கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 9, 2011

திமுக கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளது - முதல்வர் கருணாநிதி


தேமுதிக கட்சியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழா அறிவாலயத்தில் 7.03.2011 அன்று நடந்தது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளராக பதவி வகித்த வந்தவர் முருகன். இவரது தலைமையில் நிர்வாகிகள் பால்ராஜ், முத்துக்குமார், செந்தில் முருகன், தங்கதுரை, நாகராஜ், கிருஷ்ணகுமார், மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் கருணாநிதி முன்னிலை யில் திமுகவில் இணைந்தனர். அவர்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
கன்னியாகுமரியில் இருந்து வள்ளூவரால் வழி அனுப்பி வைக்கப்பட்டு எங்களிடம் முருகன் வந்துள்ளார். இன்று மகிழ்ச்சியான நாள். எங்களோடு காலையில் இருந்து தொகுதி உடன்பாடு குறித்து நடந்த நீண்ட பேச்சுவார்த்தை இறுதியாக நிறைவு பெற்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய இயக்கங்களுக்கு இடையே முழுமையான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அணிக்கு மேலும் ஆக்கமும், ஊக்கமும் தரும் வகையில் விஜயகாந்த் கட்சியில் இருந்து இவர்களையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆயிரக்கணக் கான தம்பிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்கள் இன்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இன்று மகிழ்ச்சி யான நாள் என்றேன். எங்களை பத்திரிகையாளர்கள் வழிமறித்து ஒரு கேள்வி என்பார்கள். ஒரு கேள்வி கூட தேவையில்லை. பல கேள்விகளுக்கு பதிலாக ஒரு விளக்கத்தை, விபரத்தை கூற விரும்புகிறேன். திமுக உடனான தோழமை கட்சிகள் உடன்பாட்டில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்று கேட்பார்கள். திமுக 121, காங்கிரஸ் 63, பாமக 30, விடுதலை சிறுத்தைகள் 10, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1 இப்படி 234 தொகுதிகள் இன்று வகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இடையில் ஏதோ ஒரு இழுபறி, தயக்கம் என்ற நிலை இருந்தாலும் அதை பத்திரிகையாளர்கள் பலர் மிக மிக கேவலமாக ஆத்திரம், பொறாமை அசூயை மனதுடன் இந்த அணி உருவாகக் கூடாது. உறவு ஏற்பட்டு விடக் கூடாது என்று தவறான செய்திகளை, திசை திருப்பும் செய்திகளை திமுக தோழர்களை களைப்படையச் செய்யும் செய்திகளை வெளியிட்டார்கள். அவர்களுக்கு நல்ல பதிலாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது. இந்த பலத்தோடு மேலும் பலம் சேர முருகன் தலைமையில் ஒரு வேல் அல்ல இரண்டு வேல் அல்ல, வேல் படையே குவிந்தது போல நீங்கள் குவிந்துள்ளீர்கள்.
உங்களை நான் வரவேற்கிறேன். முருகன் நல்ல பேச்சாளராக இருக்கிறார். தேவையில்லாத இடத்தில் இருந்து தேவையுள்ள இடத்துக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார். திமுக, இந்த அணியில் உள்ள கட்சிகளுக்கு விட்டுத் தரும் மனப்பான்மை, தோழமை உணர்வு, நட்பு, நேசம் இதில் நீங்காத பற்றுக் கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக 121 இடங்களில் போட்டியிட்டு, மற்ற இடங்களில் தோழமை கட்சிகள் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கிறது. பாமகவிடம் ஒரு இடத்தை காங்கிரசுக்கு விட்டுத் தாருங்கள் என்று ராமதாசிடம் கேட்டதற்கு இணங்க ஒரு இடத்தை விட்டுத் தந்திருக்கிறார்கள்.
அதேபோல இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடம் இருந்தது. அவர்களும் ஒரு இடம் விட்டுத் தந்திருக்கிறார்கள். இதைக் கூட்டினால் 63 இடம் காங்கிரசுக்கு வந்திருக்கிறது. அவர்கள் நல்ல மனதுடன், பக்தி உணர்வோடு வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். 63 நாயன்மார்கள் என்பார்கள். அதுபோல இந்த இயக்கத்துக்கு புதிய வரவாக தேமுதிகவில் இருந்து முருகன் துணையாக வந்துள்ளார்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பழகன், சுரேஷ்ராஜன், மகளிர் ஆணைய தலைவி சற்குணபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment