விண்மீது கடவுள் உளர்.
என்றே விளம்புகின்றாரா சிலர்?
இல்லை! இல்லை! கடவுளர் ஆங்கிலை!
மூடமதியினர் மூடமதிக் கதைகூறி
முடமாக்க முனைகின்றார், இசையாதீர்!
காரணம் காட்டுவேன் கருத்தில்
கொண்டு உண்மை காண்பீர்!
கொலையோடு கொள்ளை சூது
சூழ்ச்சிகள் செய்திடும் மன்னர்
திருநகர் பலவும் தீக்கிரையாக்குவர்,
இச்செயல் புரிந்திடும் இவரெலாம்
சாந்தசீலர் தமைவிட இன்பமாய்
வாழ்கின்றார்! கடவுளை நம்பிடும் சிறுநாடு பல
கடவுள்நெறி இகழும் பேரரசுக்குப் பலியாயின!
படைபலம் கொண்டவன்
அடிமை கொள்கிறான்!
காஞ்சி ஆண்டு மலர் 1965
No comments:
Post a Comment