சட்டம் அறிந்தவன் என்ற முறையில் நீதிபதியை அவமதிக்கும் வகையில் தான் ஒரு போதும் நடந்து கொண்டதில்லை என்றும், தான் சட்டத்தை மதித்து நடப்பவன் என்றும், ஒரு போதும் நீதியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதில்லை என்றும் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா விளக்கினார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அளித்த பேட்டி வருமாறு:
ஒரு வழக்கறிஞர் என்ற முறையிலும், ஒரு குடிமகன் என்ற முறையிலும் எனக்கு நீதி அமைப்பின் மீது நம்பிக்கை உண்டு. நான் எந்தக் காலத்திலும் நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக் கிட்டது இல்லை.
நான் சென்னைஉயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்று கொடுத்திருந்தேன். அதில் இடைக் காலத் தடை கோரி இருந்தேன். இந்த மனு நிரா கரிக்கப்பட்டு வழக்கு செலவுத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப் பானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சுக்கு மேல் முறையீடு செய்து எனக்கு சாதகமான ஆணையைப் பெற்றேன். இது எனது நாணயத்தைக் காட்டுகிறது. நான் எந்தக் காலத்திலும் என் சார்பாக எந்த நீதிபதி யிடமும் பேசுவதற்காக யாருக்கும் அதிகா ரம் அளித்ததில்லை. பொது வாழ்க்கை யில எனக்கு நண்பர்களும், ஆதரவாளர் களும் உண்டு. ஆனால் நான் எப்போதும் வேறு யார் மூலமாவது நீதிமன்ற நடவடிக்கை களில் தலையிட்டது இல்லை. பொது வாழ்க்கையில் சச்சரவுகளும், குற்றச்சாட்டுகளும் நடைபெறுவது சாதாரணமானவை. நான் அவற்றை சந்தித்து வெளி வருவேன்!
இவ்வாறு அந்த பேட்டியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment