கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, April 3, 2011

வேலூர் மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு : கருத்துக் கணிப்புகள் மூலம் வெற்றி மாயை ஏற்படுத்த முயற்சி - முதல்வர் கலைஞர் குற்ற்றச்சாட்டு





கருத்துக் கணிப்பு மூலம் வெற்றி மாயை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன’ என்று முதல்வர் கருணாநிதி மீண்டும் குற்றஞ்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் 11ம் தேதி மாலையுடன் ஓய்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன், ஜி.கே.வாசன் உட்பட பல்வேறு தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை கோவையில் இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் கருணாநிதி 02.04.2011 அன்று வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
சேலத்தில் இருந்து வேலூர் மாவட்ட எல்லையான நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் லட்சுமிபுரம் கிராமத்துக்கு 02.04.2011 அன்று மதியம் ஒரு மணிக்கு கருணாநிதி வந்தார்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு ஜோலார்பேட்டை தொகுதி பாமக வேட்பாளர் பொன்னுசாமி, திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன், வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல்பாஷித் ஆகியோருக்கு ஆதரவு கேட்டு கருணாநிதி பேசியதாவது:
அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கவும், ஏழை எளியோர்கள் நலத்திட்ட உதவிகளை பெற்று ஏற்றம் காணவும், அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேறவும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக அரசின் சாதனைகளை நினைத்துப் பாருங்கள்.
ஒவ்வொரு குடிமகனும் பயன்பெற்று வரும் அரசின் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த நீங்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். திமுக அரசு மட்டும்தான் ஏழை எளியோருக்கு நன்மை செய்யும். மாற்று அணியினர் பெருவாரியாக வெற்றி பெற்றுவிடுவதைப் போலவும், அவர்கள்தான் ஆட்சி அமைப்பார்கள் என்றும் சில ஊடகங்களும், பத்திரிகைகளும் வேண்டுமென்றே மாயையை ஏற்படுத்தி வருகின்றன. அதை நம்பாதீர்கள். அவர்கள் வரமாட்டார்கள். வந்தால் எந்த நன்மையும் நாட்டு மக்களுக்கு கிடைக்காது.
இதையெல்லாம் மனதில் கொண்டு, மீண்டும் கழக அரசு மலர திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து புத்துகோயில், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இடங்களிலும் முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்தார்.
வழியெங்கும் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் முதல்வர் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

No comments:

Post a Comment