முதல்வர் கருணாநிதி பல்வேறு துறை நிபுணர்களுடன் 6 மாதமாக ஆலோசித்து தயாரித்த தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா 50 காசு ஜெராக்சில் முடித்துவிட்டார் என்று பட்டுக்கோட்டை கூட்டத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் கூறினார்.
பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். ரெங்கராஜனை ஆதரித்து 03.04.2011 அன்று இரவு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடிகர் வாகை சந்திரசேகர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு சென்று கடமையாற்றி உள்ளாரா? அவரது ஒரே பணி கோடநாட்டில் ஓய்வு எடுப்பது தான். வர இருக்கின்ற தேர்தலுக்காக கடந்த 6 மாதமாக இரவு பகலாக கண் விழித்து பல்துறை வல்லுனர் களை கலந்து, அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு என்ன செய்யலாம் என ஒரு சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரித்து கருணாநிதி தந்து உள்ளார். 6 மாதம் கஷ்டப்பட்டு தயாரித்த எங்களது தேர்தல் அறிக்கையை, சுயமாக தயாரிக்க முடியாத ஜெயலலிதா, 50 காசு ஜெராக்சில் அப்படியே காப்பி எடுத்து விட்டார்.
இலவச பஸ் பாஸ், சீருடைகள், பாடபுத்தகம் முட்டையுடன் சத்துணவு கொடுத்து படிக்க சொல்கிறார் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதா 4 ஆட்டு குட்டி தருகிறேன் என்கிறார்.
கடவுளுடன் தான் கூட்டணி என்ற என் அருமை நண்பா விஜயகாந்தே, ஜெயலலிதாவுடன் இப்போது கூட்டணி சேர்ந்தது ஏன்? சினிமாவில் புள்ளி விவரமாக கணக்கு போடும் விஜயகாந்தே, இப்போது நீ போயஸ் தோட்டத்தில் உட்கார்ந்திருந்த விதத்தை நாங்கள் டிவியில் பார்த்தோம். உன் வீரம் இப்போது எங்கே போச்சு?
6 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருந்த வைகோ நிலைதான் உனக்கும் ஏற்படும். ஜெயலலிதாவை நம்பி சென்ற உனது அரசியல் வாழ்க்கை முடியப்போகிறது.
இவ்வாறு சந்திரசேகர் பேசினார்.
இவ்வாறு சந்திரசேகர் பேசினார்.
No comments:
Post a Comment