திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளர் கே.என்.சேகரை ஆதரித்து, பெரியபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது:
பட்டிமன்ற பேச்சாளர் அரசியலுக்கு வந்து பிரசாரம் செய்யலாமா என கேட்கின்றனர். தமிழர்களின் தலைவருக்காக பிரசாரம் செய்கிறேன். முதல்வர் கருணாநிதி, கூட்டணி கட்சித் தலைவர்களிடம் மரியாதையோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த் தை முடிந்த பிறகு, 3, 4வது அணி அமைக்கலாமா என்று பேசினர்.
திமுக, சாதனைகளை கூறி ஓட்டுக் கேட்கிறது. எம்ஜிஆர் போல் மாறுவேடம் அணிந்துதான் அதிமுகவினர் ஓட்டு கேட்கின்றனர். ஜெயலலிதா ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, ஐதராபாத் திராட்சை தோட்டம் 25 காசுக்கும், சிறுதாவூர் பங்களா 25 பைசாவுக்கும், கொடநாடு எஸ்டேட் 25 பைசாவுக்கும் வாங்கியிருக்கிறார். மீதமுள்ள 25 பைசாவை சாப்பாட்டு செலவுக்கு வைத்துக் கொண்டார்.
திமுக கூட்டணி கான்கிரீட் போன்று பலமான கூட்டணி. வைகோவுக்கு ஏற்பட்ட நிலைதான் விஜயகாந்துக்கும் ஏற்படும். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை பார்க்க வேண்டும் என்றால், காசு கொடுத்தால்தான் பார்க்க முடிகிறது. அதேபோல் ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்றால், கட்சிக்காரர்கள் நிதி எடுத்து சென்றால்தான் பார்க்க முடியும். ஆனால், முதல்வர் கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். மே மாதத்தில் கருணாநிதி மீண்டும் முதல்வராவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டணி தலைவர்களை ஜெயலலிதா மதிப்பதில்லை - திண்டுக்கல் லியோனி பேச்சு :
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டணி தலைவர்களை ஜெயலலிதா மதிப்பதில்லை - திண்டுக்கல் லியோனி பேச்சு :
காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் 30.03.2011 அன்று நடந்தது. திமுக நகர செயலாளர் சேகர் தலைமை வகித்தார். காங்கிரஸ் நகர தலைவர் குப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது:
அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதல்வர் கருணாநிதி சொன்னதையும் செய்வார்; சொல்லாததையும் செய்வார். கடந்த தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, கலைஞர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
இந்த தேர்தல் அறிகையிலும் பல திட்டங்களை கூறியுள்ளார். அதையும் நிறைவேற்றுவார். கூட்டணி கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் கருணாநிதி. அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்களை ஜெயலலிதா மதிப்பதில்லை. முதியோர்களுக்கு பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் முதியோரின் பெண்ணும், சன்னும் (மகன்) தராததை முதல்வர் தந்துள்ளார். அவரை 6வது முறையாக முதல்வராக்க வேண்டும்.
இவ்வாறு லியோனி பேசினார்.
No comments:
Post a Comment