பூம் புகார் மற்றும் குமரிக் கண்டத்தை அகழ்வா ராய்ச்சி செய்ய குழு அமைத்து முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து தமிழக அரசு 03.12.2010 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங் கள் எல்லாம் மகிழ கோவை நகரில் கடந்த ஜூன் மாதம் எழுச்சி யுடன் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ் கடல் அகழ்வாராய்ச்சி செய்திடத் தேவையான திட்டம் வகுத்துச் செயல் படுத்திட வேண்டுமென்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது'' எனும் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.
இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் கடல் கொண்ட பூம்பு கார் குறித்த ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தமிழக அரசின் தொல் லியல் துறையும், குமரிக் கண்டம் குறித்த அகழ் வாராய்ச்சியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழ கத்துடன் இணைந்து தொல்லியல் துறையும் மேற்கொள்ளலாம் என்றும்; இந்த அகழ் வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒரு வல் லுநர் குழு அமைக்கப் படுகிறது.
தமிழக அரசின் சுற் றுலா மற்றும் பண்பாட் டுத்துறைச்செயலாளர் அக்குழுவின் தலைவரா கவும், கோவாவில் உள்ள தேசிய கடல் சார் கழகத் தின் தலைவர், சென்னை தேசிய கடல் வள தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அல்லது விஞ்ஞானி பா. சசிசேகரன், சென்னை யில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் கண் காணிப்பாளர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணை வேந் தர் அல்லது அவரது பிரதிநிதி தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இயக்குநர் நடன காசி நாதன் ஆகியோர் உறுப் பினர்களாகவும், தொல் லியல்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப் பாளராகவும் நியமிக்கப் படுகின்றனர் என்றும் முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.
- இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment