கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 19, 2010

உழைப்பாளி மக்களின் உயர்வுக்கும், உரிமைக்கும் உழைத்தவர் பாப்பா உமாநாத்: கலைஞர்


மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பாப்பா உமாநாத் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக குறிப்பாக, மகளிர் அணியின் முன்னணித் தலைவராகத் திகழ்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பாப்பா உமாநாத் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைகிறேன்.

பாப்பா உமாநாத் விடுதலைப் போராட்டத் தியாகியாகத் திகழ்ந்தவர்; ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக விளங்கியதுடன், அதனைத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வலுவான அமைப்பாக உருவாக்குவதிலும் மகத்தான பங்காற்றியவர்.

ஏழை, எளிய உழைப்பாளி மக்களின் உயர்வுக்கும், உரிமைக்கும் ஓய்வின்றி உழைத்தவர். கொள்கை உறவு மட்டுமல்லாமல், குடும்ப உறவும் கொண்டவர் பாப்பா உமாநாத் என்பதை எண்ணி மிகுந்த கலக்கமுறுகிறேன். அவரது பிரிவால், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது கணவர் தோழர் உமாநாத் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment