கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 7, 2011

தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் கல்வித்துறையில் நிகழ்த்திய சாதனைகள் - முதல்வர் கலைஞர் பட்டியல்


தி.மு.க ஆட்சி செய்த இந்த 5 ஆண்டுகளில் கல்வித் துறையில் நிகழ்த்திய சாதனைகளை முதல்வர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.
இது குறித்து அவர் 06.03.2011 அன்று எழுதிய கடிதம் வருமாறு:
பொறியியல் கல்லூரிகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் திருச்சி, கோவை, நெல்லை, மதுரை, சென்னை ஆகிய 5 இடங்களில் அண்ணா தொழில் நுட்ப பல்கலைக் கழகங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. 2001&2006 ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஆண்டிப்பட்டி, சாத்தான்குளம், கூடலூர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே புதிய அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால் 2006&2011 ஐந்தாண்டு காலத்தில் திமுக அரசு மேட்டூர், வால்பாறை, பெரம்பலூர், ஒரத்தநாடு, சுரண்டை, குளித்தலை, லால்குடி, புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பென்னாகரம், ஆகிய 12 இடங்களில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை புதிதாக தொடங்கியுள்ளது.
2001&2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றுகூட தொடங்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் நடப்பாண்டில் தேனி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கரூர், பெரம்பலூர், மதுரை மாவட்டம்,மேலூர் ஆகிய 8 இடங்களில் புதிய அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. அதில் 1731 மாணவர்கள் கூடுதலாக படிக்க வகை செய்து ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் தொழில் நுட்பக் கல்வி பெற வழிவகுத்துள்ளது.
தென்னிந்தியாவிலேயே பழமையான கல்லூரியான, மாநிலக் கல்லூரி
ஸீ3
கோடியே 23 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு புதிய பொலிவு பெற்றுள்ளது. சென்னை மாநகரில் உள்ள பழமை வாய்ந்த பாரதி மகளிர் கல்லூரி, ராணி மேரிக் கலைக் கல்லூரி, காயிதே மில்லத் கலைக் கல்லூரி ஆகியவற்றில் சிதிலமடைந்த கட்டடங்கள்
ஸீ1
கோடியே 50 லட்சம் செலவில் செப்பனிடப்பட்டுள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
ஸீ64
கோடியே 58 லட்சம் செலவில் 1142 கூடுதல் வகுப்பறைகள், 60 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
ஸீ8
கோடியே 64 லட்சம் செலவில் 188 கழிவறைத் தொகுப்புகள், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
ஸீ1
கோடியே 3 லட்சம் செலவில் சுற்றுச் சுவர்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
அரசு பொறியியல் கல்லூரிகளில் 5 மின்னணு நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி, அரசினர் பொறியியல் கல்லூரியின் புதிய விடுதியில் கூடுதல் அறைகள்
ஸீ75
லட்சம் மதிப்பீட்டில் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஸீ22
லட்சம் மதிப்பில் வேலூர், தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் உள்ள மகளிர் விடுதியில் உணவு அருந்து கூடம்,
ஸீ75
லட்சம் செலவில் பர்கூர், அரசினர் பொறியியல் கல்லூரியில் மாணவியர் விடுதி,
ஸீ85
லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியின் நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளில் 21 மொழி ஆய்வகங்கள்,
ஸீ42
லட்சம் செலவில் மதுரை, தமிழ்நாடு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் நூலகக் கட்டட விரிவாக்கப்பணிகள், சென்னை , டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரியில்
ஸீ185
லட்சம் மதிப்பிலும், திருச்சி அரசு பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரியில்
ஸீ40
லட்சம் மதிப்பீட்டிலும், எட்டயபுரம், அரசு மகளிர் பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரியில்
ஸீ100
லட்சம் மதிப்பீட்டிலும் மொத்தம்
ஸீ3
கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
நாகர்கோவில் அரசு மகளிர் பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரியில்
ஸீ50
லட்சம் செலவில் புதிய நூலகக் கட்டடம், மதுரை தமிழ்நாடு பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரி நூலகத்துக்கு
ஸீ42
லட்சம் செலவில் விரிவாக்க கட்டடம் ஆகியவை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சேர்காடு மற்றும் விண்ணம்பள்ளி கிராமங்களில் 340 ஏக்கர் பரப்பில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு தி.மு.க அரசு
ஸீ16
கோடியே 70 லட்சம் நிதி வழங்கி புதிய பல்கலைக் கழக வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டடம் 27.11.2010 அன்று திறந்து வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், மேலக்கோட்டையூர் கிராமத்தில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்துக்கு
ஸீ8
கோடியே 15 லட்சம் செலவில் புதிய பல்கலைக் கழக வ ளாகம் கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில்
ஸீ45
லட்சம் செலவில் கருத்தரங்கக் கூடம் கட்டப்பட்டுள்ளது.
2001 முதல் 2006ம் ஆண்டு வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2006&2007ம் ஆண்டு முதல் 2008&2009ம் ஆண்டுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2594 ஆசிரியர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டனர். அதில் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான 522 பின்னடைவுப் பணியிடங்களும் சிறப்பு நியமன முறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
மேலும், 1024 கல்லூரி ஆசிரியர்களை நியமித்திட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து , 838 கல்லூரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2600 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முந்தைய அதிமுகவின் 2001&2006 வரையிலான 5 ஆண்டு கால ஆட்சியில், அரசு பொறியியல் கல்லூரிகளில் 77 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். திமுக அரசு 2006&2007ம் ஆண்டு முதல் 2009&2010ம் ஆண்டு வரையில் அரசு பொறியியல் கல்லூரிகளில் 121 ஆசிரியர்களையும், 115 ஆசிரியரல்லாப் பணியாளர்களையும் நியமித்துள்ளதுடன் 2010&2011ம் ஆண்டில் மேலும் 100 ஆசிரியர் களை நியமித்திட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. திமுக அரசு 2006&2010ம் ஆண்டு வரை அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளில் 181 ஆசிரியர்களையும், 147 ஆசிரியரல்லா பணியாளர்களையும் நியமனம் செய்துள்ளது. உயர்ந்தபட்ட ஊதியத்தை அடைந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு அதிக பட்சம் மூன்று தேக்கநிலை ஊதிய உயர்வுகளையும் திமுக அரசு அளித்துள்ளது.
2006&2007ம் ஆண்டு முதல் 2010&2011ம் ஆண்டு வரையில் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்கலைக் கழகங்களில் ஒரு துறையை தேர்வு செய்து, அத்துறையை உயராய்வு மையமாக மேம்படுத்த இந்த அரசு முடிவு செய்தது. அதன்படி கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நானோ தொழில் நுட்பத் துறை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உயிர்அறிவியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகத்தில் குற்றவியல் மற்றும் சைபர் கிரைம் துறை, சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நானோ தொழில் நுட்பத் துறை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச் சூழல் அறிவியல் மையம் ஆகியவற்றுக்கு தலா
ஸீ1
கோடி நிதி வழங்கி, அவற்றை உயராய்வு மையங்களாக இந்த அரசு உருவாக்கியுள்ளது.
ஆண்டுதோறும்
ஸீ30
லட்சம் செலவில் அறிவியல் நகரம் சார்பில் அறிவியல் விழா சென்னையில் 5 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களால் கண்காட்சி அரங்குகள் வைக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் இடையே அறிவியல் மற்றும் சமூகவியலில் ஆராய்ச்சி மனப் பான்மையை ஏற்படுத்துவதற்காக 10256 மாணவர்களுக்கு தலா
ஸீ5
ஆயிரம் வீதம் மத்திய அரசின் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment