கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 4, 2011

உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழக அரசு ஷீ3 கோடி பரிசு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு


உலக கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற டோனி தலைமையிலான இந்திய அணிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், கடந்த 2&ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின. இதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை தீபாவளி போல நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கருணாநிதி உள்பட பல மாநில முதல்வர்கள், தலைவர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் இந்திய அணிக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 03.04.2011 அன்று மாலை இந்திய வீரர்களுக்கு தேனீர் விருந்து அளித்து கவுரவித்தார்.
இந்திய அணிக்கு பாராட்டுகளுடன் பரிசுகளும் குவிந்து வருகிறது. அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதேபோல பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த வீரருக்கு பரிசுத் தொகை, வீடு, கார், மனை உள்ளிட்ட பரிசுகளை அறிவித்து வருகின்றன. கார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் பலரும் போட்டி போட்டு பரிசுகளை அறிவிக்கின்றனர்.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற டோனி தலைமையிலான இந்திய அணிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மாபெரும் வெற்றி பெற்ற கேப்டன் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3 கோடியும், அந்த அணியில் தமிழகத்தின் சார்பில் இடம் பெற்றிருந்த வீரர் ஆர்.அஸ்வினுக்கு ரூ.1 கோடியும் பரிசாக வழங்கப்படும். இதற்கான ஒப்புதல், தேர்தல் கமிஷனிடம் பெறப்படும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கலைஞருக்கு நன்றி தெரிவிக்க ஆசை: அஸ்வின்

உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், முதல் அமைச்சர் கலைஞரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.


உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா உலக கோப்பையை கைப்பற்றியது. உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தமிழ்நாட்டில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் மட்டும் இடம் பெற்று இருந்தார்.


உலக கோப்பை போட்டி முடிந்து ஆர்.அஸ்வின் மும்பையில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேற்கு மாம்பலத்தில் உள்ள அஸ்வினின் வீட்டில் திரண்ட ரசிகர்கள் கூட்டமும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. தனது வீட்டுக்கு வந்தவர்களுக்கு எல்லாம் அஸ்வின் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.


பின்னர் அஸ்வின் கூறியதாவது:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்த முதல் முறையிலேயே கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டத்தை பெற்றது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. கோப்பையை வென்ற அன்று இரவில் இருந்து எனது வெற்றி கொண்டாட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது கூட வீட்டுக்கு வரும் ரசிகர்களுடனும், போனில் பேசும் நண்பர்களுடனும் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறேன்.


உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 3 கோடியும், எனக்கு (அஸ்வின்) ரூ.1 கோடியும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்து இருக்கிறார். எங்களது வெற்றிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஊக்கத் தொகை அறிவித்த தமிழக அரசுக்கும், முதல் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசைப்படுகிறேன். முதல் அமைச்சர் தேர்தல் பணியில் மும்முரமாக இருப்பதால் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை என்றார்.

No comments:

Post a Comment