தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான மில்களில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கு நடந்த தேர்தலில் திமுகவின் எல்பிஎப், ஐஎன்டியூசி, சிஐடியூ உள்ளிட்ட நான்கு சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது. அதிமுக தொழிற்சங்கம் அங்கீகாரம் இழந்தது.
தேசிய பஞ்சாலை கழகத்தின்(என்டிசி) கட்டுப்பாட்டில் கோவையில் 5 மில்களும், காளையார்கோவில், கமுதக்குடி என 7 இடங்களில் மில்கள் செயல்படுகின்றன.
இந்த மில் தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் 18.12.2010அன்று நடந்தது. தேர்தலில் திமுக தொழிற்சங்கமான எல்பிஎப், அதிமுகவின் ஏடிபி, காங்கிரசின் ஐஎன்டியூசி, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களான ஏஐடியூசி, சிஐடியூ உட்பட 12 சங்கங்கள் போட்டியிட்டன.
மொத்தம் 7 மில்களிலும் 2952 வாக்குகளில் 2926 பேர் வாக்களித்தனர். ஓட்டு எண்ணிக்கை 19.12.2010 அன்று காலை கோவை என்டிசி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
ஆரம்பத்தில் இருந்தே எல்பிஎப் முதலிடத்தில் இருந்தது. மொத்த வாக்குகளில் 22 சதவீத ஓட்டுகளை பெற்று எல்பிஎப் சங்கத்திற்கு இரண்டு பிரதிநிதிகளுடன் கூடிய அங்கீகாரம் கிடைத்தது. இச்சங்கத்திற்கு மொத்தம் 650 ஓட்டுகள் கிடைத்தன.
மற்ற சங்கங்களுக்கு கிடைத்த ஓட்டுகள்:
நக்சல் ஆதரவு தொழிற்சங்கமான என்டிஎல்எப்- 478(16.2%),
சிஐடியூ - 383(13%)
ஐஎன்டியூசி - (10.2%)
ஏடிபி - 265(9%)
எம்எல்எப் - 225(7.6%)
ஏஐடியூசி - 200(6.8%)
அம்பேத்கார் தேசிய பஞ்சாலை தொழிற்சங்கம் - 197(6.7%).
இதில் 10 சதவீதத்திற்கு மேல் வாங்கிய சங்கங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவை. அதிமுக சார்புடைய ஏடிபி, மதிமுக சார்புடைய எம்எல்எப் உள்ளிட்ட இதர தொழிற்சங்கங்கள் அங்கீகாரத்தை இழந்தன.
நக்சல் ஆதரவு தொழிற்சங்கமான என்டிஎல்எப்- 478(16.2%),
சிஐடியூ - 383(13%)
ஐஎன்டியூசி - (10.2%)
ஏடிபி - 265(9%)
எம்எல்எப் - 225(7.6%)
ஏஐடியூசி - 200(6.8%)
அம்பேத்கார் தேசிய பஞ்சாலை தொழிற்சங்கம் - 197(6.7%).
இதில் 10 சதவீதத்திற்கு மேல் வாங்கிய சங்கங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவை. அதிமுக சார்புடைய ஏடிபி, மதிமுக சார்புடைய எம்எல்எப் உள்ளிட்ட இதர தொழிற்சங்கங்கள் அங்கீகாரத்தை இழந்தன.
திமுக தொழிற்சங்கமான எல்பிஎப் சங்கத்தினர் என்டிசி தலைமை அலுவலகம் முன் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
No comments:
Post a Comment