திருவாரூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்குசேகரிக்க சென்ற செல்வி செல்வம் முன்னிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானவர்கள் 01.04.2011 அன்று திமுகவில் இணைந்தனர்.
தமிழக முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அவரது மகள் செல்வி செல்வம், கடந்த 22ம் தேதி முதல் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் மன்னார்குடி ஒன்றிய பகுதிகளான மணக்கரை வடவேற்குடி, புள்ளமங்கலம், நத்தம், திட்டசேரி, பூந்தாழங்குடி, பாலக்குறிச்சி, ஓகைப்பேரையூர், வேளூக்குடி, கருப்பூர் ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மேலும் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடமும் வாக்கு சேகரித்தார்.
வாக்குசேகரிக்க சென்ற போது செல்வி செல்வம் முன்னிலையில் கருப்பூரில் 200 பேர், வேளூக்குடியில் 55 பேர், ஓகைப்பேரையூரில் 200 பேர் உட்பட 455 பேர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
அவர்களிடம் செல்வி செல்வம், கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களால் பயன் அடைந்துள்ளீர்களா என கேட்டார். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு பெற்றுள்ளோம். இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு பெற்றுள்ளோம். எங்கள் வீட்டு பிள்ளைகள் மன்னார்குடி, திருவாரூர் பகுதிக்கு சென்று படிக்க அரசு இலவச பஸ் பாஸ் பயன்படுகிறது என பொதுமக்கள் கூறினர்.
மாவட்ட திமுக செயலா ளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் தலையாயமங்கலம் பாலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துகுமாரசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதிமோகன், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர்கள் சித்தரஞ்சன், சம்பத், குமரேசன் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment