கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 19, 2010

இந்தியாவில் முதன்மையான முதல்வர் கருணாநிதி - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேச்சு


மத்திய ஜவுளித்துறையின் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின்கீழ், மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, வாடிப்பட்டி தாதம்பட்டியில் 110 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்திக்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரமாண்ட ஜவுளி பூங்கா திறப்பு விழா, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தலைமையில் 18.12.2010 அன்று நடந்தது.
ஜவுளி பூங்கா தலைவர் பிரிட்டோ வரவேற்றார். மத்திய ஜவுளி துறை செயலாளர் ரீட்டா மேனன் திட்டத்தை விளக்கினார்.
ஜவுளி பூங்காவை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்து பேசியதாவது:

மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைத்து கொடுத்த தயாநிதி மாற னுக்கு முதலில் மதுரை மக் கள் சார்பில் நன்றி. மத்தியில் சோனியா காந்தி, மன்மோகன்சிங் அரசையும், தமிழகத் தில் முதல்வர் கருணாநிதி அரசையும் ஒப்பிட்டு தயாநிதிமாறன் அழகான விளக்கம் அளித் தார். முதல்வர் கரு ணாநிதி என்ன கேட்டாலும் மத்திய அரசு தருகிறது. அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றி, இந்தியாவிலேயே முதன்மையான முதல்வர் கருணாநிதி என்பதால்தான், தமிழகத்துக்கு அவர் கேட்கும் திட்டங்களை மத்திய அரசு தருகிறது.
கடந்த 2006 தேர்தலில் கருணாநிதி அளித்த வாக்குறுதிப்படி, ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச டிவி, விவசாய கடன் ரத்து உள்ளிட்ட திட்டங்களையும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றி காட்டி இருக்கிறார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழைகளுக்கு உதவுகிறார்.
குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகள், உயிர் காக்கும் மருத்துவ திட்டம் போன்ற திட்டங்களை முதல்வர் கருணாநிதி தவிர வேறு யாரால் நிறைவேற்ற முடியும். மக்களை மறக்க கூடாது என்பதற்காகதான் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றுகிறோம். நீங்களும் மறக்காமல் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ் வாறு மு.க.அழகிரி பேசினார்.

தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தமிழரசி, ஆரூண் எம்.பி, மூர்த்தி எம்.எல்.ஏ, கலெக்டர் காமராஜ் ஆகியோரும் பேசினர்.

மு.க.அழகிரி, தயாநிதி மாறனுக்கு திமுகவினர் உற்சாக
வரவேற்பு் :

மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறனுக்கு புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாடிப்பட்டி தாதம்பட்டியில் நடந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திறப்பு விழாவுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரை வரவேற்று புறநகர் மாவட்ட தி.மு,.க. சார்பில் வழிநெடுகிலும் 15 கி.மீ. தூரம் சாலையின் இருபுறமும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. நகரியில் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் அசோக்குமார், எம்.எல்.ஏக்கள் கவுஸ்பாட்ஷா, லதா அதியமான், மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அருணாசலம், கண்ணன், எல்ராஜ், சவுந்திரபாண்டியன், தேவகி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அயூப்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஆர்கோபி, ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன், ரகுபதி, சிறைச்செல்வன், மணிமாறன், கார்த்திகேயன், வேளாண் விற்பனை குழு தலைவர் கணேசன், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி , துணைத் தலைவர் சோணை, கவுன்சிலர் அருணாதேவி, நகர செயலாளர் பொம்மதேவன், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, ஒன்றிய தலைவர் அன்னகாமுபாண்டியன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், பொன்.சுருளிமோகன், பழனிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் தனராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கென்னடி, ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், ரகுபதி, முத்தையன், அச்சம்பட்டி ரவிச்சந்திரன், ரவிக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் பிச்சையப்பன், கருப்பணன், வெள்ளைசாமி, முருகேசன், முத்துப்பாண்டியன், செல்வராஜ், மணிகண்டன், செல்வி செல்வராஜ், ராசாத்திமாதவன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ராஜாராம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் பழனிச்சாமி, சேகர் மற்றும் பெர்க்மான்ஸ், மாணவரணி கலாநிதி உள்பட ஆயிரக்கணக்கில் திரண்டு வரவேற்றனர்.
ஆண்டிபட்டி பங்களாவில் அமைச்சர்களை காங்கிரஸ் எம்.பி. ஆரூண் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமச்சந்திரன், செல்வராஜ்பாண்டியன், தேவராஜன் மற்றும் காங்கிரசார் வரவேற்றனர். வழிநெடுகிலுமுள்ள கிராமங்களில் மக்கள் திரண்டு நின்று மு.க.அழகிரியிடம் மனுக்கள் அளித்தனர்.

No comments:

Post a Comment