
தமிழக சட்ட மேலவை தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளை யும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் மேல்-சபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில் மேலவைத் தேர்தலை எதிர்த்துப் பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. பா.ஜ.க., ம.தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், பஞ்சாயத்து தலை வர்கள் சங்கம், பட்ட தாரி ஆசிரியர்கள் சங் கம் உட்பட பல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையிலும் மேலவை தேர்தலை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட் டன. சிறீதர்குமார் மற்றும் 12 பேர் தாக்கல் செய்த வழக்குகளையும் இணைத்து தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்குகளின் தீர்ப்பை கடந்த 9 ஆம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர். தீர்ப்பு நீதிபதிகள் 16.12.2010 அன்று தீர்ப்பளித்தனர். அனைத்து மனுக்களை யும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:- தமிழகத்தில் சட்ட மேலவையை அமைப் பதற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் 30.9.2010 அன்று உத்தரவு பிறப்பித்தார். அதன டிப்படையில் 1.10.2010 அன்று தமிழக அரசு அரசிதழில் அதை வெளி யிட்டது. இந்த உத்தர வுகளை சட்டவிரோதம் என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டுமென்று மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டன. இந்த தேர்தலுக்கான தொகுதிகளை வரை யறை செய்தது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் துக்கு எதிராக உள்ளது என்றும், அதற்கு நாடா ளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதால் தொகுதி வரையறையை செயல் படுத்த முடியாது என் றும் மனுக்களில் கூறப் பட்டு இருந்தது. ஆனால் தொகுதி வரையறைக்கான உத் தரவு, தமிழ்நாடு சட்ட மேல்-சபை சட்டத்தின் கீழ்தான் பிறப்பிக்கப் பட்டு உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தின் அடிப்படையில் அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. சட்ட மேலவை சட் டத்தின்படி தொகுதி வரையறைக்கான உத் தரவு பிறப்பிக்கப் பட்டதால், நாடாளு மன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டிய அவசி யம் இல்லை. எனவே அதில் விதிமுறை மீறல் எதுவும் இல்லை. மேலும் தொகுதி வரையறை தொடர்பான சட்ட மேல்-சபை சட் டத்தின் 16 ஆம் பிரிவு, அரசியல் சாசனத்தின் 327-ஆம் பிரிவின் அடிப் படையில் இயற்றப் பட்டதாகும். இதுபற்றி நீதிமன்றம் மூலம் கேள்வி கேட்க முடி யாது என்று அரசியல் சாசனத்தின் 226 ஆம் பிரிவு தடை செய்கிறது. தமிழகத்தில் சட்ட மேலவையை கொண்டு வருவதற்கான சட் டத்தை நாடாளுமன்றம் இயற்றியுள்ளது. அது, தமிழகத்தில் புதிய மேல்-சபை தொடங்குவதற் காக கொண்டுவரப் பட்ட சட்டமே தவிர, ஏற்கெனவே இருந்த மேலவையை புதுப்பிப் பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமல்ல. பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் சிலருக்கு வாக்குரிமை இல்லை என்றும், அதனால் அர சியல் சாசனத்தில் 14 ஆம் பிரிவின்படி அளிக்கப் பட்டுள்ள உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் மனுவில் கூறப் பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மூன்றடுக்கு முறைக்கான திருத்தத் தின்படி, சட்ட மேலவை சட்டத்தின் 16(4)-ஆம் பிரிவை பார்த்தால், அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று கூறமுடியாது. 3 ஆண்டுகள் ஆசிரி யர் தொழிலில் இருப்ப வர்கள்தான் ஓட்டளிக்க முடியும் என்றும், அவர்கள் பணியாற்றும் கல்வி நிறுவனங்கள், மேல்நிலைப் பள்ளி களின் தரத்துக்கு மேலாக இருக்க வேண் டும் என்றும் சட்டம் கூறுகிறது. அதனடிப் படையில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மேலவை ஓட்டுரிமை கேட்டும் கேள்விக்கே இடமில்லை. சட்ட விரோதமல்ல... எனவே, இந்த தேர் தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கை களும் சட்டவிரோதம் என்றோ, அரசியல் சாச னத்துக்கு முரணானது என்றோ கூற முடியாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடு வதற்கான சரியான காரணங்களை மனுதா ரர்கள் கூறவில்லை. எனவே, எந்த மனுவையும் ஏற்க முடியாது. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப் படுகின்றன. - இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment