கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 4, 2011

டெல்லி சென்ற முதலமைச்சர் கலைஞர் பேட்டி


30.01.2011 அன்று மதியம் சென்னை யில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்றார். டில்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத் தில் முதலமைச்சர் கலை ஞர் செய்தியாளர்களுக் குப் பேட்டி அளித்தார். கலைஞரிடம் செய்தி யாளர்கள் கேட்ட கேள் விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில் களும் வருமாறு:- கேள்வி:-டில்லிக்கு வந்திருக்கிறீர்கள். யார், யாரை சந்திக்க உள்ளீர் கள்? பதில்:-காங்கிரஸ் கட் சித் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்திக்க உள்ளேன். கேள்வி:-என்ன பேச இருக்கிறீர்கள்? தேர்தல் உடன்படிக்கை செய்ய விருக்கிறீர்களா? பதில்:- 31.01.2011 அன்று பேசிய பிறகு தானே விவரங்கள் தெரி யும். நாளைக்கு சொல் கிறேன். கேள்வி:-எத்தனை தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகள் என்பதெல் லாம் இரண்டு நாள் களுக்குள் உறுதியாகி விடுமா? பதில்:-இப்போதே சொல்ல முடியாது. பேசியபிறகு சொல்கி றேன். கேள்வி:-தி.மு.க. கூட் டணியில், காங்கிரஸ் தவிர வேறு எந்தெந்தக் கட்சிகள் இடம் பெறுவ தாக உள்ளன? பதில்: -மற்ற கட்சி களோடு இன்னும் பேச வில்லை. தற்போதுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள், பாட் டாளி மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் போன்ற கட்சி கள் எங்கள் அணியிலே உள்ளன. கேள்வி:-மீனவர்கள் பிரச்சினை பற்றி பிரதம ரிடம் பேசும்போது குறிப்பிடுவீர்களா? பதில்:-தமிழக மீன வர்கள் படும் துன்பங்கள் பற்றி தொடர்ந்து பிரத மரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன். இப்போ தும் பேசுவேன். மேற்கண்டவாறு முதலமைச்சர் கலைஞர் பதில் அளித்தார்.

முன்னதாக 30.01.2011 அன்று பகல் 1.40 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத் தில் முதலமைச்சர் கலை ஞர் டில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன், ஜெகத் ரட்சகன், தமிழக அமைச் சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் கனி மொழி எம்.பி. ஆகி யோர் சென்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் முதல்வரை அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பூங்கோதை, துணை சபாநாயகர் துரைசாமி உட்பட பலர் சென்னையில் வழியனுப்பி வைத்தனர். 30.01.2011 அன்று மாலை 5.40 மணிக்கு டில்லி விமான நிலையம் வந்து இறங்கிய முதல மைச்சர் கலைஞருக்கு தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று மேள தாளம், தாரை-தப் பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல்வர் கருணாநிதிக்கு மத்திய இணை அமைச்சர்கள் நெப்போலியன், பழனிமாணிக்கம், காந்தி செல்வன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எம்.பி.க்கள் வேணுகோபால், ஏ.கே.எஸ்.விஜயன், செல்வ கணபதி, திருச்சி சிவா, கே.பி. ராமலிங்கம், தங்கவேலு, வசந்தி ஸ்டான்லி, ஹெலன்டேவிட்சன், தாமரைச்செல்வன், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஜின்னா, ரித்தீஷ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

No comments:

Post a Comment