கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 4, 2011

நிஜத்தில் விஜயகாந்த் ஜீரோ - நடிகர் வடிவேலு


சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் பெரியகருப்பனை ஆதரித்து திருப்புத்தூர், திருக்கோஷ்டியூர், சிங்கம்புணரி பகுதிகளில் நடிகர் வடிவேலு 04.04.2011 அன்று காலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:
ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை முதல்வர் கருணாநிதி பூர்த்தி செய்துள்ளார். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு கொடுக்க முடியுமா என்று கேட்டார்கள். ஆனால், ஒரு ரூபாய்க்கு வழங்கிக் காட்டினார். அந்த அரிசியை வாங்கிச் சாப்பிடும் ஏழைகளுக்குத்தான் அதன் அருமை தெரியும். இலவச காஸ் அடுப்பு, டிவி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வசதி படைத்த குழந்தைகள் படிக்கும் அதே படிப்பையே ஏழை வீட்டுக் குழந்தைகளும் இப்போது சமச்சீர் கல்வி மூலம் படிக்கின்றனர். வாக்குரிமை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் சிசுவுக்குக் கூட நலத்திட்ட உதவிகள் அளித்தவர் முதல்வர் கருணாநிதி. ஆறாவது முறையாக அவர் ஆட்சிக்கு வந்தால், ஏழை மாணவர்களுக்கு லேப்&டாப் அளிப்பார்.
தினமும் காலையில் எழும்போதும், இரவு தூங்கச் செல்லும் முன்பும், டிவியில் என்னை நீங்கள் பார்க்கிறீர்கள். நான் ஒன்றும் கருப்பு எம்ஜிஆர் கிடையாது. கேப்டன் என்று ஒருவர் தன்னை கூறிக் கொள்கிறார். அவர் கட்சி வேட்பாளர் பெயரையே மாற்றி மாற்றிச் சொல்கிறார். நியாயமாகப் பார்த்தால், அந்த வேட்பாளர்தான் இவரை அடிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும், வேட்பாளர்கள் அனைவரும் சேர்ந்து இவரை அடிக்கிற நிலைமை ஏற்படும்.
சினிமாவில்தான் அவர் ஹீரோ. நிஜத்தில் வெறும் ஜீரோ. நான் படத்திலும் சரி, நிஜத்திலும் சரி... எப்போதுமே காமெடி ஹீரோ. 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆறாவது முறையும் கருணாநிதியை முதல்வராக தேர்ந்தெடுத்தால், தமிழக மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் நிறைவேற்றுவார்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.

No comments:

Post a Comment