கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

முதல்வராக இருந்த போது திருமண உதவி திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா -


முதல்வராக இருந்த போது ஏழைப் பெண்களின் திருமண உதவி திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா என்று திருவில்லிபுத்தூரில் பாக்யராஜ் பேசினார்.
திருவில்லிபுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் துரையை ஆதரித்து நடிகர் பாக்யராஜ் 28.03.2011 அன்று இரவு பேசியதாவது:

முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது திமுக தான். எதிரணியில் சீட்டுக்காக சண்டையிடவே நேரம் சரியாய் போய்விட்டது. அதனால் அவர்களுக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்க நேரம் இல்லை.
குளத்தில் ஒருவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன், 'தூண்டிலில் மீன் மாட்டி விட்டது. வெளியே எடு’ என்று கூறியிருக்கிறான். அதற்கு, ‘நீயே என் கையை வெளியே தூக்கி விடேன்’ என்று மீன் பிடித்தவன் கேட்டானாம். வழிப்போக்கனும் கையை வெளியே எடுத்து விட்டான். ‘அப்படியே அந்த மீனை எடுத்து கூடையில் போடு’ என்று கேட்டிருக்கிறான். வழிப்போக்கன் அதையும் செய்தான். ‘தூண்டில் பிடித்திருக்கும் கையை திரும்பவும் குளத்து பக்கம் திருப்பி விடு’ என்றான் மீன் பிடிப்பவன். வெறுத்து போன வழிப்போக்கன், ‘வேலை செய்ய இவ்வளவு சிரமப்படறியே. கல்யாணம் செய்து கொள். உனக்கு பிறக்கிற பையன் கூடமாட உதவியாக இருப்பான்‘ என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறான். ‘நீயே பெண் பார். அதுவும் நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக பார்‘ என்றானாம். அது போல இருக்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. ஏற்கனவே தயாரித்து ரெடியாக இருந்த திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே எடுத்து வாசித்து விட்டார் ஜெயலலிதா.
திருமண உதவித்திட்டத்தில் 4 கிராம் தங்கம் தருவேன் என்கிறார். இவர் முதல்வராக இருந்த போது ஏழைப் பெண்களின் திரு மண உதவித்திட்டத்தையே நிறுத்தினார். கரும்புக்கு கொள்முதல் விலையை விவசாயிகள் ஆயிரம் ரூபாயாக கேட்டபோது மறுத்த ஜெயலலிதா, இப்போது 2 ஆயிரத்து 500 தருவேன் என்கிறார். ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள். .

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment