கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, March 5, 2011

அனைத்து கட்சி கூட்டம்:தி.மு.க., பா.ம.க. கோரிக்கைதமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கள் கட்சிகளின் கூட்டத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் 04.03.2011 அன்று கூட்டியிருந்தார்.

தலைமை செயலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தி.மு.க. சார்பில் அமைச்சர் பொன்முடி, கட்சியின் அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், டி.யசோதா, பா.ம.க. சார்பில் வக்கீல்கள் பாலு, ஜோதி, அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,

பாலகங்கா எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகநயினார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில துணை செயலர் ஜி.பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் மகேந்திரவர்மன், ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 21/2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், தேர்தல் விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய விளக்கங்களை வீடியோ படக் காட்சிகள் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விரிவாக எடுத்துக் கூறினார். கூட்டம் முடிந்து வெளியே வந்த அரசியல் கட்சியினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

அமைச்சர் பொன்முடி (தி.மு.க.): தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு செய்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறோம்.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை நிர்ணயித்துவிட்ட காரணத்தினால், அதே தேதியில் தேர்தல் நடத்தினாலும் அந்த தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக இருக்கிறது. பிரசார நேரத்தை, கிராமம், நகரம் என்று இல்லாமல் அனைத்து இடத்திலும் இரவு 11 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.


பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. (காங்கிரஸ்): அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்ற சிரமங்களை நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் தவறான நடத்தை இருந்தால் உடனே தகவல் சொல்ல வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை கொடுக்கிறார்கள். அதிலே சொன்னால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட வேட்பாளரின் பிரச்சாரத்தை முடக்குவதற்காகவோ அல்லது ஒரு அரசியல் கட்சியின் பிரசாரத்தை முடக்குவதற்காகவோ யாராவது தவறாக அந்த மாதிரி புகார் கொடுத்தால் அவர்கள் மீது அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அதை பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்.


வீடுகளில் விளம்பரம் செய்வதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று விதி இருக்கிறது. எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடப்பதால் அத்தனை வீடுகளுக்கும் கலெக்டரிடம் அனுமதி வாங்க முடியாது. எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதற்காக தனியே ஒரு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டோம். அதையும் அவர்கள் பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.


தேர்தல் ஆணையமும், மாநில தலைமை தேர்தல் அதிகாரியும் எடுக்கின்ற எல்லா முயற்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முழுமையான ஒத்துழைப்பு தருவோம். தேர்தல் தேதியை, அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் அவர்கள் அறிவித்தது பற்றி எங்களது வருத்தத்தை தெரிவித்து உள்ளோம்.

ஆனாலும், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கின்ற தேதியில் தேர்தல் நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தரும் என்று தெரிவித்து இருக்கிறோம்.

வக்கீல் பாலு (பா.ம.க.): தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேதியில், தேர்தலை சந்திக்க பா.ம.க. தயாராக உள்ளது. தேர்தல் பிரசார நேரத்தை இரவு 11 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அதை பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சொல்லியுள்ளார்.


No comments:

Post a Comment