கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எந்த தகுதியும் விஜயகாந்துக்கு இல்லை - நடிகர் வடிவேலு


''ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எந்த தகுதியும் விஜயகாந்துக்கு இல்லை” என்று நடிகர் வடிவேலு குற்றம் சாட்டி னார்.
ஆயிரம்விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் அசன் முகம்மது ஜின்னா, விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் க.தனசேகரனை ஆதரித்து, நடிகர் வடிவேலு வீதி வீதியாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கலைஞர் அய்யா ஏழைகளுக்கு போட்ட திட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதுபோன்ற திட்டங்களையெல்லாம் ரூம் போட்டு கூட யோசிக்க முடியாது. நான் ஸ்கூல்ல படிக்கறப்ப என் டவுசர்ல 3 ஓட்டை இருக்கும். மூணு கலர்ல ஒட்டு போட்டு தச்சு வச்சிருப்பேன். இப்ப 3 செட் யூனிபார்ம் இலவசமா தர்றேங்கறாரு கலைஞர். இப்படி ஏழைகளுக்கு பல திட்டங்கள அவர் போட்டுருக்கார். திமுக ஆட்சியில பிள்ளைங்க வேலைக்கு போறதே நின்னு போச்சு; படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அந்த கூட்டணியிலே ஆடு, மாடு தர்றேங்கறாங்க. ஆடு, மாடு மேய்க்கச் சொல்லி திரும்பவும் மொதல் ல இருந்து வர்றாங்க.
இப்போ திடீர்ன்னு ஒருத்தரு, ‘நான்தான் கருப்பு எம்ஜிஆர், கேப்டன், அடுத்த முதல்வர்’ என்கிறார். கட்சி ஆரம்பிச்சு 5 வருஷம்கூட ஆகல. அஞ்சு தடவ சி.எம்.மா இருந்த கலைஞர பார்த்து ‘ஒழிப்பேன்’றார். உங்க வயசு என்ன... அவர் வயசு என்ன? உன்னோட கல்யாண மண்டபத்துல 2 தூண் போயிருச்சுனு கட்சி ஆரம்பிச்ச. நாட்டுக்கு நல்ல திட்டம் வரணும்கிறதுக்காக எத்தன பேரோட இடம் போயிருக்கு. அவங்கள்லாம் கட்சி ஆரம்பிச்சா என்ன ஆகறது? நிதானம் இல்லாம பேசக்கூடாது.
ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எந்த தகுதியும் விஜயகாந்துக்கு இல்ல. சீட்ட மாத்தி கொடுத்ததால அந்தம்மா உருவ பொம்மய உன் ஆபீசு வாசல்ல போட்டு கொளுத்தலயா? கட்சி வேட்பாளர எல்லார் முன்னாடியும் அடிக்கிறாரு. நான் சினிமாவுல காமெடி நடிகன். இவரு அரசியல் பபூன் (கோமாளி). ஒரே ஒரு தொகுதியில ஜெயிச்சுட்டு, ‘நான்தான் எம்ஜிஆர், முதல்வர்’னு சொல் லலாமா?
நேத்தைக்குகூட அவர் பேசுற இடத்துல ஒருத்தரு அதிமுக கொடியை தூக்கி பிடிச்சுட்டுருக்கார்.. அவர பார்த்து, ‘டேய் கொடிய கீழே இறக்குடா’னு திட்டுறாரு. ‘தம்பி.. கொஞ்சம் கொடிய கீழே எறக்கி பிடிப்பா...’னு தலைவனுக்கு உள்ள தகுதியுடன் அன்பா சொல்ல வேணாமா? கேட்டா ‘எம்ஜி ஆர் மானசீக குரு; நான் இன் னொரு எம்ஜிஆர்’ என்கிறார். எம்ஜிஆரு இப்படித்தான் நடந்துக்கிட்டாரா?
நான் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அவர (விஜயகாந்த்) எல்லா கூட்டத்துலியும் தாக்கி பேசுறதுனால, என் ஆபீசுக்கு போன் பண்ணி மிரட்டறாங்க. ஜெயிச்சா, அந்தம்மாவோட கூட்டணி ஆட்சி அமைச்சுருவோம்.

இவ்வாறு நடிகர் வடிவேலு பேசி னார்.
எம்ஜிஆர் பாட்டு பாடி பிரசாரம் :
நடிகர் வடிவேலு பிரசாரத்தின்போது எம்ஜிஆர் நடித்த படத்தின் பாடல்களை பாடி மக்களை உற்சாகப்படுத்தினார். ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி; இந்த நாடே இருக்குது தம்பி’ என்று தொடங்கி ‘கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்... கடமை இருந்தால் வீரனாகலாம்... பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்.... இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்..’ என்றும், ‘மதுவால் விலங்கிலும் கீழாய் நின்றாய்’ என்ற பாடல்களை பாடிய வடிவேலு, பொதுமக்கள் முன்னாலேயே வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் எப்படி கருப்பு எம்ஜிஆர் ஆக முடியும்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment