கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 9, 2011

தி.மு.க கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிப்பு


சட்டப் பேரவை தேர்தலில் திமுக 121 தொகுதிகளிலும், காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சிக்கு 30 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 10, கொங்கு முன்னேற்ற கழகம் 7, முஸ்லிம் லீக் 2, மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.
முன்னதாக தொகுதிகள் பங்கீடு தொடர்பாக திமுக & காங்கிரஸ் இடையே இரு நாட்களாக நிலவிய சிக்கலுக்கு டெல்லியில் தீர்வு காணப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் தருவதாக கூறியிருந்த திமுக, அக்கட்சியின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து 61 தொகுதிகள் தர முன்வந்தது. பா.ம.க.வும் முஸ்லிம் லீகும் தலா ஒரு தொகுதியை விட்டுத் தர முன்வந்ததால் காங்கிரசின் கோரிக்கையை திமுக நிறைவேற்ற முடிந்தது. இதையடுத்து சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதாக தமிழக காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
தொகுதி ஒதுக்கீடு குறித்து திமுக, காங்கிரஸ் குழுவினர் சென்னையில் சென்ற வாரம் இரு முறை சந்தித்து விவாதித்தும் முடிவு எட்டவில்லை. குலாம் நபி ஆசாத் வந்து பேசியபோது 63 தொகுதிகள் வேண்டும் என்றும், தாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டார். அதை திமுக ஏற்கவில்லை. கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகளுடன் கூடுதலாக 12 தருவதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பதை பேசி முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டது. அதற்கு காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. இதனால் சிக்கல் ஏற்பட்டது.
திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூடியது. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படும் என்றும் அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 07.03.2011 அன்று முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசி, ஒரு நாள் அவகாசம் கேட்டார். அதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் கள் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் 07.03.2011 அன்று இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் பிரணாப் முகர்ஜியை அவர்கள் சந்தித்து பேசினர். அப்போது முதல்வருடன் பிரணாப் பேசினார். அப்போது உடன்பாடு ஏற் பட்டது. இந்த தகவலை பிரணாபும் ஆசாத்தும் சோனியா காந்தியிடம் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து காங்கிரஸ், திமுக தலைவர்களின் கூட்டம் சோனியா வீட்டில் 08.03.2011 அன்று மாலை 6.40 மணிக்கு நடந்தது.
காங்கிரஸ் அமைச்சர்களுடன், அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்ட முடிவில் குலாம்நபி ஆசாத் நிருபர்களை சந்தித்தார். ‘திமுக & காங்கிரஸ் கூட்டணி தொடரும். எங்கள் கூட்டணி இணைந்து செயல்பட்டு வெற்றி பெறும். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’ என்றார்.
பின்னர் அழகிரி தன் வீட்டில் நிருபர்களிடம் பேசியபோது, ‘எந்தெந்த தொகுதிகள் காங்கிரசுக்கு, எந்த தொகுதிகளில் திமுக போட்டியிடுவது என்பதை இரு கட்சிகளின் தலைவர்களும் பேசி முடிவு செய்வார்கள். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வெற்றிக்காக பாடுபடுவோம். கூட்டணி வெற்றிபெறும்’ என்று கூறினார்.

திமுக காங்கிரஸ் உடன்பாட்டுக்குப்பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி,

" காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகள் எவை எவை என்பது பேசி முடிவெடுக்கப்படும். திமுக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து தொகுதிகளை தீர்மானிப்பர். தேர்தல் வெற்றிக்கு வழிகளை வகுப்பதே அடுத்த கட்ட நடவடிக்கை " என்றார்.


யாருக்கு எவ்வளவு?
தி.மு.க. - 121
காங்கிரஸ் - 63
பா.ம.க. - 30
வி.சி.க - 10
கொ.மு.க. - 7
முஸ்லிம் லீக் - 2
மூ.மு.க - 1
மொத்தம் - 234

No comments:

Post a Comment