கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 3, 2011

திமுக -காங்கிரஸ் : 3 வது கட்ட பேச்சுவார்த்தைதி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 31 தொகுதிகளும், விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகளும், கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகளும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.


இதற்கிடையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவினரும், காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவினரும் ஏற்கனவே இரு முறை சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக சோனியாகாந்தியின் தூதராக, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் 02.03.2011 அன்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தி.மு.க. எம்.பி. கனிமொழி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார் முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்ததும் குலாம் நபி ஆசாத் நேராக தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு அவரை துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அறிவாலயத்தில் குலாம் நபி ஆசாத், முதல் அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் முதல் அமைச்சர் கருணாநிதியுடன் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத்துடன் கே.வி.தங்கபாலு பங்கு கொண்டார். இரவு 9.20 மணி முதல் 11 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சு வார்த்தை முடிந்ததும் முதல் அமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


கேள்வி: காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது?


பதில்: நாளை (இன்று) மீண்டும் பேசுவார்கள்.


கேள்வி: தி.மு.க. கூட்டணியில் வேறு கட்சிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதா?


பதில்:
இடமே இல்லை.


இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.


No comments:

Post a Comment