கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 4, 2011

இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்த்த பரிசீலனை -



‘இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக உயர்த்த பரிசீலனை செய்யப்படும்’ என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழக உள்ளாட்சித்துறை முதன்மை செயலாளர் கே.அலாவுதீன் மகள் டாக்டர் முஸ்பிரா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எம்.இதாயத்துல்லா மகன் டாக்டர் ரஷீத் அராபத் திருமணம், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் 30.01.2011 அன்று நடந்தது.
திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இதாயத்துல்லா, அலாவுதீன் ஆகியோர் என்னை மணவிழாவுக்கு வருக வருக என்று அழைத்தார்கள். இங்கே வந்தால், இதாயத்துல்லா பேச்சை கேட்டபோது & அழைத்தது மணவிழாவுக்கா அல்லது மாநாட்டுக்கா என்றே எனக்கு புரியவில்லை. இருந்தாலும், அவருடைய உரிமையுடன் கூடிய கோரிக்கை (இஸ்லாமியர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்) கைகழுவப்படாமல் நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
அதற்கான மகிழ்ச்சியை அவர்கள் தெரிவிக்கின்ற நாள் விரைவிலே வரும் என்பதை இந்த விழாவிலே நான் எடுத்துக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன். குறிப்பாக, இஸ்லாமிய பெருமக்களுடைய இல்லத்து விழாக்களில், இன்று நேற்றல்ல; நீண்ட நெடுநாட்களாக கலந்து கொள்கிற அரிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அந்த வாய்ப்புகளில் ஒன்றாக இந்த வாய்ப்பும், இன்றைக்கு அமைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
நம்முடைய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் உரையாற்றி, உங்களையெல்லாம் மகிழ்ச்சிக் கடலிலே ஆழ்த்தியிருக்கிறார். கப்பல் கடலிலேதான் செல்லும் என்பதால், களிப்புக் கடலிலே உங்களையெல்லாம் ஆழ்த்தியிருக்கிறார் என்றேன். அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு ஏதோ இந்த ஆட்சியினால் அல்லது அரசியலால் ஏற்பட்ட உறவு என்று யாரும் கருதக்கூடாது.
வாசன் தந்தை மூப்பனார் மறைந்தும், மறையாத மாணிக்கமாக இன்றளவும் நம்மால் போற்றப்படுகின்ற அரும்பெரும் தலைவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, எனக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த நட்பு சாதாரணமானது அல்ல. அந்த நட்பை நாங்கள் என்றைக்கும் மறந்தவர்கள் அல்ல.
ஒன்று சொன்னார்& வேதவாக்கு என்பார்களே, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும், அவருடைய வாக்கு பலிக்கும் என்ற நம்பிக்கையோடு, அவர் தந்த வாக்கை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த வாக்குதான், குமரி முனையில் வள்ளுவருக்கு விழா எடுத்து, 133 அடி உயரமுள்ள சிலையை அமைத்தபோது, அந்த விழாவுக்கு வந்திருந்தார் மூப்பனார்.
விழாவுக்கு வந்த மூப்பனார் கையிலே மறைத்து வைத்திருந்த ஒரு புத்தகத்தை எனக்கு பரிசுப் பொருளாக கொடுத்தார். அதைப் பிரித்து பார்த்தால் Òநீ வெல்வாய்Ó என்று அந்த புத்தகத்துக்கு தலைப்பு இருந்தது; ஆங்கிலத்திலே இருந்தது.
அப்போது எல்லாம் அரசியல் ரீதியாக அவருக்கும் எனக்கும் மாறுபாடு உண்டு. அந்த நேரத்திலே ஒருவர் Òநீ வெல்வாய்Ó என்று ஒரு புத்தகத்தை என்னிடத்திலே கொடுத்தார் என்றால், அவருடைய பரந்த உள்ளத்தை, அவருடைய எதையும் மனதிலே வைத்து ஒளிக்காத அந்த இனிய உள்ளத்தை, எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.
நம்முடைய இதாயத்துல்லா சில கோரிக்கைகளை இங்கே வைத்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று மேடையில் பேசும்போது சொன்னது மாத்திரமல்ல, என் அருகே வந்து உட்கார்ந்தும் சொன்னார். நீங்கள் இவைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
நான் சொன்னேன், நீங்கள் பகிரங்கமாக கேட்டு விட்டீர்கள்; வெளிப்படையாக கேட்டு விட்டீர்கள். நான் வெளிப்படையாக சொல்வதற்கு முன்பு எனக்கென்று ஒரு அரசு இருக்கிறது, அந்த அரசிலே சில அமைச்சர்கள் இருக்கிறோம். எல்லோரும் கலந்து பேசி அதற்கு பிறகுதான் இதை வெளியிட முடியும். எனவே, அதுவரையிலே பொறுமையாக இருங்கள் என்று நான் சொன்னேன். அறிவிப்பு விரைவில் இருக்கும்; நினைத்தது நடக்கும். நினைத்தது நடக்கின்ற அளவுக்கு இங்கே வீற்றிருக்கின்ற மக்கள் எல்லாம், எங்களுடைய கரங்களை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
மத்திய அமைச்சர் ஜிகே.வாசன் பேசுகையில், “சிறுபான்மை காவலாளியான நாங்கள் பேசுகிறோம். சோனியா தலைமையிலான காங்கிரஸ் இயக்கம், கூட்டணி சார்பிலும் சாதனை பட்டியல்களை பட்டிதொட்டி எங்கும் எடுத்து செல்வதில் சிறந்தவர் இதாயத்துல்லா. நல்ல இணக்கம், ஒத்த கருத்து, சிறந்த பணி வருங்காலத்தில் வெற்றி வழி வகுக்கும் என்பதை புரிந்து கொண்டு மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும்” என்றார்.
விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், மாநிலங்களவை துணைத்தலைவர் ரகுமான்கான், சபாநாயகர் ஆவுடையப்பன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், சாத்தூர் ராமச்சந்திரன், பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment