திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு செயல்திட்டங்களையும் சலுகைகளையும் திமுக அரசு செய்துள்ளது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 10.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2006ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த அரசு தமிழ்நாட்டில் உள்ள 12,618 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 29 மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல்களை நடத்தியது.
ஊரகப் பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் 76 சதவீத மக்கள் வாக்களித்து, 29 மாவட்ட ஊராட்சி தலைவர்கள் 385 ஒன்றியக் குழு தலைவர்கள், 12,618 கிராம ஊராட்சித் தலைவர்கள் 656, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 6570, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 97,458, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 1,07,716 மக்கள் பிரதிநிதிகள் வெற்றிகரமாக தேர்வு செய்யப் பட்டனர். 1996ல் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு, தமிழ்நாட்டில் முதல் முறையாக மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீடுகளை அமல்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தியது. அதே அடிப்படையில் 2006 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் ஏறத்தாழ 40 ஆயிரம் மகளிர் 4 மாநகராட்சி மேயர் பொறுப்பு உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்று மக்களாட்சித் தத்துவத்தின் வெற்றி முத்திரைகளாக விளங்குகின்றனர்.
பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப் படாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு அக்டோபர் 2006ல் வெற்றிகரமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள் கிராம சமுதாயத் தலைவர்கள் ஆகியோரை அழைத்து சென்னையில் 13.11.2006 அன்று சமத்துவப் பெருவிழா நடத்தி சிறப்பிக்கப் பட்டது.
விவசாயிகளின் வரிச் சுமையைக் குறைத்திட 2009 டிசம்பரில் சட்டம் இயற்றப்பட்டு தலவரி மற்றும் தலமேல் வரி வசூலிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சிறப்பான மற்றும் புதுமையான முயற்சிகளைச் செயல்படுத்தும் 15 கிராம ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்து உத்தமர் காந்தி ஊராட்சி விருது வழங்கும் திட்டம் 2006 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, விருது பெறும் கிராம ஊராட்சிகளுக்கு கேடயமும், ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசும், கிராம ஊராட்சித் தலைவர்களுக்குப் பதக்கமும் நற்சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூகப்பொறுப்பின் ஒரு பகுதியாக பாராட்டத்தக்க வகையில், பல்வேறு சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் 2007&08ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், நற்சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்ட பயணப்படி 220 ரூபாய் என்பதை 400 ரூபாய் என்றும், மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்ட பயணப்படி 1100 ரூபாய் என்பதை 1500 ரூபாய் என்றும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்ட பயணப்படி 330 ரூபாய் என்பதை 500 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கியது.
மாவட்ட ஊராட்சி ஒரு பணிக்கு ரூபாய் 10 லட்சத்திற்கும் மிகாமல் நிர்வாக அனுமதி வழங்கலாம் என்பதை ரூ.20 லட்சம் வரை அனுமதி வழங்கலாம் என்றும், நிறைவேற்றப்படும் பணிகளுக்குத் தொழில்நுட்ப அனுமதி வழங்குவதற்குப் பொறியாளர் களுக்கான அதிகாரத்தினை உயர்த்தவும் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளைப் பொறுத்தவரை பொறியியல் பிரிவு அலுவலர்களுக்கான அளவீடு மற்றும் மேல் அளவீடு செய்யும் அதிகாரத்தினைச் சீரமைத்திடவும் 20.12.2007 அன்று இந்த அரசு ஆணையிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அனைத்துக் கிராம ஊராட்சி அலுவலகங்களுக்கும் தொலைபேசி வசதிகளையும், 2006&07 மற்றும் 2007&08ம் ஆண்டில் வழங்கப்பட்ட ஊராட்சிகள் திறமையாகவும் பொறுப்பாகவும் செயல்படுவதை ஊக்குவிக்கும் திட்ட நிதியினைக் கொண்டு, 29 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 385 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்களின் அலுவலக உபயோகத்திற்காக கணினி மற்றும் அச்சுப் பொறி களையும் அரசு வழங்கியது.
மத்திய அரசிடமிருந்து பெறப்படும் பன்னிரெண்டாவது நிதிக் குழு மான்யம் முழுமையையும் கிராம ஊராட்சிகளுக்கு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது 2006&07ம் ஆண்டு இரண்டாவது அரையாண்டு முதல் ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், 2010&11ம் ஆண்டிற்கான பதிமூன்றாவது நிதிக் குழு மான்ய நிதி 286 கோடி ரூபாய் கிராம ஊராட்சிகளுக்கு விடுவிக் கப்பட்டுள்ளது.
தலவரி, தலமேல் வரி, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் கேளிக்கை வரி இவை மூலமான வருவாய் இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் மாவட்ட அளவில் தொடர்புடைய ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளுக்கு ஈடு செய்யப்பட்டது. குடிசைகளில்லாக் கிராமப்புறங்கள், குடிசைப் பகுதிகளில்லா நகரங்கள் கொண்ட தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து ஓலைக் குடிசை வீடுகளையும் கான்கிரீட் மேற்கூரை யுடன் கூடிய நிலையான வீடுகளாக மாற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010&11 முதல் 2015&16 வரையிலான 6 ஆண்டு காலத் திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கான முதலாம் ஆண்டில் 3 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பயனாளி ஒருவருக்கு மாநில அரசு 75 ஆயிரம் ரூபாயை மானியமாக வழங்குகிறது. 28.2.2011 வரை 75,000 கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட் டுள்ளன.
31.3.2011க்குள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கான்கிரீட் வீடுகளும், 15.4.2011க்குள் 2 லட்சம் கான்கிரீட் வீடுகளும் கட்டி முடிக்கப்படும். இத்திட்டத்திற்கு இதுவரை 1082 கோடி அரசு செலவிட்டு உள்ளது. மேலும், 12 லட்சம் பயனாளிகளுக்குத் தகுதி அட்டைகள் வழங்கப்பட் டுள்ளன. இரண்டாம் கட்டமாக, மேலும், 3 லட்சம் குடிசைகள் இத்திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டு, 2011 பிப்ரவரியில் பயனாளிகளுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனவரி 2007ம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்ட அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டமே மாநில அரசுத் திட்டங்களில் மிகப்பெரிய திட்டமாகச் செயல் படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment