கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

திட்டங்களும், சாதனைகளும் தொடர திமுக ஆட்சி தொடர வேண்டும் - துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்



தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஏஎல்எஸ்.லட்சுமணனை ஆதரித்து, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் 30.03.2011 அன்று தச்சநல்லூரில் பிரசாரத்தை தொடங்கினார். நெல்லை டவுன், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். பின்னர் பாளை தொகுதி திமுக வேட்பாளர் மைதீன்கானை ஆதரித்து பாளை மார்க்கெட், மேலப்பாளையம் பகுதிகளில் ஆதரவு திரட்டினார். பிரசாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் வந்து செல்பவர்கள் அல்ல. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்களோடு இருந்து பணியாற்ற கூடியவர்கள். சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்கள். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஜெயலலிதாவுக்கு நாட்டை பற்றியோ, தமிழகத்தை பற்றியோ கவலை இல்லை. தேர்தல் முடிந்ததும், அவர் தமிழ்நாட்டை மறந்து விடுவார். கொடநாட்டு மீதுதான் அக்கறை செலுத்துவார். தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டை பற்றி சிந்தித்து செயல்படக்கூடியவர். தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்காக தொடர்ந்து இரவு, பகலாக பணியாற்றி கொண்டிருப்பவர். இந்த 5 ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி தந்துள்ளார்.
திட்டங்களை, சாதனைகளை தமிழகத்துக்கு தந்தவர் முதல்வர் கருணாநிதி. அவர் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அப்படிப்பட்ட முதல்வரின் நல்லாட்சி தொடர வேண்டும் என்றே உங்களை தேடி, நாடி வந்துள்ளோம். கடந்த தேர்தலில் தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றி தந்துள்ளார். இந்த தேர்தலில் ஒன்றரை மணி நேரம் அவர் படித்த தேர்தல் அறிக்கை வாக்காளர்களாகிய உங்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அந்த கோரிக்கை களையும் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களிடம் உள்ளது. இந்த திட்டங்களும், சாதனைகளும் தொடர திமுக ஆட்சி தொடர வேண்டும். அதற்கு முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அமர வேண்டும். இதற்காக நீங்கள் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
தேமுதிகவினருக்கு ஹெல்மெட் கட்டாயம்
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தொகுதி பங்கீட்டின்போது தமிழக முதல்வர் கருணாநிதி தோழமைக்கட்சி தலைவர்களை அழைத்துப்பேசி எல்லோருக்கும் உரிய உரிமைகளையும், உரிய மரியாதைகளையும் தந்தார். ஆனால் எதிர்க்கட்சி தலைவியோ, தலைவர்களை அழைத்துப்பேசி என்ன மரியாதை தந்தார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. விஜயகாந்த் மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன். இனிமேல் தேமுதிக கட்சியினர் எல்லோரும் ஹெல்மெட் போட்டுதான் போக வேண்டும். அவரது கட்சி வேட்பாளருக்கு அப்படி ஒரு அடி விழுந்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள்” என்றார்.

No comments:

Post a Comment