கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 2, 2011

தமிழ்நாடு, புதுச்சேரி ஏப்ரல் 13ல் தேர்தல்


தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அசாமில் 2 கட்டங்களாகவும், நக்சல் பாதிப்பு நிறைந்த மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. இந்த 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அறிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக் காலம் மே மாதத்தில் முடிகிறது. தமிழகத்தில் மே 16, கேரளாவில் மே 23, புதுச்சேரியில் மே 28ம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. குறிப்பாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பணி முடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 99.85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மொத்த தொகுதிகள் 234
மொத்த வாக்காளர்கள் 4,59,50,620
வாக்குச்சாவடிகள் 54,016
மனு தாக்கல் துவக்கம் மார்ச் 19 (சனி)
மனு தாக்கல் கடைசி நாள் மார்ச் 26 (சனி)
மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 (திங்கள்)
வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30 (புதன்)
வாக்குப்பதிவு ஏப்ரல் 13 (புதன்)
வாக்கு எண்ணிக்கை மே 13 (வெள்ளி)
முதல்முறை என்.ஆர்.ஐ.க்கு வாக்குரிமை
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்திய தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளிக்க வழிவகை செய்யப்பட்டது. அவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், தேர்தலின் போது இந்தியாவில் இருப்பவர்கள் அல்லது இந்தியாவுக்கு வந்து வாக்களிக்க வேண்டும். இந்த விதி முதல்முறையாக தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களில் அமல்படுத்தப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக் காலம் மே மாதத்தில் முடிகிறது. தமிழகத்தில் மே 16, கேரளாவில் மே 23, புதுச்சேரியில் மே 28ம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. குறிப்பாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பணி முடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 99.85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகள், விழாக்கள், உள்ளூர் விடுமுறைகள், பருவநிலை போன்ற பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி டெல்லியில் 01.03.2011 அன்று
கூறுகையில், ‘’தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். நக்சல்கள் பாதிப்பு அதிகம் உள்ள அசாமில் 2 கட்டங்களாகவும் மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கும். இந்த 5 மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும்” என்றார்.
இதன்படி தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 3 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கை இந்த மாதம் 19ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இவற்றில் எஸ்.சி.க்களுக்கு 44, எஸ்.டி.க்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் 140 தொகுதிகளில் எஸ்.சி. 14, எஸ்.டி.க்கு 2 தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் எஸ்.சி.க்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்.டி.க்களுக்கு இங்கு தனித்தொகுதி இல்லை.
ஏப்ரல் 13ம் தேதி நடக்கும் தேர்தலில் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 16 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தலை அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்கள் தேர்தல் செலவை கண்காணிக்கும் பார்வையாளர்கள், தேர்தல் நாளன்று காலை முதல் வாக்குப் பதிவு முடியும் வரை கண்காணிப்பில் ஈடுபட சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அத்துடன் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் நிலை மைக்கு ஏற்பவும், பதற்றம் நிறைந்த தொகுதிகளிலும் துணை ராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment