
தமிழக முதல்வர் கருணாநிதியை 25.12.2010 அன்று அவரது இல்லத்தில் இந்திய சமூக நீதி இயக்கத்தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தலைவர் இனிகோ இருதயராஜ், தமிழக சிறுபான்மை ஆணையத்தலைவர் வின்சென்ட் சின்னதுரை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சேவியர் ஜேசுராசா, நியமன சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்கார் நிகிலி, மாடம்பாக்கம் மோகன் ஆகியோர் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.
முதல்வர் கலைஞரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி :
ஏசு கிறிஸ்து ஏழைகளுக்காக இரங்கியவர். அவர்கள் புறக்கணிக்கப்படுவதை, ஒதுக்கப்படுவதை கண்டு வேதனைப்பட்டவர். அவர்களை அரவணைத்திட அறிவுரைகள் வழங்கியவர். வாழ்ந்து காட்டியவர். அதேபோல ஏழை எளியவர்களுக்காக பல நலத் திட்டங்களை நிறைவேற்றி ஏழை எளியவரைக் காத்துவரும் தமிழக அரசின் சார்பில், கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்
No comments:
Post a Comment