கொழுந்துவிட்டு எரிந்த அரசியல் நெறி என்று ஆரம் பித்து, கடந்த 22.12.2010 ஆனந்த விகடன் இதழில், காலப்பெட்ட கம் 2000 என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டம் வந்துள்ளது. கோவை கல்லூரி மாணவிகள் பேருந்து எரிப்பு சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ள செய்தியில், மிகக் கொடூரமான கொலை பாதகம்! கடவுளுக்கே பொறுக்காது! என் றெல்லாம் எழுதிவிட்டு அந்தக் கொலைகாரர்களின் பெய ரையோ, அதற்கு காரணமான அரசியல் நிகழ்வைப் பற்றியோ அதில் சம்பந்தப்பட்ட கட்சியின் பெயரையோ, அந்தக் கட்சியின் தலைமையின் பெயரையோ குறிப் பிடவேயில்லை. செய்தியையே மொட்டையாகத்தான் போட்டி ருக்கிறார்கள். அதே இதழின் முதல் பகுதியில் வந்துள்ள ஸ்பெக்டரம் தொடர் பான கட்டுரையில் ஆ.இராசா பெயரை ஒரு பத்து முறையாவது குறிப்பிட்டிருக்கிறார்கள். திரா விட முன்னேற்றக் கழகம் என்று கட்சியின் பெயரைக் குறிப்பிட் டிருக்கிறார்கள். ஜெயலலிதா, அதிமுக சம் பந்தப்பட்ட செய்திகள் என்றால் ஓர் அணுகுமுறை! ஆ.இராசா, திமுக என்றால் ஓர் அணுகுமுறை! இத்தனைக்கும் அதிமுக சம்பந்தப் பட்ட அந்தக் கொடூரம், ஒட்டு மொத்த உலகமே கண்ணீர் விட்ட ஒரு கொடூரம்! ஆ.இராசா அவர் களுடையதோ அனுமானமாக போடப்பட்ட ஒரு காகிதக் கணக்கு! அது கூட நேரத்துக்கு, நேரம் ஆளுக்கு ஆள், என்று மாறி மாறி வெவ்வேறு தொகையாக காட்டப்பட்ட ஒரு காகிதக் கணக்கு! முதன் முதலில் 2008இல் - ரூ.30ஆயிரம் கோடி என்றார்கள். பின்னர் 2009ல்இ - ரூ.60ஆயிரம் கோடி என்றார்கள். பின்னர் இப்பொழுது ஊஹழு அறிக்கை - ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்கிறார்கள். ஊக்ஷஐ போட்ட கணக்கு - ரூ.22 ஆயிரம் கோடி இந்து பத்திரிகை பேட்டியில் அருண்ஷோரி தெரிவித்துள்ள தொகை - ரூ.30 ஆயிரம் கோடி இந்த லட்சணத்தில் இவ்வளவு தொகை அரசுக்கு இழப்பு என் பதையே மாற்றி ஆ.இராசாவின் ஊழல் என்று பத்திரிகைகள் தொடர்ந்து இம்போசிஷன் (தண் டனைப் பாடம்) எழுதும் பள்ளி மாணவர்களைப்போல எழுதிக் கொண்டே இருப்பதன் பின்னணி என்ன? ஆனந்த விகடனா? ஆரிய விகடனா? என்ற கேள்வி நடுநிலை சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதை மறுக்க முடியுமா? ஆனந்த விகடனால்! ஆனந்த விகடன் ஒரு சிறிய உதாரணம்தான்! பார்ப்பன ஊட கங்கள் எல்லாவற்றின் நிலைப் பாடும் இதுதான்! க்ஷதுஞ. மற்றும் ஜெயலலிதா தலைமையில் இயங் கும் மனுதர்மக் கூட்டணிக்கும், முத்தமிழ் முதல்வர் கலைஞர் தலைமையில் இயங்கும் மனித தர்மக் கூட்டணிக்கும் இடையில் நடக்கும், இந்தப் போராட்டத்தில் பார்ப்பன பத்திரிகை ஊடகங்கள் மனுதர்மக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. நடுநிலை பத்திரிகைகளுக்கு முழுப்பொறுப்பு அதனுடைய ஆசிரியர்! பார்ப்பனப் பத்திரி கைகளுக்கோ, ஆசிரியர் என்பதே ஆரியர் எனச் சுருங்கி விட்ட நிலைமை! காப்பாற்ற வேண்டிய பத்திரிகையாளர்களாலே சீரழிக்கப்படுகின்ற பத்திரிகை தர்மம்! மனுவாதிகளுக்கும், மனித வாதிகளுக்கும் நடைபெறும் இப்போரில் மனிதமே இறுதியில் வெல்லும்! ஏனெனில் மனித வாதிகள் பக்கம் தந்தை பெரியார் இருக்கிறார்! தந்தை பெரியாரை வெல்லும் சக்தி உலகில் எந்தக் கொம்பனுக்கும் கிடையாது! - ஊமைக்குரல்! |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Monday, December 27, 2010
கற்பனை குற்றச்சாற்று 2ஜி-யும் சீரழிக்கப்படும் பத்திரிகை தர்மமும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment