தொடர் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து, 9 மாவட்டங்களில் உயர் அதிகாரிகள் 05.12.2010 & 06.12.2010 ஆம் தேதிகளில் ஆய்வு நடத்துகின்றனர். அவர்கள் தரும் அறிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்க 07.12.2010 மாலையில், அமைச்சரவை அவசரமாக கூடுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாளாக தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிசைகள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன; பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. அரசு உடனடியாக நிவாரண நடவடிக்கைகள் முடுக்கி விட்டுள்ளது. இதில், ஒன் பது மாவட்டங்களில் கடுமையாக மழைசேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு , நிவாரண நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, உயர் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, 05.12.2010 & 06.12.2010 ஆம் தேதிகளில் சேத மதிப்பீடு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் தரும் அறிக்கையின் பேரில், வரும் 07.12.2010 அன்று, அமைச்சரவை அவசரமாக கூடி, நிவாரண பணிகள் குறித்து முடிவெடுக்கும்.
இதுதொடர்பாக, தமிழக அரசு 04.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழை காரணமாக மாவட்டங்களில் உயிரிழப்புகளும், கால்நடை இழப்புகளும், குடிசைகளுக்கு சேதங்களும், பயிர்களுக்கு சேதங்களும், சாலைகள் மற்றும் ஏரிகளுக்கு சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, முதல்வர் கருணாநிதி கொடுத்துள்ள அறிவுரைகளின்படி, மாவட்ட கலெக்டர்கள் உயிரிழப்புகளுக்கும், கால்நடை இழப்புகளுக்கும், சேதமடைந்த குடிசைகளுக்கும், உரிய நிவாரண உதவியை வழங்கி வருகிறார்கள்.
தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து, தண்ணீர் வடிந்த பகுதிகளில் பயிர்ச்சேதம் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மதிப்பீடு செய்து வருகிறார்கள். சாலைகள் மற்றும் ஏரிகளில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிரந்தர சீரமைப்புப் பணிகள், பருவமழை முடிவுக்கு வந்ததும் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதற்கட்ட நிவாரணப் பணிகளுக்கென முதல்வர் கருணாநிதி 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் பெரு மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து, உடனடி நிவாரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்து, பயிர் மற்றும் சாலைகள் போன்ற கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்து, உடனடியாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பின்வரும் உயர்மட்ட அதிகாரிகள் (ஐஏஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் விவரம்:
ககன் தீப்சிங் பேடி- கடலு£ர் மாவட்டம்
சிவதாஸ் மீனா - நாகை மாவட்டம்
வி.கே.சுப்புராஜ் - தஞ்சை மாவட்டம்
ஜி.சந்தானம் - திருவாரூர் மாவட்டம்
எஸ்.எஸ்.ஜவகர் - விழுப்புரம் மாவட்டம்
சுர்ஜித் சவுத்ரி - து£த்துக்குடி, நெல்லை மாவட்டங்கள்
டேவிதார் - புதுக்கோட்டை மாவட்டம்
ஹன்ஸ்ராஜ் வர்மா- ராமநாதபுரம் மாவட்டம்.
சிவதாஸ் மீனா - நாகை மாவட்டம்
வி.கே.சுப்புராஜ் - தஞ்சை மாவட்டம்
ஜி.சந்தானம் - திருவாரூர் மாவட்டம்
எஸ்.எஸ்.ஜவகர் - விழுப்புரம் மாவட்டம்
சுர்ஜித் சவுத்ரி - து£த்துக்குடி, நெல்லை மாவட்டங்கள்
டேவிதார் - புதுக்கோட்டை மாவட்டம்
ஹன்ஸ்ராஜ் வர்மா- ராமநாதபுரம் மாவட்டம்.
இந்த அதிகாரிகள் 05.12.2010 & 06.12.2010 ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் ஆய்வு செய்வர். பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆராய்வர். பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு செய்யப்படும் உணவு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தருவர்.
மேலும், இந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பு, அவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை, சாலைகள் மற்றும் நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தற்காலிகமாக சீர் செய்யவும், நிரந்தரமாக சீரமைக்கவும் தேவையான நிதியாதாரத்தை மதிப்பீடு செய்து, அரசுக்கு அறிக்கை தரவம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, 07.12.2010 அன்று மாலை, அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடக்கிறது. அதிகாரிகள் தரும் அறிக்கைகள் குறித்து விரிவாக இதில் விவாதிக்கப்படும்; பின், நிவாரண நடவடிக்கைள் தொடர்பாக தேவையான முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பலி 163 ஆக உயர்வு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.
மழையின் கோரதாண்டவத்திற்கு நேற்று இரவு வரை 163 பேர் பலியாகி உள்ளனர். இதில், 76 பேர் ஆண்கள், 47 பெண்கள், 40 குழந்தைகள் ஆவர். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 26 பேரும், கடலூரில் 20 பேர், திருவாரூர் மாவட்டத்தில் 19 பேரும் இறந்துள்ளனர். பலத்த மழைக்கு 23,812 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 1,233 கால்நடைகள் மழைநீரில் முழ்கி பலியாகி உள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment