கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 4, 2011

2 முறை முதல்வராக இருந்து எதையும் சாதிக்காத ஜெயலலிதா எதை சொல்லி ஓட்டு கேட்பார்? - துணை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்


திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கோவை, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி உள்பட கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 03.04.2011 அன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் செய்தார். சூலூர் கொமுக வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து அவர் பேசியதாவது:
அதிமுக கூட்டணியில் பிணி பிடித்திருக்கிறதா, சனி பிடித்திருக்கிறதா என்று தெரியவில்லை. சினிமாவில் கதாநாயகனாக இருக்கும் ஒருவர் கூட்டணி அரசியலில் வில்லனாக உள்ளார். தேர்தலின்போது தான், ஜெயலலிதா மக்களை நாடி வருவார், தேர்தல் முடிந்த பிறகு கோடநாடுக்கு ஓய்வு எடுக்க சென்று விடுவார்.
திமுக கூட்டணியில் சமூக நோக்கமுள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றன. எதிரணியில் கதாநாயகன், கதாநாயகிதான் ஒன்றிணைந்துள்ளனர். எனவே மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். என்னென்ன வாக்குறுதிகள் என்பது உங்களுக்கு தெரியும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பொள்ளாச்சியில் கொமுக வேட்பாளர் நித்யானந்தனை ஆதரித்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வர் கருணாநிதி தான் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். மக்களுக்கு நலத்திட்டங்களை முனைப்புடன் திமுக அரசு செயல்படுத்தியது.
கடந்த 5 ஆண்டு கால சாதனையை சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். 2 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா எதையும் சாதிக்காமல் மக்களிடம் எதை சொல்லி ஓட்டு கேட்க முடியும்? மக்களுக்கு பாதுகாப்பாக திமுக அரசு மட்டுமே இருக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
7 மணி நேரம்... 10 தொகுதிகள்
03.04.2011 அன்று மதியம் 3 மணிக்கு துணை முதல்வர் ஸ்டாலின் கோவை காளப்பட்டியில் பிரசாரத்தை துவங்கினார். ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் மூன்று இடங்கள் வீதம் வழியெங்கும் வேனை நிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். கவுண்டம்பாளையம், அவிநாசி, மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி என 10 தொகுதிகளில் 7 மணி நேரம் மொத்தம் 35 இடங்களில் நேற்று ஸ்டாலின் பேசினார். அனைத்து இடங்களிலும் ஸ்டாலின் பேச்சை கேட்க பொதுமக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.

No comments:

Post a Comment