தமிழக அரசு 15.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 11ம் தேதி சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், 'பள்ளிக் கல்வித்துறையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பித்தல் தொடர்பான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை அரசு எடுக்கும்’ என்று அறிவித்தார்.
அதனை நிறைவேற்றும் வகையில், பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பித்திட வாரத்துக்கு 4 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும் என்றும், சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்றும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் அறிக்கை: சிறுபான்மையினரின் பாதுகாவலராகவும், அவர்களுக்கு பல நன்மை களை செய்துள்ள முதல்வர், சமச்சீர் கல்வியில் சிறு பான்மை மொழிப் பாடங்களுக்கு இடம் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளார். இதற்காக, முதல்வர் கருணாநிதிக்கு சிறுபான்மை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment