கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 4, 2011

திமுக ஆட்சியில் சட்டம்&ஒழுங்கு நிலை குற்றம்சாட்ட ஜெயலலிதாவிற்கு என்ன தகுதி? - முதல்வர் கருணாநிதி


திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுவதற்கு ஜெயலலிதாவிற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? தமிழக மக்கள் தான் கூறவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி 03.04.2011 அன்று எழுதியுள்ள கேள்வி&பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா தனது தேர்தல் சுற்றுப் பயணங்களில் ஒவ்வொரு ஊரிலும் மறக்காமல் குற்றஞ்சாட்டுவது கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்பதைத்தான். அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்பட்டதாகச் சொல்லிக் கொள்கிறாரே, அது உண்மையா?
ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எந்த அளவிற்கு பராமரிக்கப்பட்டது என்பதற்கு ஒரு சில உதாரணங்களையே எடுத்துக் கூறுகிறேன்.
பதவியேற்றதற்கு மறுநாளே கழகச் சட்டப் பேரவை உறுப்பினர் பரிதி இளம்வழுதி மீது ஜான் பாண்டியனை தாக்கியதாகக் கூறி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். ஆனால் உண்மையில் தாக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதிதான்.
* தமிழகத்தின் முதல் குடிமகனாக இருந்த ஆளுநர் சென்னா ரெட்டியின் கார் திண்டிவனம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டது ஜெயலலிதா ஆட்சியிலே தான்.
* தற்போதுள்ள தேர்தல் ஆணையத்தை ஜெயலலிதா வானளாவப் புகழ்கிறாரே, அதே ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது, இந்தியத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷனை விமான நிலையத்திலிருந்தே வெளியே வர இயலாமல் தாக்கப்பட்டார். மேலும் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கே வன்முறையாளர்கள் சென்று அவரைத் தாக்க முற்பட்டனர்.
* சுப்பிரமணியம் சுவாமி சென்னை உயர் நீதி மன்றத்திற்கு வந்தபோது, அ.தி.மு.க. வின் மகளிர் அணியினரால் தாக்கப்பட்ட தோடு, அநாகரிகமான முறையில் அவரிடம் நடந்து கொண்ட சம்பவம் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே தான்.
* மத்திய உள்துறை அமைச்சராக உள்ள ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையத்திலே இறங்கி காரைக்குடி செல்லும் வரையில் வழியிலே மறிக்கப்பட்டு அவரது காரை மறித்து தாக்கப்பட்ட நிகழ்ச்சியும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேதான்.
* முன்னாள் ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி ஒருவர் மீது ‘ஆசிட்’ வீசி அவரை கொலை செய்யவே முயன்றதும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேதான்.
* எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் தலைவராக இருந்த எம்.ஜி. சுகுமார், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் சகோதரருடைய புதல்வர் மற்றும் சிலரோடு ராமனாதபுரம் சென்றிருந்தபோது பயங்கரமாகத் தாக்கப் பட்டதும் ஜெயலலிதா நாடாண்ட காலத்திலே தான்.
* அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த ஆனந்த கிருஷ்ணனின் வீட்டிற்குள்ளேயே புகுந்து அவரை சிலபேர் தாக்கியதும் அவரின் ஆட்சிக் காலத்திலேதான்!
* மூத்த வழக்கறிஞர் விஜயன் அ.தி.மு.க. அரசுக்கு விரோதமாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறார் என்பதற்காக அவர் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரத்தில் வழி மறித்துத் தாக்கப்பட்டதும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே தான்.
* தி.மு.க மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவருடைய அலுவலகத்திலேயே சென்று அவரை கொலை செய்ய முயற்சித்து, தாக்கியது எந்த ஆட்சியிலே? ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலேதானே?
* ஜெயலலிதா ஸீ100 கோடி செலவழித்து ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்த வளர்ப்பு மகன் பிறகு பிடிக்காமல் போய் விட்ட பிறகு அவர் மீதே ஹெராயின் வைத்திருந்ததாக வழக்கு போட்டது எந்த ஆட்சியிலே? ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேதானே?
* அதிமுக ஆட்சியிலே ஆளுங்கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்களாக இருந்த தூத்துக்குடி ரமேஷ், மதுராந்தகம் சொக்கலிங்கம், உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் போன்றவர்கள் தாக்கப்பட்டச் சம்பவங்கள் எல்லாம் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக் கப்பட்டதற்கான அடையாளங்களா?
* கும்முடிப்பூண்டி தொகுதியிலே ஆளுங் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுதர்சனம் கொல்லப்பட்டது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தானே?
* காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வெளியிலே தாக்கப்பட்ட கொடுமை நடைபெற்றது எந்த ஆட்சிக் காலத்தில்? ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தானே?
* கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் மூன்று பேர் உயிரோடு தீயிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றதே, அதற்குக் காரணமானவர்கள் யார்? அ.தி.மு.க.வினர்தானே?
* இவ்வளவு ஏன்? முன்னாள் முதலமைச்சரான என்னை நள்ளிரவிலே வீடு புகுந்து தாக்கி கைது செய்தது எந்த ஆட்சியிலே? ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தானே? அதற்குப் பெயர் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றியதா?
* மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், டி.ஆர். பாலு, மு.க. ஸ்டாலின் ஆகியோரெல்லாம் தாக்கப்பட்டது எந்த ஆட்சிக் காலத்திலே?
* ஐ.ஜி. அலுவலக வாசலிலேயே ஊர்வலமாக வந்த தொழிற் சங்கத் தலைவர் பெருமாளைத் தாக்கி அவர் சாவதற்கே காரணமாக இருந்தது எந்த ஆட்சியிலே நடைபெற்றது?
* கஞ்சா கடத்தியதாக மதுரையைச் சேர்ந்த இளம்பெண் செரினா மற்றும் அவரது தாயார் ரெஜினா ஆகியோரை 10.6.2003 அன்று போலீசார் கைது செய்து சிறையிலே அடைத்தது எந்த ஆட்சிக் காலத்தில்?
இன்னும் உதாரணங்களை எழுதிக் கொண்டே போகலாம். இந்த லட்சணத்தில் தி.மு.க ஆட்சியிலே சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப் பட வில்லை என்று குற்றம் சாட்டுவதற்கு ஜெயலலிதாவிற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் கூற வேண்டும்.
தேர்தல் சுற்றுப் பயணங்களில், தி.மு.க. ஆட்சி மீது ஜெயலலிதா கூறும் மற்றொரு குற்றச்சாட்டு விலைவாசி உயர்வு பற்றித்தான். எந்த ஆட்சிக் காலத்தில்தான் விலைவாசி குறைந்து இருந்திருக்கின்றது. வீண் புகார் கூறுகிறாரே? நீங்கள் அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் கூறவில்லை என்றும் சொல்கிறாரே?
ஆளுங்கட்சி மீது குறை சொல்வதற்கு வேறு எதுவும் காரணம் கிடைக்கவில்லை என்ற நிலையில், எதிர்க்கட்சி யினர் சொல்லக் கூடிய ஒரே குற்றச்சாட்டு விலைவாசி உயர்வுதான். யார் ஆட்சியிலே இருந்தாலும் இந்தக் குற்றச் சாட்டினைத்தான் எதிர்க்கட்சியினர் வழக்கமாகக் கூறுவார்கள். ஆனால் தி.மு. கழக ஆட்சியைப் பொறுத்த வரையில் விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறதா இல்லையா என்பதுதான்.
பொதுவாக உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் சாதாரண, சாமான்ய ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என்றும், பிறகு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்றும் இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருவதே விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான்.
பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் உயரும் போக்கைக் கூர்ந்து கண்காணித்து, அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு 2007ம் ஆண்டு மே மாதத்தில் இருந்தே துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கும் திட்டத்தை தி.மு. கழக அரசு தொடங்கி செயல் படுத்தி வருகிறது. மேலும் ‘மலிவு விலையில் மளிகைப் பொருள்கள்’ என்ற திட்டத்தைத் தொடங்கி பத்து மளிகைப் பொருள்களை ஸீ50க்கு வழங்கப்பட்டு வருகிறது.
விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் அரசின் சார்பில் 2009&2010ம் நிதியாண்டில் மட்டும் ஸீ4000 கோடி நிதி ஒதுக்கி மானிய விலையில் உணவுப் பொருள்களை அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கழக அரசு வழங்கி வருகிறது.
சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, சர்க்கரை விலை உயர்வு ஏற்பட்ட போது, மத்திய அரசு 10,832 டன் சர்க்கரையை மட்டும் வெளி விலையில் வழங்கினாலும், மாதம் 34000 டன் அளவு சர்க்கரையை கிலோ ஸீ13.50 என்ற விலையிலேயே அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் கழக அரசு வழங்க முன்வந்தது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து இந்த ஆண்டின் துவக்கத்தில் தலைமைச் செயலகத்தில் என்னுடைய தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் ஒன்றே நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில்தான் உளுந்து, துவரம்பருப்பு, பாமாயில் மற்றும் மளிகைப் பொருள்கள் போதிய அளவு தட்டுப்பாடின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், முக்கிய பயிர்களான நெல் போன்றவற்றின் உற்பத்தித் திறனை வட்டார வாரியாக ஆய்ந்து, திட்டம் வகுத்து அதிக உற்பத்தித் திறனை எட்ட தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவுகள் மேற்கொள்ளப் பட்டது.
எனவே விலைவாசியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் கழக அரசில் இதய சுத்தியோடு எடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை. ஆனால் வேறு எந்தக் காரணங் களையும் சொல்ல முடியாத நிலையில்தான் ஜெயலலிதா அந்தக் குற்றச்சாட்டினை ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லி வருகிறாரே தவிர வேறல்ல.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment