கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, December 31, 2010

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை


தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தமிழக சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தவும், ஆய்வு செய்யவும் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, துணை தேர்தல் ஆணையர் அலோக் சுக்லா ஆகியோர் நேற்று (30.12.2010) காலை சென்னை வந்தனர்.
மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் குரேஷி ஆலோசனை நடத்தினர். அசோக் சுக்லா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, பா.ஜ., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்தவர்கள் அளித்த பேட்டி:
அமைச்சர் பொன்முடி (திமுக):
ஓட்டு போடும்போது யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியவேண்டும். தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். ஒரு கட்சி, மற்றொரு கட்சி மீது புகார் செய்யும்போது இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்க வேண்டும். பண பட்டுவாடாவை தடை செய்ய வேண்டும். டி.விக் களில் பொய் பிரசாரத்தை தடை செய்ய வேண்டும். தங்கபாலு (காங்கிரஸ்):
ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். ஜனநாயக முறையில் அமைதியாக, சிறப்பாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குகளை விலைக்கு வாங்க கூடாது. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு பணம் தடையாக இருக்க கூடாது. வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வருபவரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் ஒரே மாதிரி இருக்க வேண்டும். கட்சி சார்பில் நடக்கும் கூட்டங்களில் வேட்பாளர்கள் கலந்து கொண்டாலும், அதற்கான செலவை கட்சிக் கணக்கிலே சேர்க்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் வேலு (பாமக):
கருத்து கணிப்பு வெளியிட தடை செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தேர்தலை அதிகாரியை மாற்ற வேண்டும். தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளை அவரது கணக்கிலேயே சேர்க்க வேண்டும். பேனர், கட்&அவுட் வைக்க தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிற்பகலில் கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்களுடன் குரேஷி ஆலோசனை நடத்தினார்.

No comments:

Post a Comment