கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, March 5, 2011

திமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றம் - முதல்வர் கருணாநிதி பட்டியல்


விவசாயிகளுக்காக திமுக அரசு செய்துள்ள திட்டங்களையும் சலுகைகளையும் முதல்வர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 04.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் தெரிவித்தபடி ஏற்காட்டில் 75 ஏக்கரில் குறிஞ்சிப் பூங்கா, திண்டுக்கல் சிறுமலைப் பகுதியில் 25 ஏக்கரில் முல்லைப் பூங்கா, தஞ்சை சாக்கோட்டையில் 21.47 ஏக்கரில் மருதம் பூங்கா, நாகை திருக்கடையூரில் 14.61 ஏக்கரில் நெய்தல் பூங்கா, ராமநாதபுரம் அச்சடிப்பிரம்பு கிராமத்தில் 25 ஏக்கரில் பாலைப் பூங்கா என ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
கோவையில் அமையும் செம்மொழிப் பூங்காவுடன், சென்னை கதிட்ரல் சாலையில் ரூ.8 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாதவரத்தில் 28.16 ஏக்கர் பரப்பில் ரூ.5 கோடியே 93 லட்சம் செலவில் அலங்காரத் தோட்டம் மற்றும் செயல்விளக்கப் பூங்கா, குற்றாலத்தில் 36.78 ஏக்கர் பரப்பில் ரூ.5.92 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா, ஏற்காட்டில் 47.25 ஏக்கரில் ரூ.11.26 கோடி செலவில் தாவரவியல் பூங்கா ஆகியவை அமைக்கப்படுகின்றன. கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, அண்ணா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை ரூ. 1.59 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன.
வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் மூலம் உற்பத்தி அதிகரித்து, வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறை நீங்கி, செலவுகள் குறைந்து விவசாயிகளின் நிகர வருவாய் உயர்வதுடன் வேளாண் பணிகளிலுள்ள இடர்பாடுகளும் குறைகின்றன. 5 ஆண்டுகளில் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், அறுவடை இயந்திரங்கள் முதலிய வேளாண் இயந்திரங்கள் வாங்க 36813 விவசாயிகளுக்கு ரூ.86 கோடியே 71 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த வாடகையில் விடுவதற்காக 25 கதிர் அறுவடை இயந்திரம், 50 டிராக்டர்கள் ரூ.6 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளன. தானிய விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் இழப்பினைக் குறைக்க ரூ.4.80 கோடி செலவில் 200 உலர்களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முந்திரிக்கென பண்ருட்டியில் ரூ.16.54 கோடி மதிப்பீட்டில் வேளாண் ஏற்றுமதி மண்டலம் ஏற்படுத்தப்பட்டு, ரூ.1.53 கோடிக்கு முந்திரி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, காவல் கிணற்றில் ரூ.1.63 கோடி செலவில் மலர் ஏல மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2009&2010ல் நாளொன்றுக்கு ரூ.85756 மதிப்புள்ள 1500 கிலோ மலர்கள் 124 விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொங்கலூரில் வெங்காயத்திற்கு, கிருஷ்ணகிரியில் மாங்கனிக்கு, பாலக்கோட்டில் தக்காளி, தேனி ஓடைப்பட்டியில் திராட்சைக்கென குளிர்பதன வசதியுடன் வணிக வளாகம் தலா ஒரு கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.4 கோடி செலவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டுக்கோட்டைக்கு அருகில் பொன்னவராயன்கோட்டை, உக்கடை கிராமத்தில் தென்னை வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை நாவலூர், மதுரை முக்கம்பட்டி, பெருந்துறையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர விளைபொருளுக்கு நவீன உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி பகுதியில் சேகரிப்பு மைய வசதிகளுடன் கூடிய விற்பனை முனையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
சேலம் மேச்சேரியில் தக்காளி குளிர்பதனக் கிட்டங்கி, திருப்பூர் பெதப்பம்பட்டியில் தேங்காய் வணிக வளாகம் ஆகியவற்றுடன் 1.50 கோடி செலவில் 10 இடங்களில் ஊரக வணிக மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி, நாமக்கல் மோகனூர், தூத்துக்குடி திருவைகுண்டம், தேனி சின்னமனூர் ஆகிய இடங்களில் தலா 50 லட்சம் ரூபாய் செலவில் வாழை பழுக்க வைக்கும் நான்கு கூடங்கள், கோவை காரமடையில் ஒரு கோடி ரூபாய் செலவில் மலைக் காய்கறிகளுக்கென விற்பனை வளாகம், மதுரையில் 36 லட்சம் ரூபாய் செலவில் நெல் வணிக வளாகத்தில் கூடுதல் கடைகள் ஆகியவற்றுடன் 7.81 கோடி செலவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மதுரையில் காய்கறி வணிக வளாகம் 85 கோடி ரூபாய் செலவில் அமைக்க 30 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்புத் திட்டத்தின்கீழ் 132.63 கோடி முதலீட்டில் 31 வேளாண் வணிக நிறுவனங்களுக்கு தொழில் தொடங்குவதற்காக 12.15 கோடி வழங்கப்பட்டுள்ளது.
உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு நீர் வள நிலவளத் திட்டம் 63 துணை ஆற்றுப் படுகைகளில் ரூ.578.40 கோடி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 76444 எக்டர் பரப்பில் 112.69 கோடியில் 55 துணை நீர் வடிநிலப் பகுதிகளில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 936 விளைபொருள் குழுக்கள் அமைக்கப்பட்டு, வியாபாரிகளுடன் 558 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதுவரை, 64.03 கோடி மதிப்பிலான 50925 மெட்ரிக் டன் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு 15036 விவசாயிகள் ரூ.4.58 கோடி கூடுதல் வருமானம் பெற்றுள்ளனர். உலக வங்கியின் ஆய்வுக்குழு பாராட்டியுள்ளது.
3432 விவசாயிகள் ஆர்வலர் குழுக்கள் ரூ.3.36 கோடி ஒதுக்கீட்டில் 51285 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2008 வரை 5.15 கோடி செலவில் 8091 பண்ணை மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் தொடங்க பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
2008&2009ம் ஆண்டு 2025 குழுக்களுக்கு, குழுவிற்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் தொழில் தொடங்க 2.19 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 10116 குழுக்களை சார்ந்த 1.50 லட்சம் பண்ணை மகளிர் பயன்பெற்றனர். மேலும் 223 பண்ணை மகளிர் குழுக்களுக்கு 25% மானியத்தில் பண்ணைக் கருவிகள் ஒரு கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது.
தனியார்த் துறையில் 9 புதிய சர்க்கரை வளாகங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதில் 8 சர்க்கரை ஆலைகள், உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
வயலிலிருந்து ஆலை வரையான தூரத்திற்கு வாகனக் கட்டணத்தை ஆலைகளே ஏற்கின்றன. ஆலைகளில், இணைமின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் தமிழகம் முன்னோடியாகவுள்ளது. 19 தனியார் சர்க்கரை ஆலைகளில் 404.19 மெகாவாட் திறனுடைய இணைமின் உற்பத்தி நிலையங்களும், 3 கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் சிறிய இணை மின் நிலையங்களும் உள்ளன. ரூ.1125.63 கோடி செலவில் தமிழ்நாடு மின் வாரியம் மூலம் 183 மெகாவாட் திறன் கொண்ட இணைமின் உற்பத்தி நிலையங்கள் 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் அமைக்கப்படுகின்றன.
ஓராண்டிற்கு 960 லட்சம் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யக்கூடிய 9 உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளது. எரிசாராய உற்பத்தி பற்றாக்குறையினால் 5% எத்தனால் கலந்த பெட்ரோல் வழங்க இயலாத நிலை உள்ளது.
கழிவுப் பாகு உற்பத்தி அதிகரித்து, புதிய நிலையங்கள், உற்பத்தியைத் தொடங்கும்போது 5% எத்தனால் கலந்த பெட்ரோல் மாநிலத்தில் முழு அளவில் கிடைக்கும். எரிசாராயம் மற்றும் எத்தனால் ஆலைகள், செய்யாறு மற்றும் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் தலா 36 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படுகின்றன.
அரசின் சீரிய முயற்சியால் சேலம் மற்றும் அமராவதி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் 30 கிலோ லிட்டர் எரிசாராய உற்பத்தித் திட்டம் ஆகஸ்ட் 2008ல் தொடங்கப்பட்டது. மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை 15.10.2010ல் மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த அரவைப் பருவம் முதல் செயல்படும்.
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு 2009&2010 சர்க்கரைப் பருவத்திற்கு சிறந்த தொழில்நுட்பச் செயல் திறனுக்காக தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியசிவா ஆலை, கரும்பு மேம்பாட்டிற்காக சேலம் ஆலை, நிதி மேலாண்மைக்காக செய்யாறு ஆலைக்கு முதல் பரிசு வழங்கியுள்ளது.
விவசாயிகள் நிறைந்த நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட மாணவர்கள் பயன்பெற, நாகை கீவளூரில் வேளாண்மைக் கல்லு£ரியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும் இந்த ஆண்டு தொடங்கவுள்ளது.
ஐந்தாண்டுகளில் 56 புதிய பயிர் ரகங்கள், 20 பண்ணைக் கருவிகள், 20 மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, வேளாண்மை உற்பத்தி பெருகியுள்ளது.
இதைப்போலவே, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வேளாண்மை அலுவலர்களுக்கும் அடுக்கடுக்கான பல உதவிகளை செய்துள்ளது. 1972ல் திமுக ஆட்சியில்தான் வேளாண்மை அலுவலர்களுக்கு கெஜட்டட் தகுதி வழங்கப்பட்டது. 1989ல் கால்நடை உதவி மருத்துவர், உதவிப் பொறியாளர்களுக்கு இணையாக வேளாண்மை அலுவலர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த 131 உதவி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியமளித்து உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டது.
2007ல் துறை மறுசீரமைப்பில் 509 வேளாண்மை அலுவலர்கள் பணி இடங்களை உதவி வேளாண்மை இயக்குனர்களாகவும் 512 உதவி விதை அலுவலர் பணி இடங்களை துணை வேளாண்மை அலுவலர்களாகவும், 514 உதவி வேளாண்மை அலுவலர் பணி இடங்களை உதவி விதை அலுவலர்களாகவும், அதே போல 399 உதவி மண்வளப் பாதுகாப்பு அலுவலர் பணி இடங்களை இளநிலைப் பொறியாளர்களாகவும், பொறியியல் பட்டம் பெற்ற 54 உதவி மண்வளப் பாதுகாப்பு அலுவலர் பணி இடங்களை உதவிப் பொறியாளர்களாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
பணி நியமனத் தடைச் சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மொத்தம் 2632 பணி இடங்களுக்கு நேரடி நியமனமும், வேளாண் துறையில் 3544 அலுவலர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment