். சுயமரியாதை உள்ள எந்த தமிழனும் இதை அனுமதிக்கலாமா? மதிப்பும், மரியாதையும் உள்ள இந்திராகாந்தியின் மருமகள் சோனியாகாந்தி.
ஒரு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பவர்கள் மக்கள். தலைவன் அல்ல. தலைவனுக்கு தலைக்குள் இருக்க வேண்டியது இருக்கவேண்டும். அப்படியானால்தான் சிறப்பான ஆட்சியை வழங்க முடியும். நான் யாரை வேண்டுமானாலும் அடிப்பேன், யாரும் என்னை கேட்க முடியாது என்று கூற முடியுமா? நாளைக்கு சட்டமன்றத்துக்குள் சென்று சபாநாயகரையே அடித்துவிட்டு, என் கட்சியை சேர்ந்த சபாநாயகரை அடித்தேன் எனக்கூறினால் ஏற்க முடியுமா? எதிரியை அடிப்பது குற்றம். அடித்துவிட்டு என் நண்பனைத்தான் அடித்தேன் எனக்கூறலாமா? அப்படி கூறினால் யார்தான் ஏற்றுக்கொள்வார்கள். அப்படி நீங்கள் கூறினாலும் அதை சட்டம் அனுமதிக்காது.
இன்று, தமிழ்நாட்டில் சட்டம் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. மன்னிக்க வேண்டும். ஒரு முதலமைச்சராக இருந்துகொண்டு இந்த வார்த்தையை கூறுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். சந்தேகம் எழும் அளவுக்கு தமிழ்நாட்டில் தற்போதைய சூழல் உள்ளது. நெருக்கடி காலத்தில் அண்ணா சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்தவர்கள் யார் என்று அன்று பத்திரிகையில் செய்தி போட முடியாது. அப்படி செய்தி போட்டால் செய்தி போட்ட பத்திரிகையாளர்களும் மாட்டிக்கொள்வார்கள். அந்த காலத்திலும் நான் முரசொலியில் செய்தி வெளியிட்டேன். இன்று நிகழ்ச்சிக்கு வராதவர்கள் என அவர்களது பெயர்களை போட்டு செய்தி வெளியிட்டேன். எமர்ஜென்சி காலம் முடிந்த பிறகு சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இந்திராகாந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். எனக்கு தெரியாமல் கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளால் இவ்வளவு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அப்போது உணர்ந்து மன்னிப்பு கேட்டார். இன்று தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது. 10 ரூபாயை எடுத்துக்கொண்டு கடைக்கு போனால், வழியில் போலீஸ்காரர்கள் தடுத்து அதை எங்கே கொண்டு செல்கிறாய் என கேட்கிறார்கள். அடையாளம் தெரியாத, பெயர் சொல்லாத, விளம்பரம் இல்லாத ஒரு எமர்ஜென்சி தமிழகத்தில் நடக்கிறது. குறிப்பாக, திமுக கூட்டணியை உடைக்க பார்க்கிறார்கள். இதை நாங்கள் நிதானமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஒருமுறை நெருக்கடியால் ஆட்சி பறிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழன் உள்ளவரை, தமிழன் உள்ளத்தில் சுயமரியாதை உள்ளவரை நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
தி.மு.க. கூட்டணி சமூக நீதி கூட்டணி - கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு :

31.03.2011 அன்று இரவு நடந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக கூட்டணி சமூக நீதி கூட்டணி என்று கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர்.
தேர்தல் அறிக்கையை 100% நிறைவேற்றுவார் கருணாநிதி - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு :

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:
இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல் வர் கருணாநிதியோடு சேர்ந்து பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். கருணாநிதி மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையை வழங்கியுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொது தேர்தலில், வெளி யிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே நிறைவேற்றி முடித்தார். கடந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை இறுதிசெய்ய நானும், சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டிருந்தோம்.
அப்போது, கருணாநிதியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எல்லா குடும்பத்தினருக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதை கேட்டதும் எங்களில் யாருக்கும் நம் பிக்கை ஏற்படவில்லை. இது, கண்டிப்பாக நிறைவேற்ற முடியாத திட்டம் என நினைத்தேன். உடனே, நான், நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு தியேட்டர் இலவசம் என அறிவிப்போம் என கிண்டலாக கூறினேன்.
சிதம்பரம் சர்வதேச அளவில் ஒரு பொருளாதார மேதை என எல்லோருக்கும் தெரியும். தேர்தல் அறிக்கை பற்றி சிதம்பரம் இரவெல்லாம் சிந்தித்துள்ளார். மறுநாள் காலை, இத்திட்டம் சாத்தியமானது என்றார்.
கருணாநிதி மிகச்சிறந்த அரசியல்வாதி, உழைப்பாளி, ராஜதந்திரி. ஆனால், மிகப்பெரிய பொருளாதார நிபுணர் எனக்கூற முடியாது. இப்படிப்பட்ட ஒரு மனிதர் ஒரு பொருளாதார மேதையை இரவு முழுவதும் சிந்திக்க வைத்துள்ளார்.
ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி என எல்லா திட்டங்களை யும் நிறைவேற்றியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஒருசிலருக்கு இலவச கலர் டிவி வழங்க முடியவில்லை. தற் போது, தொழிற்கல்வி மாணவர்களுக்கு இலவச லேப்& டாப் தருவேன் என வாக் குறுதி அளித்துள்ளார். இந்த தேர்தல் அறிக்கையையும் கருணாநிதி 100 சதவீதம் நிறைவேற்றுவார். அன்று அவரது தேர்தல் அறிக் கையை கேலி, கிண்டல் செய்தவர்கள் தற்போது மவுனமாகி விட்டனர்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ ரேசன் அரிசி வழங்கினார். இப்போது மாணவர்களுக்கு லேப் டாப் தருவேன் என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எல்லாம் இலவசம் என்று சிவப்பு சட்டைக்கார்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

ஆனால் கல்கத்தாவில் ஒரு ரூபாய்கு ஒரு கிலோ அரிசி தருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள்


கலை ஞர் தொடர்ந்து நல்ல பல காரியங்களை செய்துமுடிக்க அவரது தலைமையில் உள்ள கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். முத்துசாமி சிறந்த வேட்பாளர். ஈரோடு மக்களுக்கு முத்துச்சாமி நல்ல பல காரியங்களை செய்துள்ளார். அன்று எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்ததுபோல் தற்போது முதல்வர் கலைஞருடன் நெருக்கமாக உள்ளார். முத்துசாமி மந்திரி ஆவார் என்பது எல்லோருக்கும் தெரியும். கலைஞருடன் நெருக்கமாக இருந்து ஈரோட்டுக்கு இன்னும் பல நல்ல காரியங்களை செய்து முடிப் பார். முத்துசாமி போலவே ராஜா, லோகேஸ்வரி, ஆர். எம்.பழனிசாமி, யுவராஜ், விடியல்சேகர், மகேந்திரன், சிவராஜ் என அத்தனை வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் என நெஞ்சார கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.


ஈரோடு, நாமக்கல் மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது:
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளார். இந்த முறையும் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றையெல்லாம் நிறைவேற்றுவார்.
ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தமிழகத்தை பாதுகாக்க வேண்டும். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரும் உரிமை பெற திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
அடுத்த மாதம் 13ம்தேதிக்கு பின்னர் ஈரோடு நாமக்கல் மாவட்ட மக்கள் கலைஞர் 6வது முறையாக பொறுப்பேற்று வரும் போது முதல்வர் வாழ்க முதல்வர் வாழ்க என வாழ்த்தி வரவேற்க தயராக இருக்க வேண்டும்.
இவ்வாறு பாமக தலைவர் ஜி.கே.மணி பேசினார்.
கொ.மு.க தலைவர் பெஸ்ட் ராமசாமி பேசியதாவது:

சொல்பவற்றை ஏற்று கொள்ளும் மனப்பான்மை முதல்வரிடம் உள்ளது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி தான் சமூக நீதி கூட்டணி. நமது கூட்டணியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் என அனைவரையும் உள்ளடக்கிய கூட்டணி.ந £ன் கதை ஆசிரியராக வாழ்நாள் முழுவதும் எழுதுவேன்.
இதனை யாரும் தடுக்க முடியாது. முதல்வர் பதவி வரும். போகும் என்று முதல்வர் குறிப்பிட்டார். நான் இப்போது சொல்கிறேன். இனி மேல் முதல்வர் பதவி உங்களை விட்டு போகாது. போக நாங்கள் விட மாட்டோம்.
கேரள எல்லையில் உள்ள தமிழர்கள் பொங்கலுக்கு விடுமுறை விட வேண்டும் என்று கடந்தாண்டு கோரிக்கை விடுத்தனர். கேரள முதல்வரிடம் பேசி இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது விடுமுறை அளிக்க செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்டு 34 ஆண்டு ஆகிறது. மாவட்ட ஆட்சியர் மாளிகைக்கு தீரன் சின்னமலை மாளிகை என்ற பெயர் வைத்தது முதல்வர் தான். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு பெஸ்ட் ராமசாமி பேசினார்.
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசியதாவது:

தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கிய ஒரே தலைவர் கருணாநிதி. இதுவரை 33 தொழில்களுக்கு வாரியம் அமைத்துள்ளார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி உலகில் வேறு எந்த தலைவனும் வழங்கியது இல்லை.
20 லட்சம் விவசாய பம்புசெட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியுள்ளார். சுவிட்ச் போர்டில் கை வைக்கும்போது கலைஞரை நினைத்து பாருங்கள். சூரியனை நினைத்து பாருங்கள். 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்து, விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தார்.
முதியோர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி கொடுத்த அந்த தலைவனை நினைத்து பாருங்கள். உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்தில் வாரம் ஐந்து முட்டை வழங்கி, அவர்கள் படிப்பில் முட்டை வாங்காமல் பாதுகாத்த அந்த தலைவனை நினைத்து பார்த்து வாக்களியுங்கள்.
இவ்வாறு செல்லமுத்து பேசினார்.


No comments:

Post a Comment