இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் 05.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எல்.சந்தானம், மாநிலத் தலைவர் இருளாண்டித் தேவர், அமைப்பு செயலாளர் சுகுமாரன், மாநில இளைஞர் அணி செயலாளர் இளங்கோவன், பி.கே.எம்.அறக்கட்டளைத் தலைவர் ஓ.செல்வராஜ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முதல் அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதோடு, தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பாடுபடுவதாக என்று உறுதி அளித்தனர்.
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தின் தலைவரும், மண்பாண்ட தொழிலாளர்கள் வாரியத் தலைவருமான சேம.நாராயணன், பொதுச்செயலாளர் பாவலர் ம.கணபதி தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவையின் மாநில தலைமை நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாக்கர் அலி, ஒலிசுல்தான் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு பாரதிய குடியரசு கட்சியின் நிறுவனத் தலைவர் கே.ராகவன் மற்றும் மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு அன்னை தெரசா பொதுநலசேவை சங்கத்தின் மாநில தலைவர் இரா.சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் ஆசை.தாமஸ், பொருளாளர் சி.பா.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முதல் அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிபெற ஆதரவு அளிப்பதோடு, தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம் என்று உறுதி அளித்தனர்.
அப்போது துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், க.பொன்முடி, எ.வ.வேலு, கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்பு செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment