சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க மூவேந்தர் பேரவை முடிவு செய்துள்ளது.
அனைத்து தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் இயக்கமான மூவேந்தர் பேரவை சார்பில் சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் தலைவர் அன்பு தேவேந்திரன் தலைமையில் நடந்தது. இதில் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இதுகுறித்து அன்பு தேவேந்திரன் கூறுகையில், ‘தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு திமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உயிர் காக்கும் காப்பீட்டு திட்டம், உயிர்காக்கும் சிகிச்சை, உதவி வாகனம் 108, ஏழை மக்களுக்கு காங்கிரீட் வீடுகள், இலவச கேஸ் அடுப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை திட்டம் என பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி உலகிற்கே வழிகாட்டும் ஒரு கிலோ அரிசி திட்டம் மூலம் பசியில்லாத தமிழகத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே, திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றார்.
திமுக கூட்டணிக்கு துப்புரவு பணியாளர் சங்கம் ஆதரவு :
கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு லட்சம் குடும்பத்தினர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.சண்முகம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் டேங்க் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களின் ஒரு லட்சம் குடும்பங்கள் இருக்கிறோம். கடந்த ஆட்சியில் இவர்களுக்கு ரூ.600 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. முதல்வராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியத்தை ரூ.2 ஆயிரமாக உயர்த்தினார். மேலும் சிறப்பு காலமுறை ஊதியத்தை அறிவித்ததன் மூலமாக ஒரு லட்சம் குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.
மேலும் எங்களுக்கு 68 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை வழங்கினார். இதனால் திமுக தலைவர் கலைஞர் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பது என்று மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சண்முகம் கூறினார்.
இவ்வாறு சண்முகம் கூறினார்.
தளி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு :
தளி தொகுதியில் தி.மு.க வேட்பாளருக்கு ம.தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி ம.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க.வுக்கு தொகுதி ஒதுக்காமல் அவமதித்த அ.தி.மு.க.வை தோற்கடிப்பது என்றும் தளி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவு தெரிவித்து, உதயசூரியன் சின்னத்துக்கு கிராமம், கிராமமாக சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பது எனவும் தீர்மா னிக்கப்பட்டது.
திமுக கூட்டணிக்கு முற்போக்கு பிராமணர் சங்கம் ஆதரவு :
திமுக கூட்டணிக்கு முற்போக்கு பிராமணர் சங்கம் ஆதரவு :
கோவை வடவள்ளியில், தமிழ்நாடு முற்போக்கு பிராமணர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் தலைவர் கண்ணன் ராமநாதன், செயலாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வீரகோபாலுக்கு சங்கம் சார்பில்ஆதரவு கடிதத்தை அளித்தனர். கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள முற் போக்கு சிந்தனையுடைய பிராமணர்களை ஒருங்கிணைந்து தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதல்களை ஏற்று சமுதாய முன்னேற்றத்திற்கு இச்சங்கம் பாடுபட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் சீரிய தலைமையில் 2006 முதல் நடைபெற்றுவரும் நல்லாட்சி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வண்ணம் ஏராள மான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக நமது தமிழகம் திகழ்கிறது. இந்த நல்லாட்சி மீண்டும் தொடரவும், வரும் சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறவும், தமிழகத்தின் பல பகுதிகளில் செயலாற்றும் சங்க உறுப்பினர்கள் அரும்பாடுபடுவார்கள் என்று உறுதி அளிக்கிறோம்.
தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள முற் போக்கு சிந்தனையுடைய பிராமணர்களை ஒருங்கிணைந்து தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதல்களை ஏற்று சமுதாய முன்னேற்றத்திற்கு இச்சங்கம் பாடுபட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் சீரிய தலைமையில் 2006 முதல் நடைபெற்றுவரும் நல்லாட்சி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வண்ணம் ஏராள மான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக நமது தமிழகம் திகழ்கிறது. இந்த நல்லாட்சி மீண்டும் தொடரவும், வரும் சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறவும், தமிழகத்தின் பல பகுதிகளில் செயலாற்றும் சங்க உறுப்பினர்கள் அரும்பாடுபடுவார்கள் என்று உறுதி அளிக்கிறோம்.
பிராமண சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் வைதீக தொழில் செய்தும், சமையல் தொழில் செய்தும், மிகவும் ஏழ்மை நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறார்கள். எனவே எங்கள் சமுதாயத்தினருக்கும் கல்வி மற்றும் இதர அரசு சலுகைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். எங்களது ஆதரவு கடிதத்தை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலில் டாஸ்மாக் பணியாளர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு :
ஊதிய உயர்வு வழங்கிய திமுகவுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலா ளர் ஜம்பு வெளியிட்ட அறிக்கை:
டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை ஊதிய உயர்வு, தொடர்ந்து நான்கு ஆண்டாக 20 சதவீத போனஸ், விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை 1.5 சதவீதமாக உயர்வு, 8 மணிநேர வேலை உள்ளிட்ட சலுகைகளை திமுக அரசு வழங்கியுள்ளது. பணியில் இருக்கும்போது இறக்கும் பணியாளர்களின் குடும்பத்துக்கு உதவித்தொகையை `௧ லட்சத்தில் இருந்து `1.௫0 லட்சமாக உயர்த்தியது. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கருத்து சுதந்திரம் இல்லாமல் இருந்தனர். தற்காலிக டாஸ்மாக் மேலாளர்கள் மூலம் நசுக்கப்பட்டனர். திமுக ஆட்சியில்தான் பணியாளர்களுக்கு தொமுச., ஐஎன்டியுசி, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் சார்பில் சங்கம் வைக்க அனுமதியும், கருத்து சுதந்திரமும் கிடைத்தது.
கடந்த 5 ஆண்டாக டாஸ்மாக் பணியாளர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் பணியாற்றி வருகின்றனர். திமுக அரசு, தொழிலாளர்களின் பாதுகாவலராக விளங்கி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற இச்சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது.
இவ்வாறு ஜம்பு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment