கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

மு.க.அழகிரி மீது வழக்கு போடுமாறு மிரட்டுவதாக மதுரை கலெக்டர் மீது மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி புகார்


மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதும், கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி மீதும் பொய் வழக்குப் போடச் சொல்லி மதுரை கலெக்டர் நிர்ப்பந்தம் செய்கிறார். என்னால் பொய் வழக்குப் போட முடியாது என்றதால் தேர்தல் கமிஷன் நடவடிக்கை உன்மீது பாயும் என மிரட்டினார். இந்த தொல்லையால் நான் செத்துவிடுவேன் போல் இருக்கிறது என தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பியுள்ள மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தியும், அதிமுக சார்பில் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழரசனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியான ஆர்டிஓ சுகுமாறன், 01.04.2011 அன்று நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பியுள்ள மனுவில், ‘மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி என்ற முறையில், தேர்தல் விதிமுறைகளுக்குட்பட்டு நேர்மையாக செயல்பட்டு வந்தேன். ஆனால் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், அடிக்கடி நேரில் வரவழைத்தும், டெலிபோன் மூலமாகவும் திட்டி இப்படிச்செய், அப் படிச் செய் என டார்ச்சர் கொடுத்து வருகிறார். என்னால் சுதந்திரமாக செயல்பட முடியாத அளவிற்கு அளவுக்குமீறி தொல்லை கொடுக்கிறார்.
இதன்காரணமாக எனக்கு மன அழுத்தம் அதிகமாகி மயக்கம் ஏற்பட்டது. கலெக்டர் என்னிடம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதும், கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி மீதும் ஏதாவது பொய் வழக்குப் போடச் சொல்லி நிர்பந்தம் செய்கிறார். என்னால் அப்படி பொய்வழக்குப் போட முடியாது. விதிமுறைகளை மீறினால் தானே அவர்கள் மீது வழக்குப் போட முடியும் எனக்கூறினேன். அதற்கு அவர் தேர்தல் கமிஷன் நடவடிக்கை உன்மீது பாயும் என மிரட்டினார். இந்த தொல்லையால் நான் செத்துவிடுவேன் போல் இருக்கிறது. எனவே என்னை இந்த தேர்தல் அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவித்து விடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகுமாறன் அழுது கொண்டே நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 3 நாட்களாக கலெக்டர் சகாயம் எனக்கு கொடுத்து வரும் டார்ச்சர் தாங்க முடியவில்லை. நான் நடுநிலையோடு செயல்படுகிறேன். என்னை நடுநிலையாகவோ, சுதந்திரமாகவோ செயல்பட விடாமல் கலெக்டர் சகாயம் தடுக்கிறார். வேட்புமனு தாக்கலின் போது திமுக வேட்பாளர் மூர்த்தியுடன் ஏன் பேசினீர்கள் என்றார். நான் எதுவும் பேசவில்லை, என்றேன். பிறகு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து என்ன பேசினீர்கள் என்று கேட்டார். நான் அவரை சந்திக்கவோ, பேசவோ இல்லை என்றேன்.
பிறகு தொடர்ந்து என்னை நேரில் வரவழைத்தும், டெலிபோன் மூலமாக திட்டியும் எனக்குத் தொல்லை கொடுத்து வந்தார். இதேநிலை நீடித்தால் ரத்தக்கொதிப்பு அதிகமாகி நான் செத்துப்போவேன். எனக்கு தற்போது பிரஷர் 190க்கும் அதிகமாகி விட்டது. எனது குடும்பத்தை நினைத்து கவலையாகவும், பயமாகவும் உள்ளது. என்னை உடனடியாக தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும், என்றார்.
அவரது மனைவி கிருஷ்ணவேணி கண்ணீர் மல்க கூறுகையில், அலுவலகம் சம்பந்தப்பட்ட எதையும் என்னிடம் கூற மாட்டார். எந்தக்காலத்திலும் அவர் இப்படி மன அளவில் பாதிக்கப்பட்டது கிடையாது. தற்போது மருத்துவமனைக்கு வந்த பிறகுதான் காரணம் என்ன என்பதையே அவர் தெரிவித்துள்ளார் என்றார்.

மு.க.அழகிரி மீது வழக்கு உள்நோக்கம் கொண்டது - தங்கபாலு கண்டனம் :

தங்க பாலு கூறியதா வது:
தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் அலை வீசுகிறது. சோனியா காந்தி யின் சாதனை, கருணாநிதி யின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கி றோம். மயிலாப்பூர் தொகுதி யில் நான் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.
தென் மண்டலத் தில் திமுகவின் முக்கிய பொறுப் பாளராக இருக்கும் மு.க. அழகிரி மீது தேர்தல் கமிஷன் வழக்கு தொடுத் திருப்பது உள்நோக் கம் கொண்டது, இதை நான் வன்மையாக கண்டிக் கிறேன்.
இவ்வாறு தங்கபாலு கூறினார்.

No comments:

Post a Comment