கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

அரசு ஸி100 கோடி ஒதுக்கீடு : முதல்வர் கருணாநிதி


தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் முதற்கட்டமாக முதல்வர் கருணாநிதி 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்கள் பாதிக்கப்பட்டன. நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பாலங்கள் உடைந்தன. மழை வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டன. விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மழை பாதிப்புகள் குறித்து விவாதிக்க 30.11.2010 அன்று சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் முதல்வர் கூறியதாவது:
பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய், கால்நடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கவும் தேவையான இடங்களில் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை மதிப்பீடு செய்து சேதம் குறித்த அறிக்கை அனுப்பும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பாலங்கள், சாலைகள், ஏரிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையினரால் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், முழுமையான அளவில் குடிசைகள் சேதம் அடைந்திருந்தால், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரம் ரூபாய் என்பதை 5 ஆயிரம் ரூபாயாகவும், பகுதியாக குடிசைகள் சேதம் அடைந்திருந்தால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஆயிரம் என்பதை 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
பெருமழையினால் ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பான நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் கூறினார்.

No comments:

Post a Comment