கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

2011- தேர்தலில் ஆரியம் தோற்கும் - திராவிடமே வெல்லும்! கோவை பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி முழக்கம்!





ஆ. இராசா குற்றமுள்ளவர் என்று எங்கும், எந்த இடத்திலும் ஆதாரமில்லை. இந்தியா முழுவதும் இன்றைக்கு ஒவ்வொருவ ருடைய கையிலும் தொலைப்பேசி இருக்கிற தென்றால், அது இராசா செய்த புரட்சியல்லவா? 2011இல் நடைபெறும் தேர்தலில் திராவிடமே வெல்லும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

கோவை சத்யநாராயணா திருமண அரங்கில் ஆ. இராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? எனும் தலைப்பில் 14.12.2010 செவ்வாயன்று மாலை 6 மணிக்கு மாபெரும் எழுச்சிமிக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தி.க. தலைவர் சிங்கை ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தி.க. செயலாளர் பழ. அன்பரசு அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். கோவை மண்டல தி.க. தலைவர் வசந்தம் கு. இராமச்சந்திரன் மண்டல தி.க. செயலாளர் ஆ. பாண்டியன், கணபதி இராமசாமி, இ. கண்ணன், சுப்புராஜ், ஆடிட்டர் இராஜா, பிரகஸ்பதி ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சு. அறிவுக்கரசு

திராவிடர் கழக பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு தமதுரையில், ஆ. இராசாவின்மீது சில ஊடகங்கள் பொய்யான, கற்பனையான குற்றச்சாற்றுகளை அள்ளி வீசுகின்றன. துளியும் உண்மை இல்லாத செய்திகளை தொடர்ந்து பரப்பி வரும் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கது பார்ப்பன ஊடகங்கள் ஆ. இராசாமீது தொடர்ந்து சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் ஏற்பட்ட பல சம்பவங்களில் அவர்கள் மூக்கறுபட்டு அவமானப்பட்ட நிகழ்ச்சிகள் நாட்டில் பலவுண்டு; ஊழல் செய்தார் ஊழல் செய்தார், என்று தொடர்ந்து எழுதி நாட்டு மக்களை நம்ப வைத்து விடலாம் என்ற நம்பாசையோடு, நாக்கைத் தொங்கப் போட்டு அலைந்து கொண்டி ருக்கிறது. அது நடக்கப் போவதுமில்லை! மக்கள் ஏமாளிகளல்ல - நம்புவதற்கு! எதையும் ஏன்? எதற்கு? என்று கேட்கும் சிந்தனைத் திறன் அனைவருக்கும் வந்த நிலையில், பார்ப்பன ஜம்பம் பலிக்கப் போவதுமில்லை; மக்கள் அதை ஏற்றுக் கொண் டதும் இல்லை; கடந்த 15 நாள்களாக பூதாகரமாக இப்பிரச்சினையை பெரிதுபடுத்தி வெளியிட்டு வரும் பார்ப்பனப் பத்திரிகைகளை தமிழர்களே, வாங்காதீர்! நம்முடைய பணம் அவர்களுக்குப் பயன்பட வேண்டாம். திராவிடர் கழகம் தொடர்ந்து இராசாவை பாதுகாக்கும் என உரை நிகழ்த்தினார்.

சுப. வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் கருஞ்சட்டைத் தமிழர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமதுரையில், உண்மைகள் எப்போதும் கசப்பான வையாகத்தான் இருக்கும். கூட்டுக் குழு விசாரணை வைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவும், அத்வானியும் கோருகின்றனரே! இதற்கு முன்னர் வைத்த திட்டக் குழு விசாரணையில் என்ன விளைவு ஏற்பட்டு விட்டது? அம்மையார் மீது எத்தனை வழக் குகள்? எத்தனை வழக்கில் நீதிமன்றம் வந்தார்? இராசா ஓடி ஒளிந்து கொண்டார் என்று பேசுகிறாரே, அந்த அம்மையார் வழக்குகளைக் கண்டு ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்கி தள்ளிப் போட்டுக் கொண்டி ருக்கிறார். இராசா எப்போதும் எங்க ளோடு இருக்கிறார். தமிழர்களோடு இருக்கிறார். இங்கே கூட பேசி னார்கள். திராவிடர் கழகத்துக்கு இராசாமீது என்ன அக்கறை என்று! இராசா கறுப்பாக இருக்கிறார்! இராசா தமிழனாக இருக்கிறார். அதுதான் அவர்களுக்குப் பிரச்சினை. 1993ஆம் ஆண்டு வரை நமது நாட்டில் கம்பிவட தொலைப்பேசிதான். அதற்குப் பின்னர்தான் படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு ஒவ்வொரு வருடைய பாக்கெட்டிலும் இரண்டு மூன்று என்று செல்பேசிகள். கடை கோடியில் இருக்கும் குப்பனும், சுப்பனும் செல்பேசி வைத்திருக் கிறார்ளென்றால் இது இராசா செய்த புரட்சியல்லவா?

1ஜி -ஸ்பெக்ட்ரம் என்பது காவல் துறை பயன்படுத்தும் வயர்லெஸ் போன்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது சாதாரண மக்கள் இருவருமே கருத்துப் பரிமாற்றங்களை செய்து கொள்ளலாம். இதை இராசா மட்டும் முடிவு செய்யவில்லை! அதற்கென்று அரசு குழு நியமித்திருக்கின்ற - அந்தக் குழுதான் முடிவு செய்து, நாடாளு மன்றத்தில் முதிர்ச்சி அடைந்த அமைச்சர்கள், அனுபவம் மிக்கவர் களால் நடத்தப்படும் குழு முடிவு செய்துதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முடிவுகளை வெளி யிட்ட அவை இன்றைக்கு பரவலாக நாட்டு மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றது. நாம் என்ன கேட்கிறோம்? கூட்டுக் குழு என்று கேட்கிறார்களே! 2001 முதல் விசார ணைக்கு நீங்கள் தயாரா? பதிலே இல்லை! இராசா காலத்தில் மட்டும் தான் விசாரணை நடத்த வேண்டு மாம்! அவர்கள் பயப்படுகிறார்கள், எங்கே நாம் மாட்டிக் கொள்வோம் என்று பயம் வந்து விட்டது. அவர்களுக்கு 2001இல் இருந்து விசாரணை என்று சொன்னாலே அமைதி ஆகி விடுகிறார்கள்! பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன், ஆ. இராசா இவர்கள் அனைவரும் தொலைத் தொடர்பு துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் பா.ஜ.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழலை மறைப்பதற்கு இராசாவை பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்! நாடாளுமன்றம் 23 நாள்களாக செயல்படாமல் முடக்கினார்களே, அதனால் எவ்வளவு கோடி ரூபாய் நட்டம்? ரூ.143 கோடி என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு யார் பொறுப்பு? நாட்டு மக்கள் வரிப் பணமல்லவா! ராசாவை குறி வைத்து நடக்கும் இப்பிரச் சாரத்தை வந்திருக்கும் ஒவ்வொரு வரும் இன்று முதலாவது திண்ணைப் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் வெளிப்படுத்துங்கள், மனுதர்மவாதி கள், இந்து சனாதன எதிரிகளை அம்பலப்படுத்துங்கள் என்று சுப. வீரபாண்டியன் உரை நிகழ்த்தினார்.

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி

தமிழர் தலைவர் உரை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமதுரையில், இராசாமீது நடவடிக்கையா? இராசாவுக்கு என்ன தண்டனை? அரசு வேடிக்கை பார்க் கிறதா? என பல்வேறு தலைப்பிட்டு சில நாளிதழ்கள் பல செய்திகளை எழுதி வருகிறது. கடைசி கருஞ்சட்டை இருக்கும் வரையில், இராசாமீது ஒரு குண்டூசி முனையளவு எதிர்ப்பு வந் தாலும் அதை எதிர் கொள்ளும்! அவரைப் பாதுகாக்கின்ற பணியில் நாங்கள் இருப்போம்! என்ன தவறு செய்து விட்டார் இந்த இராசா? ஏன் இந்த ஆத்திரம்? ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டார் என்ப தாலா? தொலைத் தொடர்பு துறையில் ஒரு மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர் ஆ. இராசா அவர்கள். 10 பைசாவுக்கு இன்றைக்கு நாடு முழுவதும் பேசலாம் என்ற நிலையை உண்டாக்கியவர்.

இந்தியாவில் அனைவர் கையிலும்...

இந்தியாவின் அனைத்துப் பகுதி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வறுமைக்கோட்டுக்கும் கீழ் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கும் செல்பேசி சேவையை கொண்டு சென்று சத்த மில்லாமல் ஒரு சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர் இராசா அவர்கள், உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் கட்டணம் குறைவு! இம்மாற் றத்தை ஏற்படுத்தியவர் இராசா அல்லவா? ஒரு நாட்டின் அடிப் படைக் கட்டமைப்பில் ஒன்றான தொலைத் தொடர்பை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியவர்; 1 ரூபாய்க்கு இருந்ததை 10 பைசாவுக்கு கொண்டு வந்து மவுனப் புரட்சியை செய்தவர்தான் இராசா அவர்கள்!

இராசா தவறு செய்யவில்லை

தணிக்கைத் துறையினர் வெளி யிட்ட 59 பக்க அறிக்கையிலே ஒரு இடத்திலேகூட இராசா தவறு செய் தார் என்ற குற்றச்சாற்று உண்டா? தலித் சமூகத்தில் பிறந்தவர் என்ற காரணத்தினால் அவர்மீது இவ்வளவு கேள்விக் கணைகள்; இதைத் தாங்கு கின்ற சக்தி அவருக்கும் உண்டு! அவரைப் பாதுகாக்கின்ற எங்களுக் கும் உண்டு; நான் குற்றம் செய்ய வில்லை; எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கின் றேன் என்று அறிவித்தாரே! எந்த விளைவையும் துணிச்சலாகச் சந்திக்க தயாராக இருப்பவர்; அவரைப் பாதுகாக்கின்ற பணியில் கருஞ் சட்டை தயாராக இருக்கும்.

இராசா இருந்த காலத்தில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்று சொல்லு கின்றீர்களே. இழப்பு - எப்படி ஊழல் செய்ததாக ஆகும்?

1971ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழக மாநாட்டின் போது நடந்த ஊர்வலத்தில் பார்ப்பன ஜன சங்கத்தினர் தந்தை பெரியார்மீது செருப்பை வீசினர். தோழர்கள், பெரியார்மீது செருப்பு வீச்சா? என ஆத்திரப்பட்டு நமது ஊர்வலத்தில் கொண்டு சென்ற ராமன் படத்தை செருப்பாலடித்தனர். அப்போது 1971இல் நடைபெற்ற தேர்தலில் ராமர் படத்தை செருப்பால் அடித்தவர் களுக்கா உம் ஓட்டு? என நாடு முழு வதும் கோயில் கதவு அளவுக்கு போஸ்டர் அடித்து விளம்பரப்படுத் தினர். தேர்தல் முடிந்தது; வாக்குகள் எண்ணப்பட்டதில், திமுக 183 இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கு முன் 138; ராமன் படத்தை செருப்பா லடித்து நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது திமுக என்பது வரலாறு. 1971 மீண்டும் 2011இல் திரும்பப் போகின்றது. ஆரியமா? திராவிடமா? - வெல்லப் போவது எது? வர இருக்கும் தேர்தல் இதனை தீர்மானிக் கும் என்று தமிழர் தலைவர் அவர்கள் இன்னும் பல்வேறு ஆதாரப்பூர்வ மான தகவல்களுடன் செய்திகளை யும் வெளியிட்டுப் பேசினார். கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட தலைவர் வேலுச்சாமி, ஈரோடு மாவட்ட தலைவர் பிரகசுபதி, கோபி. குமாரராசா, ஈரோடு மண்டல செயலாளர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஆறுமுகம் மாவட்ட செயலாளர்கள் தி.க. செந் தில்நாதன், தாராபுரம் வழக்கறிஞர் சக்திவேல், கோவை மண்டல தி.க. இளைஞரணி செயலாளர் சந்திர சேகரன், ப.க. தலைவர் முனியன், செயலாளர் கவி கிருட்டிணன், கழக சொற்பொழிவாளர் புலியகுளம் வீரமணி, குறிச்சி சிற்றரசு, திருப்பூர் பாலகிருஷ்ணன், பொள்ளாச்சி செழியன், தேக்கம்பட்டி வெள்ளிங் கிரி, சாலைவேம்பு சுப்பய்யன், புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் தி.க. தமிழ் முரசு, மாவட்ட தி.க. அமைப் பாளர் ஆனந்தராசு, பா. இரகுநாத், கு.வெ.கி. செந்தில், புலியகுளம் தருமன், விஜயகுமார், தி.க. இளைஞரணி ஜார்ஜ், திராவிடமணி, மே.ப. ரங்கசாமி, பொன்குமார், ம.ந.க. வீதி சக்தி, கணபதிகண்ணன், கணபதி காமராஜ், திராவிடர் கழக மகளிரணி தோழி யர்கள் ராஜேசுவரி, கலைச்செல்வி, கவிதா, ஜோதி, பெரியார் பிஞ்சு கவுதமன், குறிச்சி சக்தி, திருப்பூர் கருணாகரன், துரைமுருகன், அவினாசி பொன்னுசாமி, அங்கமுத்து, திமுக அவைத் தலைவர் ராமசாமி, வைத்திலிங்கம் மற்றும் தாராபுரம் அரசு வழக்கறிஞர் மாவட்ட திமுக பொருளாளர் செல்வராசு, கோவை மாவட்ட திமுக முன்னாள் மாணவ ரணி அமைப்பாளர் நா. கனகராசு, கவிஞர் வேனில், ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசு, கு.வெ.கி. குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்களும், ஏராள மான பொது மக்களும், மாணவர் களும், திரண்டிருந்து கூட்ட உரையை ரசித்துக் கேட்டனர்.

கூட்டத்திற்குப் பேருதவியாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுயமரியாதைச் சுடரொளி சி.டி. தண்டபாணி அவர்களின் மகன் சிடிடி பாபு அவர்களுக்கு மேடையில் தமிழர் தலைவர் அவர்களால் சிறப்பு செய்யப்பட்டு முத்தாய்ப்பாய் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment