ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டால் உங்களை ‘ஏப்ரல் பூல்‘ செய்து விடுவார் என பள்ளிபாளையத்தில் நடிகை குஷ்பு பேசினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் வெப்படை செல்வராஜை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார். பள்ளிபாளையம் ஆவாரங்காட்டில் பிரசாரத்தை துவக்கிய அவர், காவேரி ரயில் நிலையம், ஆயக்காட்டூர், காகித ஆலை காலனி ஆகிய இடங்களில் பேசியதாவது:
ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டால் அவர் ஒன்றுமே செய்ய மாட்டார். முதல்வர் கருணாநிதிக்கு நல்ல பெயர் கிடைக்கிறதே என்று ஜெயலலிதாவுக்கு பொறாமை. ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டால், முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை பறித்து விடுவார். ஓட்டு போட்ட உங்களை ஏப்ரல் ஃபூல் செய்து விடுவார். உங்களை முட்டாளாக்க ஜெயலலிதா 24ம் தேதியே பிரசாரத்தை துவக்கி விட்டார். உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், முதல்வர் கருணாநிதி மீண்டும் முதல்வராக வர வேண்டும்.
இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.
No comments:
Post a Comment