கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, December 28, 2010

காவேரிப்பட்டினம் விபத்து : கலைஞர் உத்தரவு


கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டினம் அருகில் உள்ள ஏர்ரள்ளி கிராமத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் டெம்போ டிராவலருடன் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் டெம்போ டிராவலர் வாகனத்தில் பயனம் செய்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் சமபவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதும் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் குறித்த செய்தி தமக்கு கிடைத்ததும் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ள முதல்வர் கருணாநிதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்தவர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment