கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

பெண்களுக்கு நலத்திட்டங்கள் முதல்வர் கருணாநிதிக்கு சமண துறவி பாராட்டு


தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத் திற்காக நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல் படுத்திய முதல்வர் கலைஞருக்கு ஜெயின் மகளிர் அமைப்பு நிறுவனர் மாயானா சிறீசாதவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மகளிர் நலன், மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 22.12.2010 அன்று ஜெயின் மகளிர் அமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பேசிய இந்த அமைப்பின் நிறுவனர் மாயானா சிறீசாதவி:-

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. அரசு வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சொத்தில் சமபங்கு வழங்கப்படுகிறது. பெண்களுக்கென்று தனி காவல் நிலையங்கள் உள்ளது. திருமணத்துக்கு உதவித் தொகை, கல்வி உதவித்தொகை என்று பெண்களுக்காக தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் வாழ்வு ஏற்றமடைந்து வருகிறது. பெண்கள் நலத்திட்டங்களைக் கொண்டு வந்த முதலமைச்சர் கலைஞரைப் பாராட்டு கிறோம்.

மகளிருக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலமாக அவர்கள் அரசியல் உள்பட பல்வேறு துறைகளில் முக்கியத்துவம் பெறுவார்கள்

என்று அவர் தெரிவித்துள்ளார்.

இக்கருத்தரங்கில் மத்திய இணை அமைச்சர் டி.நெப்போலியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் நயபதம் சாகர், ஜஸ்வந்த்முனோத், அபய் கவுதம் மற்றும் மகளிர் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள், பல்வேறு துறை சார்ந்த மகளிர் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment