கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை பிளாக் மெயில் செய்பவர்கள் யார்? - முதலமைச்சர் கலைஞர் பேட்டி


உண்மையிலேயே பிளாக் மெயில் செய்பவர்கள் யார் என்பது பற்றி முதல் அமைச்சர் கலைஞர் தனியார் தொலைக்காட்சி களுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள் ளார்.

பேட்டி வருமாறு:

செய்தியாளர்:- இன்றைய தினம் (08.12.2010) நாடு முழுக்க, டில்லி, சென்னை, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் உள்ள ராஜாவின் இல்லங்களில் சி.பி.அய். சோதனை நடைபெற்றுள்ளதே?

முதலமைச்சர் கலைஞர்:- சி.பி.அய். சோதனைகள் நடைபெறுவது ஒன்றும் பெரிதாகப் பேசப்படுகின்ற விஷயம் இல்லையே!

செய்தியாளர்:- சி.பி.அய். சோதனை நடைபெற் றதை அவமானகரமான ஒன்றாக கருதுகிறீர்களா?

முதலமைச்சர் கலைஞர்:- அப்படி நினைக்க வில்லை. ஆனால் அவமானத்திலேயே ஊறியவர் கள் சிலர் நாட்டிலே இருக்கிறார்கள்.

செய்தியாளர்:- ராஜா கட்சியிலிருந்து ஓரம் கட்டப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?

முதலமைச்சர் கலைஞர்:- அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும், அதுவரையில் நான் எதுவும் சொல்வதற் கில்லை. ராஜா எந்தத் தவறும் செய்ய வில்லை என்று தி.மு.க. நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாற்று நிரூபிக்கப்படுகிற வரையில் நாங்கள் இராசாவைக் கைவிடத் தயாராக இல்லை.

செய்தியாளர்:- இன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சியை நீங்கள் பிளாக்-மெயில் செய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?

முதலமைச்சர் கலைஞர்:- பிளாக்-மெயில் செய்கின்ற கலை எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தான் மிகவும் அத்துப்படியான விஷயம்.

செய்தியாளர்:- மேலும் ஜெயலலிதா அறிக்கை யில் சி.பி.அய். விசாரணையை விரிவாக்கி அது பற்றி தோண்டினால் மேலும் விவரம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறாரே?

முதலமைச்சர் கலைஞர்:- அந்த அம்மை யாரிடம் கூட சி.பி.அய். விசாரித்தால் எவ்வளவோ கிடைக்கும். ஏற்கெனவே கிடைத்திருக்கிறது.

செய்தியாளர்:- நாடாளுமன்ற உறுப்பினர் களின் கூட்டுக் குழு வேண்டும் என்பதைப் பற்றி?

முதலமைச்சர் கலைஞர்:- அதைப்பற்றி இன்றையதினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பா.ஜ.க. ஆட்சிக் காலத்திலிருந்தே ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பற்றி சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு கூட்டுக்குழு வேண்டு மென்று கோருகின்ற நாடாளுமன்ற உறுப்பி னர்களின் பதில் என்ன? பத்திரிகையாளர்களாகிய உங்கள் பதில் என்ன?

செய்தியாளர்:- நீங்கள் ஒரு கட்சியின் தலைவராக அதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

முதலமைச்சர் கலைஞர்:- என்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடங்கியதோ, அதற்குப் பிறகு நடைபெற்ற ஆட்சிக் காலங்களில் அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்று விசாரிக்கப் பட வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக் கிறோம்.

செய்தியாளர்:- சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியுடன் இராசா பேச முனைந்ததாக ஒரு வழக்கிலே கூறப்பட்டதைப் பற்றி?

முதலமைச்சர் கலைஞர்:- அவர் மீதான அந்தக் குற்றச்சாற்றை, இராசாவே மறுத்திருக்கிறார்; அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

- இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment