சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து, திமுக தலைமைக் கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
கடந்த 27ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விருப்ப மனுத்தாக்கல் செய்ய அண்ணா அறிவாலயத்தில் 02.03.2011 அன்று திமுகவினர் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். இயந்திரங்கள் உதவியுடன், கணக்கிட்டு தொகைகளை ஊழியர்கள் பெற்றனர்.
பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு மனுத் தாக்கல் செய்தார். இதேபோல அமைச்சர்கள் எ.வ.வேலு - திருவண்ணாமலை, சுரேஷ்ராஜன் - கன்னியாகுமரி, தமிழரசி - சோழவந்தான், தா.மோ.அன்பரசன் - ஆலந்தூர், அனிதா ராதாகிருஷ்ணன் - திருச்செந்தூர், தெலுங்கு சம்மேளன தலைவர் சத்தியா தேவி - மயிலாப்பூர், கும்மிடிப்பூண்டி ‘கலைஞர் தமிழ் பேரவை’ தலைவர் திருநாவுக்கரசு - ஜோலார்பேட்டை, பெருமாள் - ஸ்ரீவைகுண்டம், மாணவர் அணி வாஞ்சிநாதன் - திட்டக்குடி, கள்ளக்குறிச்சி, பொன்.முத்துராமலிங்கம் மகன் சேதுராமன் - மதுரை (மத்திய), லதா அதியமான் & திருமங்கலம், மூக்கையா & கம்பம், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனுக்கள் தந்தனர்.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்காக ஏராளமானவர்கள் விருப்ப மனுக்கள் தந்தனர். திருவாரூரில் முதல்வர் கருணாநிதி போட்டியிட பூண்டி கலைச்செல்வன், அமைச்சர் மதிவாணன், ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. ஆகியோர் நூற்றுக்கணக்கான மனுக்கள் தந்தனர்.
No comments:
Post a Comment