கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 1, 2011

மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 51 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 45 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இந்த அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி 51 சதவீதமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசு ஆணை 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
மாநில அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊழியத்தில் 45 சதவீதம் அகவிலைப்படி 1.7.2010 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2011 முதல் அகவிலைப்படியை 45 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்தி அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த ஆணையை பின்பற்றி, தற்போது மாநில அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது. அதன்படி, அகவிலைப்படி அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 51 சதவீதமாக வழங்கப்படும். இது 1.1.2011ல் இருந்து வழங்கப்படும்.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை 1.1.2011 முதல் ரொக்கமாக வழங்கப்படும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு உண்டான அகவிலைப்படி நிலுவைத் தொகை, மார்ச்&2011ம் மாத சம்பளம் வழங்கப்பட்ட பின்னரே வழங்கப்படும்.
திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடும்போது ஒரு ரூபாய்க்கு குறைவாக வரக்கூடிய தொகை, அது 50 காசும் அதற்கு மேலும் இருந்தால், அது அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிடப்படும். அதுவே, 50 காசுக்கு குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்படும்.
திருத்தப்பட்ட அகவிலைப்படி, தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேர ஊழியர்களுக்கும், சில்லரைச் செலவு நிதியில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர ஊழியர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். பகுதி நேர ஊழியர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.
திருத்தப்பட்ட அகவிலைப்படி, அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கும், உள்ளாட்சி ஊழியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் ஊழியர்கள், அரசு மற்றும் மானியம் பெறும் பல்தொழில் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டய படிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரியும் பஞ்சாயத்து உதவியாளர்கள், கிளார்க்குகள் ஆகியோருக்கும் பொருந்தும்.

இவ்வாறு தமிழக அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment