மதுரை மத்திய சிறையில் ரித்திஷ் எம்.பி.யை பார்த்து விட்டு வந்த பின்னர் நடிகர் வடிவேலு கூறியதாவது:
கருணாநிதியின் தேர்தல் பிரசாரத்தை கேட்டு, மக்கள் எழுச்சி அடைந்துள்ளனர். ஏழையோடு ஏழையாக நான் வாழ்ந்ததால் ஏழை மக்களை உணர்ந்து சொல்கிறேன். திமுக தலைமையில் நல்ல கூட்டணி அமைந்துள்ளது. முதல்வர் கருணாநிதி ஆட்சியில் மருத்துவமனை வீடு தேடி வருகிறது. இலவசங்களை கொடுத்து கெடுக்கிறார்கள் என சிலர் கூறுகின்றனர். ஒரு ஏழைக்கு இந்த இலவசங்கள் எவ்வளவு உதவியாக இருக்கும் தெரியுமா. கருணாநிதியின் ஆட்சியில் தாயின் வயிற்றில் வளரும் சிசு கூட மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து கொடுக்கிறது. அவர் 6வது முறையாக முதல்வராக வருவார். அப்போது சொல்லாததும், மக்கள் கேட்காத திட்டங்களும் கிடைக்கும். இந்த தேர்தலில் தேமுதிக ஜெயிக்கப்போவது இல்லை. அது கட்சி அல்ல, கடை. விஜயகாந்த் பக்கத்து வீட்டில் வசிக்கிறேன். அவரை வருங்கால முதல்வர் என என்னை அழைக்கச் சொன்னார்கள், நான் மறுத்தேன். இதனால் என் வீட்டை அடித்து நொறுக்கி, எனது மகனை காயப்படுத்தினர். பக்கத்து வீட்டை சேர்ந்த என்னை காப்பாற்றவே அவரால் முடியவில்லை. அவர் எப்படி நாட்டை காப்பாற்றுவார்.
ஒரு படத்தில் மனோபாலாவை பார்த்து நான் சொல்வேன், ‘உன்னை தெரியாம போலீசு வேலைக்கு சேர்த்துட்டாய்ங்க’ என்று. அது போல 41 சீட் கொடுத்து தெரியாம கூட்டணியில் உன்னை சேர்த்துட்டாய்ங்க.
இவ்வாறு வடிவேலு கூறினார்.
No comments:
Post a Comment