தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர் மன்றங்கள் கூண்டோடு கலைக்கப்பட்டன. விஜய் ரசிகர் மன்ற மாநில தலைவர் ஜெயசீலன் தலைமையில் 17 மாவட்ட தலைவர்கள் உள்பட 2,500 பேர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் 04.04.2011 அன்று திமுகவில் இணைந்தனர் .
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளிப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்தார். ரசிகர்களை கலந்தாலோசிக்காமல் ஒருமனதாக இதை அறிவித்ததால், தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் பல இடங்களில் மன்றங்களை கலைத்தனர். விஜய் பேனர் மற்றும் போட்டோக்களை தீ வைத்து கொளுத்தினர். எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய்யை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம், கிருஷ்ணகிரி உள்பட பல மாவட்டங்களில் மன்ற அடையாள அட்டைகளை எரித்துவிட்டு, ஏராளமானோர் திமுகவினர் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ளன. அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற மாநில தலைவர் ஜெயசீலன் தலைமையில் விழுப்புரம், மதுரை, திருவள்ளூர், தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை உள்பட 17 மாவட்ட நிர்வாகிகள் சுமார் 1000 பேர் 04.04.2011 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தனர் .
அப்போது அவர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். அவர்களின் போட்டோக்களை கிழித்து எறிந்தனர். மன்றங்களும் கலைக்கப்பட்டன.
இதுகுறித்து மாநில தலைவர் ஜெயசீலன் கூறியதாவது:
இதுகுறித்து மாநில தலைவர் ஜெயசீலன் கூறியதாவது:
அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது எங்களுக்கு பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் உணர்வாளர்போல விஜய் காட்டிக் கொண்டார். அதனால் பெருமைப்பட்டடோம். ஆனால், இப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கிறார். ரசிகர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை. எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பது இல்லை. அவரே அரசியலில் இறங்கினால் ஆதரிப்போம். ஆனால், இன்னொரு கட்சிக்கு ஆதரவாக வேலை செய்யச் சொல்வதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆரம்பத்தில் இருந்து அதிமுகவுக்கு எதிரான மனநிலையிலேயே எங்களை அவர் வளர்த்திருந்தார். இப்போது திடீரென்று ஆதரவு என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு திமுகவில் சேர முடிவு செய்துள்ளோம். இதை தெரிந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகரன் நிர்வாகிகளை மிரட்டுகிறார். என் மனைவிக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். நான் 17 ஆண்டுகளாக அவருடன் இருந்தேன். மாதம் ரூ.30 ஆயிரம் வரை என் கையில் இருந்துதான் செலவு செய்து வருகிறேன். இப்போது எனக்கே மிரட்டல் விடுக்கிறார். முதல்வர் கருணாநிதி கட்டளை இட்டால், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வோம்.
இவ்வாறு ஜெயசீலன் கூறினார்.
இவ்வாறு ஜெயசீலன் கூறினார்.
No comments:
Post a Comment